திருநெல்வேலி:கடையம் வட்டாரத்தில் பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை குலைநோய் தாக்காமல் கட்டுப்படுத்தி மகசூல் பெற வேளாண் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார்.
கடையம் வட்டார விவசாயிகள் தற்போது பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் அம்பை -16, கர்நாடக பொன்னி, கோமல், சோமல் போன்ற ரகங்களில் குலைநோய் எளிதில் தாக்கி பெருத்த மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குலை நோய் விதை, காற்று, நீர் மூலம் விரைவில் எளிதாக பரவக்கூடியது. மேகமூட்டம், மழை தூரல், பனி மற்றும் பகல் நேர வெப்பநிலை 30 சதவீதம் குறைவாக காணப்படும் பொழுது இந்நோய் ஓரிரு தினங்களில் பயிர் முழுவதும் பரவிவிடும்.
இந்நோயின் அறிகுறி முதலில் பயிரின் இலைகள் மஞ்சளாக காணப்படும். பின் இலைகளில் வெற்றிலை துப்பியது போல் இலைப்புள்ளிகள் காணப்படும். இப்புள்ளிகள் பெரிதாகி கண் வடிவ தோற்றத்தில் மத்தியில் சாம்பல் நிறத்துடன் இருக்கும். தாக்குதல் அதிகமாகும் பொழுது, புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இலைகள் கருகி பயிர்கள் தீய்ந்து போல் காணப்படும். கதிர் பருவத்தில் கதிரின் அடிப்பாகத்தில் உள்ள கணுவில் இந்நோயின் தாக்குதல் ஏற்பட்டு கதிர் மனைகளுக்கு சத்து செல்லாமல் சாவியாகிவிடும். மகசூல் இழப்பு ஏற்படும்.
இந்நோயினை கட்டுப்படுத்த, நெல் பயிருக்கு எக்காரணத்தை கொண்டும் 1 ஏக்கருக்கு ஒரு தடவை 25 கிலோவிற்கு மேல் யூரியா உரத்தினை இடக்கூடாது. அடி உரமாக 1 ஏக்கருக்கு 17 கிலோ மற்றும் 30ம் நாள் இரண்டாம் மேல் உரமாக 17 கிலோ பொட்டாஷ் உரமிட வேண்டும். நீர் மறைய நீர்கட்டி காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாசனம் செய்ய வேண்டம். வயல் வரப்புகளில் உள்ள களைகளை அகற்றி வரப்புகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
குலை நோய் தாக்குதல் தென்பட்டால் 1 ஏக்கருக்கு 120 கிராம் ட்ரைசைகுளோசோல் மருந்துடன் 500 கிராம் சிங்சல்பேட் 100 மி.லி. ஒட்டும் திரவம் சேர்த்து விசைத்தெளிப்பான் மூலம் 9 டேங்க் மற்றும் கைத்தெளிப்பானால் 15 டேங்க் (200 லிட்டர் நீரில்) மூலம் வயலில் நீரை வடித்து விட்டு தெளிக்க வேண்டும்.
இவ்வாறு கடையம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.