திருநெல்வேலி:தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர பழனியப்பன் நெல்லைக்கு இன்று (10ம் தேதி) வருகிறார்.
மதுரையில் இன்று (10ம் தேதி) மதியம் 12.30 மணிக்கு ராஜா முத்தையா மன்றத்தில் அன்னை தெரசா பல்கலைக் கழக 21வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில் தமிழக கவர்னர் ரோசையா பங்கேற்று பல்கலை., மாணவிகளுக்கு பட்டங்களையும், சான்றிதழ்களையும் வழங்குகிறார். உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து இன்று இரவில் வண்ணார்பேட்டை சுற்றுலா விருந்தினர் மாளிகையில் உயர் கல்வித் துறை அமைச்சர் தங்குகிறார். நாளை (11ம் தேதி) காலை 11 மணிக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடக்கிறது.
இதில் தமிழக கவர்னர் ரோசையா பங்கேற்று பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார். இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பங்கேற்று பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.