Advertisement
55 சதவீதம் இருசக்கர வாகன விபத்துக்களே :டி.ஐ.ஜி., ராமசுப்பிரமணியன் பேச்சு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2013,04:46 IST

காரைக்குடி : மொத்த விபத்துக்களில் 55 சதவீதம், இரு சக்கர வாகன விபத்துக்களே,என டி.ஐ.ஜி., ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி,அவர் பேசியதாவது: அட்வைஸ் பண்ணுவது யாருக்கும் பிடிப்பதில்லை. ஹெல்மெட் அணிவதால், விபத்தில் சிக்குவோர் உயிரோடு இருக்கலாம். வெளிநாடுகளில், சாலை விதிகளை இரண்டு, மூன்று முறைக்கு மேல் மீறினால், லைசென்ஸ் கேன்சல் ஆகிவிடும். அதை பெற 3 ஆண்டு ஆகிவிடும். பொதுமக்களின் நலன் கருதி, இங்கு அதை நாம் செய்வதில்லை.
தற்போது காரைக்குடியில், அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம், ஒரு மாதத்துக்குரிய நிகழ்வுகள் பதிவு செய்யப்படும். இதன் மூலம், சாலை விதிகளை மீறுவோர், திருடர்களை கண்காணிக்க முடியும். விரைவில், ராமேஸ்வரம், பிள்ளையார்பட்டி, ஏர்வாடி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படும். கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துக்களில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 273 பேரும், சிவகங்கை மாவட்டத்தில் 274 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் டூவீலரில் சென்று ஏற்பட்ட விபத்துக்கள் 55 சதவீதம்.
இருக்கின்ற போலீசார் திறமையாக பணியாற்றினால், போலீசார் பற்றாக்குறை என்ற நிலை வராது. கடை திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது குற்றங்கள் நடக்காமல் தடுத்துள்ளோம். செட்டிநாடு போலீஸ் ஸ்டேஷன் 55 லட்சம் செலவில் புதிதாக கட்டப்படும். திருப்பத்தூர் போலீஸ் ஸ்டேஷன் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
நிகழ்ச்சியில், எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி., மங்களேஸ்வரன், சோழன் பழனிச்சாமி எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் கற்பகம் உட்பட பலர் பங்கேற்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.