இளையான்குடி : இளையான்குடியில் இரண்டு நாட்களாக பெய்த மழையால்,6 ஆயிரம் ஏக்கரில் வாடிய மிளகாய் செடி பிழைத்தது.
இளையான்குடி
தாலுகாவில் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள்
கருகியது. கண்ணமங்கலம், முனைவென்றி , சாலைக்கிராமம், சூராணம் , வடக்கு
அன்டக்குடி உட்பட தாலுகா முழுவதும் 6 ஆயிரம் ஏக்கரில் மிளகாய்
பயிரிடப்பட்டுள்ளது.
மழை பெய்யாததால் காய் காய்த்த நிலையில் மிளகாய்
செடிகள் வாட துவங்கியது. மிளகாய்க்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை
செலவு செய்த விவசாயிகள் கவலைப்பட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக
இப்பகுதியில் லேசான மழை பெய்துள்ளது. இதனால் வாடிய மிளகாய் செடிகள்
காப்பாற்றப்பட்டுள்ளது.
விவசாயி தங்கராசு கூறுகையில் ,"" அடுத்த மாதம் பழம் எடுக்க உள்ள நிலையில் வாடிய செடிகளை , தற்போது பெய்த மழை காப்பாற்றியுள்ளது '' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.