ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சில நாட்களாக பெய்துவரும் சாரல் மழையால், மிளகாய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் நெல்களஞ்சியமான திருவாடாணை தாலுகாவில், நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆர்.எஸ்.மங்கலம், செங்குடி, வண்டல், சேத்திடல், சீனாங்குடி, சனவேலி, உப்பூர் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் 2,680 ஏக்கரில், கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் மிளகாய் விதைப்பு செய்யப்பட்டது.
காய் காய்க்கும் பருவத்தை எட்டிவிட்ட நிலையில் மழையின்றி வறட்சி நிலவியது. திருவாடானை தாலுகா மட்டுமின்றி, மாவட்டத்தில் ஆறு தாலுகா விவசாயிகளும், நெல் பயிர்போல் மிளகாய் செடிகளும் கருகி மகசூல் இழப்பு ஏற்படும் என்று கவலையடைந்தனர். இதை போக்கும் வகையில் சில நாட்களாக பெய்துவரும் சாரல் மழை, மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் விவசாயி பாண்டி, முருகன் கூறியதாவது: மிளகாய் காய்க்க துவங்கிவிட்ட நிலையில் கன மழை பெய்தால் தண்ணீர் தேங்கி செடிகள் அசைவு ஏற்பட்டு சோர்ந்துவிடும். அதிகம் தண்ணீர் தேவையில்லாத தோட்டக்கலை பயிர் என்பதால் இந்த சாரல் மழை, மிளகாய் செடிகளுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. குளிர்ந்த சீதோஷ்ணமும் மிகவும் ஏற்பதாக உள்ளதால் மிளகாய் காய்க்க துவங்கியுள்ளன, என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.