சிவகங்கை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை வாரச்சந்தையில் காய்கறிகள் மலிவான விலைக்கு விற்றன.
சிவகங்கை வாரச்சந்தைக்கு தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும், ஊட்டி , கொடைக்கானலில் இருந்தும் மலைக்காய்கறிகள் வரத்துள்ளன.
ஜன.,14 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று "பொங்கலுக்கான சந்தையாக இருந்ததால், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
காய்கறி விலையும் மலிவாக இருந்ததால், மக்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.
விலை (ஒரு கிலோ ரூ.): சின்ன வெங்காயம் - 30,பெரிய வெங்காயம் - 20, வெண்டை- 20, கத்தரி- 20, தக்காளி- 15,பீன்ஸ்- 60, அவரை -20, கேரட் - 20, உருளை - 30, கருணை - 20, பீட்ரூட் - 20.
சவ்சவ் - 10, முள்ளங்கி - 20, பச்சை பட்டாணி - 40, பாகற்காய் - 20, சோயா பீன்ஸ் - 80, ஜெர்மன் பீன்ஸ் - 40, மொச்சை - 40,முட்டை கோஸ் - 15க்கு விற்றன.