அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையை சேர்ந்த மாணவி, காய்ச்சலுக்கு பலியானார்.
அருப்புக்கோட்டை
காமராஜர் நகரை சேர்ந்த முருகன் மகள் சங்கரேஸ்வரி,11.அஜிஸ் நகரில் உள்ள
நகராட்சி நடுநிலை பள்ளியில். 6 ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த
சில நாட்களுக்கு முன், விஷ காய்ச்சல் ஏற்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில்
சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில்
சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு
இறந்தார்.
மாணவியின் சித்தப்பா ராஜபாண்டி, ""காய்ச்சல் காரணமாக, அருப்புக்கோட்டை அரசு
ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். டாக்டர்கள் சிகிச்சை பற்றி ஒன்றும்
சொல்லவில்லை. 2 நாட்களுக்கு பின், மதுரை ஆஸ்பத்திரி கொண்டு செல்லும்படி
கூறினர்.
அங்கு, சிறுமியை
பரிசோதனை செய்ததில் "ஆபத்தான நிலையில்
இருப்பதாக கூறினர். பின் அதிகாலையில் இறந்து விட்டதாக கூறினர். டாக்டரிடம்
கேட்டபோது, மூளைக் காய்ச்சல் என்றனர்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.