ராஜபாளையம் : அரசு
ஒதுக்கிய நிதி, அதற்கான பணிகளை தெரிவித்துவிட்டு, கவுன்சில் கூட்டத்தை
நடத்தகோரி, ராஜபாளையம் ஒன்றிய கூட்டத்தில் வலியுறுத்த,வாக்குவாதம்
ஏற்பட்டது.இதை தொடர்ந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 8 பேர் வெளிநடப்பு
செய்தனர்.
ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் பொன்னுத்தாய் தலைமையில்,
நேற்று காலை 11.10 மணிக்கு துவங்கியது. ஒன்றிய மேலாளர்கள் சுந்தரம்,
மீனாட்சி முன்னிலை வகித்தனர்.
அஜென்டாவில் முதல்பொருள் வாசிக்க
துவங்கியவுடன், அரசு ஒதுக்கிய நிதி, அதற்கான பணிகளை தெரிவித்துவிட்டு,
கூட்டத்தை நடத்துமாறு ,அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பெரியாண்டவர்,
ஆறுமுகசாமி, பெரியசாமி வலியுறுத்தினர். ""கூட்ட முடிவில், தெரிவிப்பதாக,''
தலைவர் கூறினார். இதற்கிடையே, கவுன்சிலர் குருசாமி, சமரசம் பேசியபோது,
வாக்குவாதம் ஏற்பட்டது.
கூட்ட முடிவில், தெரிவிப்பதாக மேலாளர் சுந்தரம்
கூறியபோது, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கவுன்சிலர்கள் பெரியாண்டவர்,
பெரியசாமி, ஆறுமுகசாமி, பொன்னுலட்சுமி, தவம் பெற்றாள், உமா மகேஸ்வரி,
முருகேஸ்வரி வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து, 11.25 மணிக்கு கூட்டமும்
முடிந்தது.
தலைவர் பொன்னுத்தாய் கூறியதாவது: பாரபட்சமில்லாமல், முக்கிய
பணிகள் நடக்கின்றன. கடந்த ஆண்டில் 1.50 கோடியில் வார்டுகளில் பணிகள்
நடந்து உள்ளன.
இதில், உமா மகேஸ்வரி வார்டில் 9 லட்சத்து 76 ஆயிரம்
ரூபாய், பெரியாண்டவர் வார்டில் 5 லட்சம், ஆறுமுகசாமி வார்டில் 9 லட்சம்,
பொன்னுலட்சுமி வார்டில் 5 லட்சம், தவம் பெற்றாள் வார்டில் 10 லட்சத்து 22
ஆயிரத்திற்கான பணிகள் நடந்து உள்ளன. மற்றவர்கள் வார்டிலும் இதுபோல நடந்து
உள்ளன,'' என்றார்.
கவுன்சிலர்பெரியசாமி, ""வார்டின் முக்கிய பணிகள் நடக்கவில்லை. வார்டுகளில் கவுன்சிலர்கள் பல பிரச்னைகளை சந்திக்கிறோம்.
பசுமை வீடு, இந்திரா குடியிருப்பு திட்டங்கள் முறையாக நடக்கவில்லை,'' என்றார்.
பெரியாண்டவர்,
""முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில், ராஜபாளையம்
ஒன்றியத்தில் செயல்படுகின்றனர். நிதி ஒதுக்கீடு, அடிப்படை வசதி பணிகளுக்காக
கூட்டத்தில் பேசியும் பயனில்லை.
இதை கண்டித்து வெளியேறினோம்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.