காரியாபட்டி : விருதுநகர்
மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிற்கு சூட்டப்பட்ட,
முன்னாள் தி.மு.க., அமைச்சர் தங்கப்பாண்டியன் பெயரை அகற்றி, முன்னாள்
முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு அரங்கமாக ,பெயர் மாற்றம் செய்து, ஒன்றிய
கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்திற்கு,இரு ஆண்டுக்கு முன், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்
செலவில், புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இதில் உள்ள கவுன்சிலர் கூட்ட அரங்கிற்கு, முன்னாள் தி.மு.க., அமைச்சர் தங்கப்பாண்டியன்
(முன்னாள் தி.மு.க., அமைச்சர்
தங்கம் தென்னரசு தந்தை) பெயர் சூட்டப்பட்டது.
அ.தி.மு.க.,
அரசு பொறுப்பேற்றதும், உள்ளாட்சித் தேர்தலில், காரியாபட்டி ஒன்றியத்தில்,
அ.தி.மு.க., அதிக இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில்,முன்னாள் அமைச்சர்
தங்கப்பாண்டியன் பெயரை அகற்ற, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வலியுறுத்தி
வந்தனர்.
கடந்த கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்னையை எழுப்ப, தி.மு.க.,
கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தகராறு முற்றி,
அடிதடியானது.இதனிடையே, ""அடுத்த கூட்டத்தில், தீர்மானம் கொண்டுவர,
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஒன்றிய தலைவர்
முத்துலெட்சுமி தெரிவித்தார்.
இதையடுத்து,
தி.மு.க.,கவுன்சிலர் காளிமுத்து,""தங்கப்பாண்டியன் பெயரை அகற்ற, தடை
விதிக்க வேண்டும்,'' என, அருப்புக்கோட்டை சப் கோர்ட்டில் மனு செய்தார்.
இதில் எங்களையும் விசாரிக்க வேண்டும் என, அ.தி.மு.க., கவுன்சிலர் முருகன்,
மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதி தட்சிணாமூர்த்தி, ""மெஜாரிட்டி'
கவுன்சிலர்கள் தீர்மானம்தான் இறுதியானது.கோர்ட் தடை விதிக்க முடியாது,'' என
கூறி, தி.மு.க., கவுன்சிலர் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதை தொடர்ந்து
நேற்று, ஒன்றிய கவுன்சில் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தலைவர் தனலெட்சுமி தலைமை வகித்தார். அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் மட்டும்
கலந்து கொண்டனர்.
தி.மு.க., கவுன்சிலர்கள் 3 பேரும் வரவில்லை. முன்னாள்
அமைச்சர் தங்கப்பாண்டியன் பெயரை அகற்றிவிட்டு, ஏற்கனவே இருந்தது போல்,
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு அரங்கம் என பெயரிட, ஒருமனதாக
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, ஒன்றிய
அலுவலகத்தில் போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.