விருதுநகர் : விருதுநகரில்
நடந்த விழாவில், அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், ராஜேந்திரபாலாஜி ஆகியோர்
,ஐ.டி.ஐ., மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச சைக்கிள்களை வழங்கினர்.
விருதுநகர்
அரசினர் ஐ.டி.ஐ., யில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஹரிஹரன் தலைமை
வகித்தார். அரசு கொறடா வைகைச்செல்வன் முன்னிலை வகித்தார். மண்டல இணை
இயக்குனர் டி.ராஜசேகர் வரவேற்றார்.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 334 மாணவர்களுக்கு, மாதம் 500 வீதம் கல்வி உதவித்தொகையாக 20.04 லட்சம் வழங்கினார்.
தொழிலாளர்
நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் 233 மாணவர்களுக்கு 7.25 லட்சம் ரூபாய்
மதிப்பிலான இலவச சைக்கிள்கள் வழங்கினார். அமைப்பு சாரா தொழிலாளர் நல
வாரியத்தில் கட்டுமான தொழிலாளர்கள் உட்பட 383 பேருக்கு, 8 லட்சம்
மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மாவட்ட திட்டகுழு
தலைவர், வசந்தா, துணைத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர்கள்
யோகவாசுதேவன் (அருப்புக்கோட்டை) கலாநிதி (விருதுநகர்) துணைத்தலைவர்கள்
கெப்பையாராஜ், மூக்கையா, சூலக்கரை ஊராட்சித்தலைவர் முத்துராமலிங்கம் கலந்து
கொண்டனர்.
ஐ.டி.ஐ., முதல்வர் மணிமாறன் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.