தாண்டிக்குடி : காபி தோல் கழிவு கலந்த அசுத்தமான குடிநீரால் கானல்காட்டில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காமனூர் ஊராட்சிக்குட்பட்ட கானல்காட்டில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் ஆதரமாக கருவரை ஆறு உள்ளது. ஆற்றை மறித்து "செக்டேம்' கட்டப்பட்டு, இரண்டு தரைமட்ட தொட்டிகளில் தேக்கி ஈர்ப்பு விசை மூலம் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கருவரை ஆற்றோரங்களில் காபி தோல் கழிவுகள் ஆற்றில் விடப்படுவதால் தண்ணீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது.
காபி சீசன் துவங்கினால் இப்பிரச்னை ஒவ்வொரு ஆண்டும் உருவாகிறது. இதுகுறித்து கிராமமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
மாற்று குடிநீரான கீழாத்து கிணற்று குடிநீரை வினியோகம் செய்யவும் ஊராட்சி நிர்வாகம் முன்வரவில்லை என்ற குற்றசாட்டு உள்ளது.
கானல்காட்டை சேர்ந்த சக்திகணேசன் கூறியதாவது:
குடிநீரில் காபி தோல் கழிவுகள் வருகின்றன. துர்நாற்றம் வீசுகிறது. குடிநீரை காய்ச்சி குடிக்கும் நிலையில் நுரையாக வருகிறது. கடந்தாண்டு இத்தகைய நிலையால் கிராமத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர்.
காபி சீசன் துவங்கினால் இந்தநிலை ஏற்படுகிறது. காபி தோல் கழிவுகளை ஆற்றில் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.