ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் மழை நீர் வெளியேற வழியில்லாமல், ரோட்டுப் பகுதியிலேயே தேங்குவதால் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது.
ஒட்டன்சத்திரம்-பழநி
ரோடு மற்றும் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட்டில் மழை நீர் வெளியேற
வழியில்லாமல் தடைபட்டுள்ளது. இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர்
வாய்க்கால் ரோட்டுப் பகுதியை விட சற்று உயரமாக உள்ளது. மழைநீர் வெளியேற
வழியில்லாமல் பல இடங்களில் அடைக்கப்பட்டுள்ளது. ரோட்டிலேயே நீர்
தேங்குவதால் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. குறிப்பாக
தாராபுரம் ரோட்டில் மார்க்கெட் பைபாஸ் ரோடு பிரியும் இடத்திலிருந்து
சத்யாநகர் வரை ரோட்டுப்பகுதியிலேயே மழைநீர் தேங்குகிறது.
இதேபோல்
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் எதிரிலும் மழைநீர் ரோட்டிலே தேங்குகிறது.
இத்துடன் கழிவுநீர் கால்வாய் முழுவதிலும் பாலிதீன் பைகள், குப்பைகள்
கொட்டப்பட்டு கழிவுநீர் வாய்க்காலில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, ரோட்டுப்
பகுதியில் வழிந்தோடுகிறது.
இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து
செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. வாகனப்போக்குவரத்து நிறைந்த இந்த இடங்களின்
மழைநீர் தேங்குவதால் இப்பகுதியில் வாகனங்களை இயக்கவும் சிரமமாக உள்ளது.
நகராட்சி நிர்வாகம் மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.