நத்தம் :
திண்டுக்கலிலிருந்து மணக்காட்டூர் வழியாக செந்துறைக்கு இரவு நேரங் களில் பஸ் வசதியில்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
நத்தம்
ஒன்றியத்தில் உள்ளது செந்துறை. இதனைச் சுற்றி பிள்ளையார்நத்தம், சேத்தூர்,
குடகிப்பட்டி, சிரங்காட்டுப்பட்டி, கோசு குறிச்சி, கோட்டையூர் உட்பட
ஏராளமான கிராமங் கள் உள்ளன.
இங்குள்ள
பொதுமக்கள்,விவசாயிகள்,வர்த்தகர்கள், மாணவர்கள் மதுரை,நத்தம், திண்டுக்கல்,
துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு அலுவல் நிமித்தம், விவசாய விளை
பொருட்களையும், பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர்.
திண்டுக்கல்லிலிருந்து மணக்காட்டூர் வழியாக செந்துறைக்கு இரவு 8 மணியோடு பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
செந்துறை,
மணக்காட்டூர், பிள்ளையார்நத்தம், கோசுகுறிச்சி, சிரங்காட்டுப் பட் டி,
கோட்டையூர் ஆகிய பகுதி மக்கள் இரவு நேரத்தில் திண்டுக்கல்லி லிருந்து
மணக்காட்டூர் வழியாக 7.30 மணிக்கு வரக்கூடிய பஸ்சில்தான் முட்டிமோதி
பயணிக்க வேண்டியுள்ளது.
இளைஞர்கள் பஸ்மேல்புறங்களில் பயணம் செய்கின்றனர்.
பஸ் ஏற முடியாதவர்கள் திண்டுக்கல்லில் இரவு நேரங்களில் தங்கி விடுகின்றனர்.
இந்த
நிலைமை பல ஆண்டுகளாக உள்ளது. இரவு நேரத்தில் பஸ்வசதி இல்லாததால், இப்பகுதி
மக்கள் நோய்வாய்ப்படுதல், விபத்து உட்பட அவசரகாலங்களில் திண்டுக்கல்லுக்கு
வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து செந்துறைக்கு இரவு 10 மணிவரையிலாவது பஸ்வசதி செய்து தர முன்வர வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.