வடமதுரை : வடமதுரை ஒன்றியத்தில் ஊராட்சி அலுவலங்களில் ஆப்பரேட்டர்கள் இல்லாததால் கம்ப்யூட்டர்கள் பயனற்ற நிலையில் உள்ளன. ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் 2006 ல் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டது. ஊராட்சிகளின் கணக்கு, பிறப்பு- இறப்பு பதிவு உள்பட பல தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. இன்டர்நெட் மூலம் மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அலுவலங்களுடன் தொடர்பு கொள்ள வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இவற்றை இயக்க ஆபரேட்டர்கள் ஊரக வளர்ச்சி முகமை மூலம் தேர்வு செய்யப்பட்டு, பணியில் இருந்தனர். திடீரென இவர்கள் அனைவரும் ஆபரேட்டர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதற்கடுத்து ஊராட்சி உதவியாளர்களே கம்ப்யூட்டர்களை இயக்க திட்டமிடப்பட்டு அவர்களுக்கு சில நாட்கள் பயிற்சி தரப்பட்டது. சில பயிற்சி மட்டுமே கம்ப்யூட்டர் இயக்க போதுமானதாக இல்லாததாலும், தற்போது ஊராட்சி உதவியாளர்களுக்கு இருக்கும் பணி சுமையில், கம்ப்யூட்டரை இயக்கி சரளமாக பயன்படுத்த முடியவில்லை. இதனால் பெரும்பாலான ஊராட்சிகளில் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. பகுதி நேர ஊழியர்களையாவது நியமித்து, ஊராட்சிகளில் உள்ள கம்ப்யூட்டர்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.