Advertisement
மணக்காட்டூர் ரேஷன் கடையில் நெரிசலை தவிர்க்க இரண்டாக பிரிக்க கோரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

நத்தம் : நத்தம் மணக்காட்டூரில் இயங்கும் ரேஷன் கடையில் அடிக்கடி கூட்ட நெரிசல் ஏற்படுவதால், கடையை இரண்டாக பிரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நத்தம் குடகிப்பட்டி ஊராட்சியில் மணக்காட்டூர், மேற்கிப்பட்டி, தொண்டபுரி, அடைக்கனூர், மேகாடு, புங்கன்குளம், ஒத்தவீடு, குப்பிலிபட்டி, பழனிப்பட்டி, கோடாங்கி குட்டு, தெற்குகளம், அய்யனார் அருவி, புதுக்குள், கே.புதூர், மணப்புளிக்காடு, இந்திரா நகர், எம்.ஜி.ஆர்., நகர், கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
இவர்களில் ஆயிரத்தி 300 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க மணக்காட்டூர் தொடக்க கூட்டுறவு விவசாய சங்கம் சார்பாக இரண்டு ரேஷன் கடைகள் மட்டு மே உள்ளன. ஒருகடை குடகிப்பட்டியிலும், மற்றொன்று மணக் காட்டூ ரிலும் இயங்குகின்றன.
மணக்காட்டூர் ரேஷன் கடைக்கு ஆயிரம் கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குகின்றனர். இங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு, ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்வதும், அடிக்கடி தள்ளு முள்ளும், தகராறும் நடக்கிறது.
சில நேரங்களில் விற்பனையாளர் கடையை மூடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் தூரப்பகுதி கிராம மக்கள், இங்கு வந்து ரேஷன் வாங்க வருவதால் அவர்களது அன்றாட பணிகள் பாதிக்கின்றன.
இப்பிரச்னைகளை தீர்க்க, இந்த ரேஷன் கடையை இரண்டாக பிரித்து பழனிப்பட்டி அல்லது குப்பிலிபட்டியிலோ ஒரு பகுதி நேர கடை ஏற்படுத்த மாவவட்ட கூட்டுறவுத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.