வடமதுரை : திண்டுக்கல்-
திருச்சி நான்கு வழிச்சாலை பணிக்கு முன்னர், டவுன் பஸ்கள் நின்று செல்லும்
பெரும்பாலான இடங்களில் நிழற்கூடங்கள் இருந்தன.நான்கு வழிச்சாலை பணியில்
அவை இடிக்கப்பட்டு, தற்போது, பல கி.மீ., தூர இடைவெளியில், வெகு சில
இடங்களில் மட்டும், பயணியர் நிழற்கூடங்கள் உள்ளன. திண்டுக்கல் மாவட்ட
எல்லைக்குள் தங்கம்மாபட்டி, அய்யலூர், கொல்லப்பட்டி, ஆண்டிமாநகர்,
பாரைப்பட்டி பிரிவு, தாமரைப்பாடி, முள்ளிப்பாடி, மா.மூ.கோவிலூர் பிரிவு
ஆகிய 8 இடங்களில் மட்டுமே நிழற்கூடங்கள் உள்ளன. நிழற்கூடம் இல்லாமல் 15
டவுன் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இங்கெல்லாம் பயணிகள் வெயில், மழைக்கு
ஒதுங்கி நிற்க எந்த வசதியும் இல்லை.
இவ்விடங்களில் எல்லாம் பஸ்கள்
ஒதுங்கி நின்று செல்ல ரோடு அகலம் ஏதுமில்லை. நான்கு வழிச்சாலையிலேயே டவுன்
பஸ்கள் நின்று, புறப்படுவதால், பின்னால் வரும் வாகனங்களால் விபத்து
அபாயமும் உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.