தேனி : வேøவாய்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்குவதற்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2012 டிச., வரை குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு உதவி தொகை வழங்கப்பட உள் ளது. இதன்படி, காலாண்டு ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி, கல்வி தகுதியை பதிவு செய்தவர்களுக்கு 300 ரூபாயும்,தேர்ச்சி பெற்றவர்களுக்கு 450 , பிளஸ் 2 முடித்தவர்களுக்கு 600, பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு 900 ரூபாய் தொடர்ந்து 3 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.
சலுகை: மாற்றுத்திறனாளி மனுதாரர் என்றால் பதிவு செய்து குறைந்த பட்சம் ஒரு வருடம் நிறைவு செய்தாலே போதுமானது. இவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு காலாண்டு ஒன்றுக்கு 900 ரூபாயும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1125 ரூபாயும், பட்டதாரிக்கு 1350 ரூபாயும், பத்து வருடங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும். என்ஜினியரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. ஆதிதிராவிடர் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், மற்ற பிரிவினர் 40 வயதிற்குள்ளும், ஆண்டு வருமானம் 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உதவி தொகை பெற விரும்புவோர் வேலை வாய்ப்பு பதிவு அட்டையுடன், உரிய கல்வி சான்றுகளுடன், அலுவலக வேலை நாட்களில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம், என மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.