கம்பம் : நிலத்திற்கு, அரசின் வழி காட்டி மதிப்பீட்டை, மீண்டும் உயர்த்த இருப்பதால், இது குறித்து சர்வே எடுத்து, அறிக்கை தருமாறு, சார் பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த ஆண்டு ஏப்ரலில், நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பீட்டை (கைடு லைன் வேல்யூ) உயர்த்தியது. மார்க்கெட் விலையை காட்டிலும், அரசு மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. இதனால் நிலம் விற்பது, வாங்குவது குறைந்தது. பத்திர பதிவு அலுவலங்களில், 50 சதவீதத்திற்கும் மேலாக பதிவுகள் குறைந்தது.
நிலங்கள் குடியிருப்பு, வணிகம், விரிவாக்கம் என பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், "விரிவாக்க' பகுதி, நிலத்தின் மதிப்பை மீண்டும் அதிகப்படுத்த, பத்திரப்பதிவு துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஊர்களில், விரிவாக்க பகுதிகளின் அளவு, தற்போது அரசு மதிப்பு, மார்க்கெட் மதிப்பு, எவ்வளவு அதிகரிக்கலாம் உள்ளிட்ட விபரங்கள் மற்றும் சார் பதிவாளர்களின் பரிந்துரைகளை வழங்க, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.