கம்பம் : வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சி செய்த இலங்கை அகதிகளுக்கு ஏஜன்டாக
செயல்பட்ட இரண்டு அகதிகளை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கை
அகதிகள் திருச்சி, ராமேஸ்வரம், மண்டபம், மதுரை உள்ளிட்ட பல ஊர்களில்
உள்ளனர். இந்த முகாம்களில் இருந்து, 51 பேர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல
கேரளா தேக்கடி சென்றனர். அங்கு, ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தவர்களை, கேரளா
போலீஸ் உதவியுடன், தேனி மாவட்ட கியூ பிரிவு போலீசார் பிடித்தனர்.
கம்பத்தில்
விசாரணை மேற்கொண்டதில், வெளிநாட்டிற்கு தப்பி செல்ல ஆசை ஏற்படுத்தி,
ஒவ்வொருவரிடமும் ஒரு லட்சம் ரூபாய் வாங்கியதாக திருச்சி முகாமை சேர்ந்த
அருள்சீலன், 40, மதுரை முகாமை சேர்ந்த உமா ரமணன், 42, இருவரை கியூ பிரிவு
போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம், நடத்திய விசாரணையில்,
விழுப்புரத்தை சேர்ந்த பாபு என்பவரிடம் இதற்கான ஏற்பாடுகளை செய்து தர
கூறியதாகவும், ஐயா என்ற ஏஜன்ட் ஒருவரின் உதவியோடு தப்பிச் செல்ல முயற்சி
செய்ததாகவும் ஒப்புக் கொண்டனர்.
முகாமிற்கு 15 பேர் சென்றனர்: பிடிபட்ட
51 பேர்களில் விசாரணை முடிந்த 15 பேரை, திருச்சி கரு மண்டபத்தில் உள்ள
அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களுக்கு அந்தந்த
முகாம் பொறுப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு,ஒப்படைக்கப்படுவர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.