தேனி : தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை கொண்டு செல்ல கேரள அர” தடை விதித்துள்ளது.
தமிழகத்தில்
இருந்து தேனி மாவட்டம் வழியாக தினமும் மாடுகள் இறைச்சிக்காக கேரளா கொண்டு
செல்லப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், தேனி மாவட்டம்
கோகிலாபுரத்தை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு சொந்தமான 10 மாடுகள் திடீரென
பலியாகின. ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியில், அழகுமலை என்பவருக்கு சொந்தமான
இரண்டு மாடுகளும், ஆடுகளும் பலியாகின. கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய்
தாக்குதலாக இருக்கலாம் என கால்நடை துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கால்நடைத்துறையினர்.
கோகிலாபுரத்தை சுற்றிலும் உள்ள 7 கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு
ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போட்டு வருகின்றனர். எளிதில் பரவும் தொற்றுநோய்
என்பதால், தமிழகத்தில் இருந்து ஆடு,மாடுகளை கேரளாவிற்கு கொண்டு வர இடுக்கி
மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சோதனை சாவடிகளை கடந்து மாடுகள், ஆடுகள் கேரளாவிற்கு செல்ல நேற்று அனுமதிக்கப்படவில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.