போடி : போடி அருகே அணைக்கரைப்பட்டியில் ரேஷன் கார்டு உள்தாள் வழங்குவதற்கு பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தது குறித்து தினமலர்
நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
போடி
அருகே அணைக்கரைப்பட்டியில் ரேஷன் கார்டுக்கு, உள்தாள் வழங்குவதற்கு 20
ரூபாய் வசூல் செய்யப்பட்டது.காரணம் கேட்ட பொதுமக்களிடம், பல்வேறு செலவுகள்
உள்ளது என கூறினர்.
இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரேஷன் கார்டுக்கான உள்தாள்
வழங்குவதற்கு பணம் கொடுக்க வேண்டாம் என கூறி ஊர் முழுவதும் தண்டோரா மூலம்
தெரிவித்தது. இது தெரிந்தும் கண்டு கொள்ளாத நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள்
பொதுமக்களிடமிருந்து 20 ரூபாய் வசூல் செய்ததால் பொதுமக்கள் அதிருப்தி
அடைந்தனர்.
இது குறித்து "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
செய்தியின்
எதிரொலியாக நேற்று துறை சம்பந்தமான சிறப்பு அதிகாரிகள் பொதுமக்களிடமும்,
ரேஷன் கடை பணியாளர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில்,
தொடர்புடைய பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.