போடி : தேனி மாவட்டத்தில் அயிரை மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஏலக்காய்க்கு இணையாக, கிலோ 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கேரளா
மற்றும் தமிழக பகுதியில், மழை இல்லாததால் ஆற்றுப்பகுதியில் நீர் வரத்து
குறைந்துள்ளது. சில பகுதியில், நீர்வரத்தே இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில்
ஆற்றுப்பகுதியில், மீன்கள் வரத்து குறைந்துள்ளது.
இதில் அயிரை மீன்கள்
கிடைப்பது அரிதாக உள்ளது. அவற்றை பிடிப்பதிலும் சிரமம் உள்ளது. பல மணி
நேரம் முயற்சித்து குறைந்தளவு மீன்களையே பிடிக்க முடி கிறது.
வரத்து
குறைவால் கிலோ 500 க்கு விற்பனை செய்யப்பட்ட அயிரை மீன்கள், தற்போது 750
முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பனியின் தாக்கம்
அதிகரித்துள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி,காய்ச்சலால்
பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண அயிரை மீன்கள், சிறந்த
மருந்து.
இதனால், அயிரை மீன் விலை அதிகரித்தும், மார்க்கெட்டில்
கிடைக்காத நிலையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஏலக்காய் வரத்து தற்போது
குறைந்த நிலையில் ஏலக்காய் கிலோ 750 முதல் 800 ரூபாய் வரை, விற்பனை
செய்யப்படும் நிலையில், இதற்கு இணையாக அயிரை மீன்களும் தற்போது விற்பனை
செய்யப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.