ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி
சக்கம்பட்டி அருகே மூன்று மாடுகள், இரண்டு ஆடுகள் நோய் தாக்கி பலியாகின.
ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலாக இருக்கலாம் என கால்நடைதுறையினர்
சந்தேகிக்கின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோகிலாபுத்தில்
கடந்த 6 ம் தேதி சசிகுமார் என்பவருக்கு சொந்தமான 10 மாடுகள் திடீரென
மயங்கி விழுந்து பலியாகின.
இந்த நிலையில் ஆண்டிபட்டி சக்கம்பட்டி காலனி
பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட பால் மாடுகள், ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
நேற்று அழகுமலை என்பவர் தனது வீட்டில் வளர்த்த இரண்டு பசு மாடுகளுக்கு
அதிகாலையில் தண்ணீர் விட்டு பால் எடுத்துள் ளார்.
காலை 6
மணிக்கு மீண்டும், தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இரண்டு மாடுகளும்
அடுத்தடுத்து சுருண்டு விழுந்தது. சில நிமிடங்களில், துடிதுடித்த நிலையில்
இரண்டு மாடுகளும் பலியாகிவிட்டது. அப்போது இறந்த மாட்டை முகர்ந்து பார்த்த
ஆடுகள் இரண்டும், சுருண்டு விழுந்து சில நிமிடங்களில் துடிதுடித்து இறந்து
விட்டது.
இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு
சொந்தமான மேய்ச்சலுக்கு சென்று வந்த பசு மாடு நேற்று மதியம் 1 மணிக்கு வீடு
திரும்பியது.
சிறிது நேரத்திலேயே அந்த மாடும் பலியானது.
ஆண்டிபட்டி கால்நடை துறை உதவி இயக்குனர் ஜெதீசன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் இறந்த கால்நடைகளை மருத்தவ பரிசோதனை செய்தனர்.
கால்நடைகள்
குடித்த குடிநீரை சோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர். மதுரையில் இருந்து
கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவினர் வந்து ரத்த மாதிரிகளை சேகரித்தனர்.
கால்நடை
துறை உதவி இயக்குனர் முருகேசன் கூறுகையில், ""மாடுகள் எவ்வகை நோய் தாக்கி
இறந்தது என தற்போது உறுதியாக கூற முடியாது. இறந்த மாடுகளின் ரத்த மாதிரிகள்
சேகரிக்கப்பட்டுள்ளது. முழுமையான பரிசோதனைக்கு பிறகு நோய் தாக்கம்
குறித்து தெரிய வரும். இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மற்ற மாடுகளுக்கு
ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு
அனுப்பாமல் சில நாட்கள் வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டும்,'' என்றார்.
பருவமழை பொய்த்து விவசாயமும் குறைந்து விட்ட நேரத்தில், கால்நடைகளும்
நோய் தாக்கி பலியாவது இந்த பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.