district news | ரயில் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு வாபஸ் பெற அரசுக்கு வலியுறுத்தல்| Dinamalar

ரயில் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு வாபஸ் பெற அரசுக்கு வலியுறுத்தல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தேனி : ரயில் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதை பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கட்டண உயர்வினை வாபஸ் பெற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால், ரயில் கட்டணங்களை 20 சதவீதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த கட்டண உயர்வுக்கு, நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தேனி பகுதி மக்கள் கருத்து:
டி.செல்வகணேஷ், வர்த்தகர், தேனி: உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்கள், வயதானவர்கள், பஸ்சில் பயணம் செய்ய முடியாதவர்கள், நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் அனைவரும் ரயில் பயணத்தை நம்பி உள்ளனர். மின்தடை, விலைவாசி உயர்வு, தொழில் முடக்கம் என பல்வேறு வாழ்வியல் போராட்டங்களில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு ரயில் கட்டண உயர்வு என்பது மிகப்பெரிய அளவிலான பாதிப்பினை ஏற்படுத்தி விடும். வர்த்தகர்களுக்கு, ரயில் கட்டண உயர்வு சரக்கு வர்த்தகத்தில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி விடும். எனவே அரசு இதனை அவசியம் வாபஸ் பெற்றே ஆக வேண்டும்.
கே.எம்.முத்துராமலிங்கம், வக்கீல், தேனி: ரயில் கட்டண உயர்வு அடித்தள மக்களையும், அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். மக்களின் வாழ்வு நிலை பற்றி தெரியாமல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து சரக்கு கட்டணங்களும் உயர்ந்து, விலைவாசி உயரும். ஏற்கனவே டீசல், பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் மக்களை வதைப்பதையே மத்திய அரசு வேலையாக கொண்டுள்ளது. அரசியல் கட்சியினர் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி அரசு செயல்படக்கூடாது. இந்த கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். இதை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டம் நடக்கும். இதில் வர்த்தகர்கள், பொதுமக்கள், அனைத்து கட்சியினர் பெரும் அளவில் பங்கேற்பார்கள்.
வி.மகாராஜன், விளையாட்டு கழக செயலாளர், தேனி: ரயில் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது மிகவும் தவறான நடவடிக்கை. மக்களுக்கு அதிகம் பயன்படும் போக்குவரத்து ரயில் என்பதால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். விலைவாசி உயர்வதை இனிமேல் தடுக்க முடியாது. ரயில்வே வளர்ச்சி திட்ட பணிகளில் தமிழகமும், தென் மாவட்டங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அதிருப்தியில் உள்ள மக்கள், இந்த கட்டண உயர்வால் மத்திய அரசு மீது கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.மக்கள் மனநிலையை உணர்ந்து மத்திய அரசு ரயில் கட்டண உயர்வினை வாபஸ் பெற வேண்டும்.
ஆர்.எஸ்.ஏ. அப்துல் அஜீஸ், வர்த்தக சங்க தலைவர், உத்தமபாளையம்:
ஏற்கனவே மக்களை நேரடியாக சார்ந்த அனைத்து தளங்களிலும் விலைவாசி உயர்வடைந்து கொண்டே செல்வது வாழ்வியலுக்கான பொருளாதாரத்திற்கு ஏற்றதல்ல.
இந்நிலையில் 20 சதவீத கட்டண உயர்வு அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் விஷயம். அமைச்சகம் கூறிய பயணிகளுக்கான, இலகுவான போக்குவரத்திற்கான வசதிகளை செய்து கொடுத்து, வெறும் 10 சதவீதம் மட்டும் உயர்த்தியிருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களான பெட்ரோல், காஸ் சிலிண்டர் போல ரயில் கட்டணமும் உயர்வது சாதாரண மக்கள் தலையில் விழுந்துள்ள அதீத சுமையாகும். இதனை மறுபரிசீலனை செய்ய மத்திய ரயில்வே அமைச்சகம் முன்வர வேண்டும்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.