சின்னமனூர் : தேனி
மாவட்டம், ஓடைப்பட்டி பகுதியில், சீட்லெஸ் பச்சை திராட்சை விவசாயத்தில்
விலை கிடைக்காமல், தொடர் நஷ்டமடைந்த விவசாயிகள், ஏற்றுமதி தரத்திற்கு
திராட்சையை மாற்ற, வடமாநில "மானிக்சம்' ரகத்தை பயிரிட துவங்கியுள்ளனர்.
தேசிய அளவில் திராட்சை ரகத்தில், சீட்லெஸ் பச்சை திராட்சை குறிப்பிட்ட சில
பகுதிகளில் மட்டுமே விளைகிறது. எப்போதும் மிதமான குளிர்ந்த காற்றுடன்,
வெப்பம் அதிகம் இல்லாத காலநிலை நிலவும் மலையடிவாரப் பகுதிகளில் மட்டுமே,
இவ்வகை திராட்சை விளையும். மற்ற பயிர்களைப் போல் எந்த நிலத்திலும் இவ்வகை
திராட்சை வளர்வதில்லை.
இதனால், மஹாராஷ்டிராவில் சங்கில், நாசிக்,
ஆந்திராவில் ஹைதராபாத், கர்நாடகாவில் பெல்காம், பெங்களூரு ஆகிய இடங்களில்
மட்டுமே விளைகிறது. தமிழகத்தில், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பகுதியில்
மட்டுமே, இவ்வகை திராட்சை அதிகளவில் விளைகிறது. ஹைவேவிஸ் மலையடிவாரத்தில்
அமைந்துள்ள ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், தென்பழனி, மரிக்காடு
பகுதிகளில் 600 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.
ஆரம்ப
காலத்திலிருந்து, இப்பகுதி விவசாயிகள், "தாம்ஸன் சீட்லெஸ்' என்ற வகையை
பயிரிட்டு வருகின்றனர். சாதகமான சீதோஷ்ண நிலையை மட்டுமே சார்ந்துள்ள இவ்வகை
திராட்சை, மழை, புயல், காற்று, அதிக வெயில் ஆகியவற்றை தாங்குவதில்லை.
இதனால் அத்திபூத்தாற் போல, இத்திராட்சை விளைச்சலில் விவசாயிகளுக்கு
"ஜாக்பாட்' அடிக்கும்.
பல வேளைகளில், விலை கிடைக்காமல், ஏற்றுமதி
தரமில்லாததால் அதற்கும் முடியாமல், விரைவில் உதிர்ந்துபோய் விடுவதால்,
பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.இக்காரணங்களினால், தற்போது இத்திராட்சை
விவசாயிகள், மஹாராஷ்டிராவில் இந்த பச்சை திராட்சை தோட்டங்களில்
பயிரிடப்படும் "மானிக்சம்' என்ற, ரகத்திற்கு மாறி வருகின்றனர்.
பச்சை
சீட்லெஸ் திராட்சையில், இது ஒரு ரகம். நிறத்தில் தின்மை, அதிக இனிப்பு
சுவை, உதிராத தன்மை, வறட்சியை தாங்கும் திறன், உரம் மற்றும் செலவுகள்
குறைவு, ஏற்றுமதி செய்யும் தரம், ஆகிய நன்மைகள் இந்த ரகத்தில் உள்ளதாக
விவசாயிகள் கூறுகின்றனர்.இந்த வகை திராட்சையின் விதைகள் ஒட்டு ரகமாக
பதியமிட்டு வழங்கப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு ஆயிரம் பதியங்கள்
தேவைப்படுவதால், நேரடியாக மஹாராஷ்டிரா சென்று ஓடைப்பட்டி விவசாயிகள் வாங்கி
வருகின்றனர். தற்போது கடந்த 6 மாதங்களாக இந்த வகை திராட்சைகளுக்கு மாறி
வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.