தேவாரம் : இரண்டாயிரத்து
ஐநூறு ரூபாய் டெபாசிட் செலுத்தி, பல கோடி ரூபாய்"கோல்டு லோன்' வழங்கும்,
தனியார் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.
அரசுக்கு
2500 ரூபாய் டெபாசிட் செலுத்தினால், தாசில்தாரால் பான் புரோக்கர் லைசன்ஸ்
வழங்கப்படுகிறது. இந்த லைசன்ஸ்சை பெற்றதும், பேங்கர்ஸ், கோல்டு லோன்
நிறுவனம், என்ற பெயர்களில் நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களை தொடங்கி
விடுகின்றனர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், நகை கடன் வழங்க
விதிக்கப்படும் நிபந்தனைகள், காலதாமதத்தால், தனியார் நிதி நிறுவனங்களில்
அடகு வைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகை மதிப்பில் அதிகபட்ச
தொகைக்கு கடன் வழங்குவது, குறைவான எடையுள்ள நகைகளுக்கும் குறையேதும்
கூறாமல் கடன் வழங்குவது, விரைவான சேவையை கருதி, தனியார் நிதி நிறுவனங்களை
மக்கள் நாடிச் செல்கின்றனர்.
மக்களின் ஆதரவால், புற்றீசல் போல நகை
கடன் வழங்கும் நிறுவனங்கள் பெருகிவிட்டன. ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு
பகுதிகளில் தங்கள் கிளைகளை விரிவு படுத்துகின்றன. இவற்றில் சில நிறுவனங்கள்
தேவையான நிதி ஆதாரம் இல்லாமலேயே துவக்கப்படுகின்றன. பொது மக்களிடம் அடகு
வாங்கப்படும் நகைகளை, வங்கிகளிலும், பெரிய நிதி நிறுவனங்களிடம் மறு அடகு
வைத்து நிதி வழங்கும் சேவையை தொடர்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் பிற்பகல்
வரை சேரும் நகைகள் அனைத்தும், மறு அடகு வைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள்
நகையை திருப்ப வரும் போது, தனியாக பிரித்து வழங்குவதில் சிக்கல்
ஏற்படுகிறது.
இப்பிரச்னையால், தேனி மாவட்டத்தில், "கணபதி பேங்கர்ஸ்',
"கொங்கு மண்டலம்,ஜி.பி.கோல்டு லோன், தமிழ் கோல்டு லோன்,எம்.எம்.கோல்டு
லோன்,எம்.பி.,கோல்டு லோன் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. குற்றப்பிரிவு
போலீசார் கூறியதாவது:
தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்து, எவ்வித
கட்டுப்பாடுமின்றி, பெரிய நிதி நிறுவனங்கள் நகைகளை மொத்தமாக அடகு
பெறுகின்றனர்.பல கோடி ரூபாய் புழங்கும் வட்டி தொழில் எவ்வித கண்காணிப்பும்
இன்றி நடக்கிறது. கண்துடைப்பாக ஆண்டிற்கு ஒரு முறை லைசன்ஸ்
புதுப்பிக்கின்றனர். கந்து வட்டி போல, அபராத வட்டி விதித்து பணம்
வசூலிக்கின்றனர்.
இவர்களை கட்டுப்படுத்த சட்ட நடைமுறையில்லாததால், பிரச்னையாகும் வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது, என்றனர்.
உத்தமபாளையம்
தாசில்தார் ஜவஹர்லால் பாண்டியன் கூறியதாவது: நிறுவனம் துவங்கவுள்ள இடத்தை
பார்வைட்டு லைஸ் வழங்கப்படுகிறது. இவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்கும்
அதிகாரம் எங்களுக்கு இல்லை, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.