district news | ச்ண்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ச்ண்

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலூர் : முல்லைப்பெரியாறு அணையில், "சுவீப்பேஜ்' தண்ணீர் வெளியேறும் துளைகளில் அடைப்பை நீக்கும் (ரீமிங்) பணி முடிவடைந்தது.
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் முழுவதும்,
மத்திய நீர் வள கமிஷன் சார்பில் அமைக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள் குழுவின் முன்னிலையில் நடக்க வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டின் பரிந்துரையாகும்.
அதனடிப்படையில், அணைப் பாதுகாப்பு
இயக்குனர் தனேஜா, கண்காணிப்பு பொறியாளர்கள் மோகனசுந்தரம் (தமிழகம்), ஜார்ஜ் ஜோசப்
(கேரளா) ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட மேற்பார்வையாளர் குழுவின் முன்னிலையில் பராமரிப்பு பணிகள் நடந்தது.
அணையின் பின்பகுதி மற்றும் காலரியில் உள்ள, "சுவீப்பேஜ்' தண்ணீர் வெளியேறும் துளையில், அடைப்பை நீக்கும் பணி (ரீமிங்), இக்குழுவின்
முன்னிலையில், கடந்த நவ.,6ல் துவங்கியது. அணையில் மொத்தமுள்ள 97 துளைகளில், அடைப்பை நீக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடந்து வந்தது. இப்பணிகள் முழுவதும் நேற்றுடன் முடிவடைந்தது. 20 தினங்களுக்குள் முடிக்க வேண்டிய இப்பணிகள், மேற்பார்வையாளர் குழுவின் விடுமுறையால், இடையிடையே பணிகள் நிறுத்தப்பட்டதால் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை