Advertisement
மோனோரயில் திட்டம் : ஒடிசா மாநிலம் தயாராகிறது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2013,06:02 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 10,2013,06:04 IST

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் கட்டாக்-புவனேஸ்வர் நகரங்களுக்கிடையே மோனோரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.
எரிபொருள் பற்றாக்குறை உட்பட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்கள் மோனோ ரயில் திட்டத்தை பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில் ஒடிசா மாநில அரசும் மோனோரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இன்ஜினியரிங் பிராஜக்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்திடம் திட்டமதிப்பீடு குறித்து அதன் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியது.
இதன்படி பயணிகளின்கொள்ளளவு குறைந்த முதலீடு ,செலவுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றவற்றை கருத்தில் கொண்டு இரண்டு முதல் எட்டு பெட்டிகள் கொண்ட மோனோ ரயில் உருவாக்கப்பட உள்ளது. இவை குளிர் சாதன வசதிகள் செய்யப்படும் எனவும் , ஒவ்வொரு மோனோரயிலும் ஒரு கிலோ மீட்டரையும் இரண்டு நிமிடங்களில் கடந்து செல்லும் வகையில் அதன் வேகம் இருக்கும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்திட்டத்திற்கான செலவாக கிலோ மீட்டர் ஒன்றிற்கு சுமார் 150 கோடி ரூபாய் வரையில் ஆகலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
மாநிலல தலைமைசெயலாளர பி.கே. பட்நாயக் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை‌யை அடுத்து திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக மாநிலத்தின் வீட்டு வசதி மறறும் நகர்ப்புற வளர்‌ச்சித்துறைக்கு பரிந்துரைக்கப்ப்டடுள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
raja - MUMBAI,இந்தியா
10-ஜன-201313:08:54 IST Report Abuse
raja பாராட்ட தக்க செயல் .... இதன் முலம் இந்தியாவின் அடிப்படை வசதிகள் முன்னேற்றம் அடையும் .....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
raghavan - chennai,இந்தியா
10-ஜன-201311:49:33 IST Report Abuse
raghavan ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு நிமிடம் என்றால் எப்போது ஊர் போய் சேருவது ?
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
10-ஜன-201307:34:56 IST Report Abuse
மும்பை தமிழன் எப்படியோ இந்தியா முன்னேறினால் சரி
Rate this:
0 members
1 members
2 members
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
10-ஜன-201306:57:16 IST Report Abuse
ஆரூர் ரங யாரும் இதனை தோல்வித் திட்டம் என இகழ வேண்டாம். எல்லா புது முயற்சிகளும் எடுத்த உடனே வெற்றி பெறுவதில்லை. ஆனால் ஒவ்வொரு மாநிலத்தின் தேவை வித்தியாசமானது. போகப்போக இதன் அருமையாய் புரிந்துகொள்வர் ( பாறை நிலமான ஒரிஸ்ஸாவில் மண்ணைக் குடைந்து மெட்ரோ நிர்மாணம் செய்வது கடினம் )
Rate this:
1 members
0 members
5 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.