Ramadoss arrested under NSA : Sivakami IAS | தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ராமதாசை கைது செய்ய சிவகாமி வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ராமதாசை கைது செய்ய சிவகாமி வலியுறுத்தல்

Added : ஜன 11, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ராமதாசை கைது செய்ய  சிவகாமி வலியுறுத்தல்

வேலூர்: ""ஜாதி, மோதல்கள் உருவாக்கும் வகையில் பேசி வரும், ராமதாசை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,'' என, சமூக சமத்துவப் படை கட்சி தலைவர் சிவகாமி கூறினார்.

சமூக சமத்துவப் படை கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், வேலூரில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு பின், கட்சி தலைவர் சிவகாமி கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் தலித் இளைஞருக்கும், வன்னிய இனப்பெண்ணுக்கும் ஏற்பட்ட காதல் திருமணத்தை காரணம் காட்டி, 1,500 பேர் திரண்டு, தலித் இன மக்கள் வசிக்கும், சில கிராமங்களில் உள்ள வீடுகளை, பெட்ரோல் குண்டு வீசி, தரைமட்டமாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், கலவரம் நடந்து வருகிறது. தமிழகத்தில், ஜாதி வெறியை தூண்டும் வகையில் செயல்படும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், காடு வெட்டி குரு ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவை சந்தித்து, மனு கொடுக்க உள்ளோம். "வன்கொடுமை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்' என, பா.ம.க., மற்றும் சில கட்சிகள் கூறுகின்றன. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடாது. இவர்கள் மீது, தமிழக அரசு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி கலவரத்தை தூண்டியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, வரும், 22ம் தேதி, தருமபுரியில் இருந்து நடை பயணம் புறப்பட்டு, பாதிக்கப்பட்ட கிராமங்கள் வழியாகச் சென்று, அந்த மக்களுக்கு ஆறுதல் கூறி, வரும், 29ம் தேதி, தமிழக கவர்னரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh krishnaswamy - bangalore,இந்தியா
12-ஜன-201318:41:51 IST Report Abuse
suresh krishnaswamy es will exist as long as Reservation policy that categorizes people into Backward Class, Most Backward Class, Other Backward Class, SC/STs exist.
Rate this:
Share this comment
Cancel
Dr.Swami D Francis - Khomes,லிபியா
12-ஜன-201313:51:02 IST Report Abuse
Dr.Swami D Francis ஜாதிப் பிரிவினைகளை மையமாக்கி அரசியல் சடுகுடு விளையாடும் அவலம் என்றுதான் தமிழகத்தில் முடிவுக்கு வருமோ தெரியவில்லை. ஜாதித் துவேசங்களைக் களைய எத்தனையோ சட்டங்கள் இருந்தாலும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமோ என்ற அச்சத்தை விட, தங்களின் வாக்கு வங்கிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் தான் சமூக அமைதிக்கு பங்கம் உருவாக்கும் தலைவர்கள் மேல் எந்த அரசாங்கமும் கடின நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணமாகத் தெரிகிறது. ஜாதிகளே இல்லை என்ற அளவுக்கு நாம் முன்னேறாவிட்டாலும், குறைந்தது நாம் அனைவருமே 'தமிழச்சாதி' என்ற உணர்வோடாவது ஒன்று பட்டு, சமத்துவத்தை எட்டிபிடிக்க முயற்சிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Good Man - Doha,கத்தார்
12-ஜன-201300:44:22 IST Report Abuse
Good Man திரு. ராமதாஸ் அவர்களுக்கு மாற்று ஜாதி மக்களாகிய எங்கள் ஆதரவு என்றும் உண்டு..மாற்று ஜாதி மக்களுக்கு உறுதியான தலைவர் யார் என்று நாங்கள் ஆவலுடன் ஏங்கி இருந்த வேளையில், திரு. ராமதாஸ் என்ற மனிதரால் மட்டும் தான் எங்களை காப்பாற்றுவார் என்று எங்களுக்கு தெரிந்து விட்டது..இதுவரை திமுக, அதிமுக என்று பல கட்சிகளுக்கு ஒட்டு போட்டு வெறுத்து விட்டோம்..இனி வரும் தேர்தலில் திரு.ராமதாஸ் விரல் காட்டும் வேட்பாளருக்கே எங்கள் வாக்கு..இது உறுதி..திரு. ராமதாஸ் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள்..அபகரிப்பில் உள்ள ஹிந்து கோவில்களின் சொத்தை மீட்டு எடுக்க போராட்டம் நடத்தி மீட்டுக் கொடுங்கள்.நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை