Farmer print invitation for his cow | பசுவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி: பத்திரிக்கை அடித்த விவசாயியால் பரபரப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி: பத்திரிக்கை அடித்த விவசாயியால் பரபரப்பு

Updated : ஜன 13, 2013 | Added : ஜன 12, 2013 | கருத்துகள் (23)
Advertisement
பசுவுக்கு நாளை வளைகாப்பு நிகழ்ச்சி: பத்திரிக்கை அடித்த விவசாயியால் பரபரப்பு

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்தவர், சன்னாசி. இவர், ஸ்ரீகோமாதா எனும் செல்லப்பொண்ணு என்ற பெயருடைய தன் பசுவுக்கு, மழை மாரியம்மன் கோவிலில், வளைகாப்பு நடத்தினார். முன்னதாக அவர் அனுப்பிய அழைப்பிதழ் ஏற்று திரளானவர்கள் கலந்து கொண்டனர். மொத்தம், 500 பத்திரிக்கைகள் அச்சிட்டு, தன் சொந்த பந்தங்கள், நண்பர்கள், வி.ஐ.பி.,க்களுக்கும் வழங்கியிருக்கிறார்.

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கும், அறந்தாங்கி யூனியன் தலைவர் மெய்யநாதன் கூறியதாவது:வளைகாப்பு நடத்த இருக்கும் சன்னாசி மீது, கடும் கோபமாகத்தான் இருந்தேன். அழைப்பிதழைப் பார்த்த பிறகு கூட, கோபம் குறையாமல் இருந்தேன். என்னை பார்க்க அவர் வந்தார். அப்போது, வளைகாப்புக்கு அவர் சொன்ன காரணங்களை கேட்டதும், நிச்சயம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, வளைகாப்பு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

சன்னாசி சொந்தமாக பசுமாடுகள் வளர்த்து பராமரித்து, பால் கறந்து விற்று ஜீவனம் நடத்துகிறார். அவர் வெளியில் சென்று, மற்றவர்களின் மாடுகளுக்கும் பால் கறந்து, அதற்கு கூலி பெற்று வருகிறார். அதனால் பசுக்களின் மீது, அவருக்கு ஈடுபாடும், பாசமும் என்றைக்கும் உண்டு. அதனால் தான் வளர்க்கும் பசுக்களுக்கு, ராசாத்தி, ராணி, செல்லப்பொண்ணு என்றும் பெயர் சூட்டி அழைத்து வருகிறார்.

இதுகுறித்து சன்னாசி கூறியதாவது:கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேல், பசுக்கள் வளர்க்கிறேன். இதுவரை, பசுக்களுக்கென்று ஏதும் செய்யாததால், இப்போது வளைகாப்பு நடத்துகிறேன். பசுக்களை அனைவரும், பால் தரும் ஒரு விலங்கு என்ற கோணத்தில் தான் பார்க்கின்றனர்; நான் அவற்றை தெய்வமாக மதிக்கிறேன்.விவசாயத்தின் மீதும், கால்நடைகள் வளர்ப்பிலும் ஆர்வம் குறைந்து வரும் இக்காலத்தில், கால்நடைகள் மீது இத்தனை அக்கறை கொண்டிருப்பது, மற்றவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
வளைகாப்பு அன்று காலை, பசுவை குளிப்பாட்டி, மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோவிலில் கட்டி, அதற்கு தேவையான அளவுக்கு தீனியும் போட்டு, பொங்கல் வைத்து, அதற்கு ஊட்ட ஏற்பாடு செய்துள்ளேன். விழாவுக்கு வருபவர்கள், வளைகாப்புப் பெண்ணுக்கு சந்தனம், குங்குமம், விபூதி பூசுவதைப் போல், பசுவுக்கு பூசி, வணங்க வேண்டும் என்பது, என் விருப்பம். அன்றைக்கு பசுவின் காலில் பூட்ட, வெள்ளியில் காப்பு ஒன்றை தயாரித்து வைத்திருக்கிறேன்.

நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு டீ, கேசரி, வடை போன்ற சிற்றுண்டி மட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிகழ்ச்சிக்காக, 25 ஆயிரம் ரூபாய் வரை, சன்னாசி செலவு செய்ய திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜன-201300:51:40 IST Report Abuse
தமிழ்வேல் ஒருவகையில் நன்றி செலுத்துகின்றார்... 25000 செலவு செய்பவர் கொசுவலைகள் நல்ல தீவனம் சுகாதாரமான மாட்டுத் தொழுவம் போன்ற வசதிகள் செய்து தரலாம்...
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
18-ஜன-201320:25:10 IST Report Abuse
சு கனகராஜ் பசுவை பலர் தெய்வமாக வணங்குவர் பசு கோமாதா என்று பசுவின் கோமியத்தை வீட்டில் தெளித்தால் நோய்கள் அண்டாது என்பர்...
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
18-ஜன-201320:28:46 IST Report Abuse
சு கனகராஜ் இந்த காலத்தில் பெத்த பிள்ளைக்கு 10000 செலவு செய்து வளைகாப்பு நடத்த யோசிக்கும் பெற்றோர்கள் காலத்தில் பசுவுக்கு 25000ள் வளைகாப்பு நடத்திய சன்னாசி பாராட்டுக்குரியவர்...
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
13-ஜன-201320:05:02 IST Report Abuse
krishna நல்ல விஷயம்
Rate this:
Share this comment
Cancel
ganesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-201315:47:52 IST Report Abuse
ganesan சூப்பர் , வாழ்த்துக்கள் திரு . சந்யாசி அவர்களை , பசுவை கொடுமை படுதுபவர்க்களுக்கு இது ஒரு விழிப்புனர்வு . வாழ்க வளமுடன் ...
Rate this:
Share this comment
Cancel
SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
13-ஜன-201309:31:07 IST Report Abuse
SENTHIL KUMAR நன்றி கடனை திருப்பி செலுத்துவதில் தமிழனுக்கு நிகர் தமிழனே பென்னிகுக் முதல் இந்த பெண் பசுவரை "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்று"
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
13-ஜன-201305:41:34 IST Report Abuse
மதுரை விருமாண்டி எனக்கு இது சரியாப் படல்லை... இவரு வளைகாப்புக்கு பத்திரிகை வச்சாரே, பசுவுக்கு பாவாடை கட்டி கல்யாணம் பண்றதுக்கு பத்திரிகை போட்டாரா ??
Rate this:
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
12-ஜன-201322:50:23 IST Report Abuse
Natarajan Iyer பசு மாடுகளுக்கு நல்ல தீனியும் போதிய தண்ணீரும் கொடுத்து ஊசி போடாமல் பால் கறந்து அதன் கன்றுகளை வைக்கோல் அடைத்து கொல்லாமல் நல்லபடி வளர்த்தாலே போதுமானது. இது வீண் செலவுதான். இதனால் அந்த மாட்டுக்கு என்ன பயன் என்று தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
raj - sivagangai,இந்தியா
12-ஜன-201319:14:34 IST Report Abuse
raj இது ஒன்றும் தப்பாக தெரியவில்லை அவரை வாழவைக்கும் கடவுளாக நினைத்து மரியாதையை செய்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Gilbert karunagaran - Istres ,பிரான்ஸ்
12-ஜன-201318:30:22 IST Report Abuse
Gilbert karunagaran வளைகாப்புக்கு அழைக்கப் பட்டவர்கள், பரிசு பொருட்களுடன் (கழுத்துக்கு மணி, மற்றும் தவிடு, பிண்ணாக்கு...) வருவார்களா ?
Rate this:
Share this comment
Cancel
sundar iyer - chennai,இந்தியா
12-ஜன-201313:02:49 IST Report Abuse
sundar iyer இதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Er. S. ARJUNAN - Doha,கத்தார்
12-ஜன-201312:54:34 IST Report Abuse
Er. S. ARJUNAN அவரை வாழ்த்துவோம், மேனகா காந்திக்கு தெரிய வந்தால் தமிழனுக்கு உயர்வு கிட்டும். இது போன்ற நல்ல செய்திகளை வெளியிடும் தினமலருக்கும் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை