போட்டோ ஜர்னலிசம், இந்திய பத்திரிகைகளுக்கு உயிரோட்டமாக இருந்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும். எழுத்துகளால் வடிக்க முடியாத உணர்வுகளை, ஃபோட்டோ ஜர்னலிசம், சுலபமாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வலிமை உடையது.
இந்தியாவிலுள்ள புகைப்பட கலைஞர்களில் ஒருவரான ரகுராய், கடந்த 47 ஆண்டுகளாக, பத்திரிகைகளுக்கு அளித்த பங்கு சாதாரணமானதல்ல.
இன்றைய நவீன இந்தியாவின் சமூக வளர்ச்சியை தனிப்பட்ட முறையில், துணிச்சலுடன் புகைப்படங்களாக எடுத்து வெளியிட்ட வகையில், இந்திய ஃபோட்டோ ஜர்னலிசத்தில் அவருக்கு தனியிடம் உண்டு.
ஹென்றி கார்டியர் பிரெஸ்ஸன் என்ற பிரெஞ்சு புகைப்பட கலைஞரை, தனது குருவாக துவக்கத்தில் ஏற்று கொண்ட ரகுராய், 1971ம் ஆண்டு தன்னுடைய படைப்புகளை பாரிஸ் நகரில் கண்காட்சியாக வைத்த போது, உலக புகழ்பெற்ற மேக்னம் ஃபோட்டோ ஏஜென்சி, இவரை உலகளவில் அங்கீகரித்த நேரத்தில் இந்தியாவிலும் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது.
பின்னர், தஸ்வீர் ஆர்ட்ஸ் அமைப்புடன் இணைந்து தன்னுடைய புகைப்படங்களில் சிறந்தவைகளை தேர்ந்தெடுத்து, "தெய்வீக தருணங்கள்' (டிவைன் மூமென்ட்ஸ்) என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை நாடு முழுவதும் நடத்த துவங்கினார்.
இவரது புகைப்பட தொகுப்பு கண்காட்சி சமீபத்தில் பெங்களூரு, கஸ்தூரிபா கிராஸ் ரோட்டிலுள்ள "சுவா ஹவுஸில் நடந்தது.
- எல்.முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.