சட்டசபை, லோக்சபா தேர்தல்களின் போது, கூட்டணிகள் மாறுவது வழக்கமாக உள்ளது. சட்டசபை தேர்தலில் இருந்த கூட்டணி, லோக்சபா தேர்தலில் மாறுபடுகிறது. லோக்சபா தேர்தலின் போது அமைக்கப்படும் கூட்டணி, பா.ஜ., மற்றும் காங்., தலைமையில் உருவாகிறது.
நாடு முழுவதும் அமைக்கப்படும் கூட்டணி, தமிழகத்திலும் பின்பற்றப்பட்டு வருகிறது. நடப்பு பார்லிமென்ட்டின் ஆயுள், 2014ம் ஆண்டு, மே மாதம் முடிகிறது. ஆனால், இப்போதிருந்தே தேர்தல் ஆயத்தப் பணிகளை கட்சிகள் துவங்கிவிட்டன.தமிழகத்தில், அதிரடியான கூட்டணிகள் உருவாகும் சூழல் நிலவுகிறது. அ.தி.மு.க., பொது செயலரும், முதல்வருமான ஜெயலலிதா, காங்., - பா.ஜ., கட்சிகளுடன், கூட்டணி இல்லை. தனித்துப் போட்டியிடப் போகிறோம் என, கட்சியின் பொதுக்குழுவில் அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.இதற்கு அவர் முன்வைக்கும் காரணம், காவிரிப் பிரச்னை. காவிரியில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, மத்தியில் உள்ள காங்., அரசும், கர்நாடக மாநிலத்தை ஆளும் பா.ஜ., அரசும் துரோகம் செய்கின்றன.
எனவே, தமிழகத்தின் நலனை பாதுகாக்க, மத்தியில் அ.தி.மு.க., தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். இதற்கு, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெறவேண்டும். எனவே, தனித்து களம் காணுகிறோம் என, கூறியுள்ளார்.
நிலையான ஆட்சி, மதச் சார்ப்பற்ற கூட்டணி, பிரதமர் வேட்பாளர் ஆகியவற்றை முன்னிறுத்தி, இதுவரை லோக்சபா தேர்தலை கட்சிகள் சந்தித்து வந்துள்ள நிலையில், புதிதாக காவிரி விஷயத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க வியூகம் வகுத்துள்ளார் ஜெ.,
ஜெ., முன்வைக்கும் கோரிக்கையை, காங்., - பா.ஜ., மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள கட்சிகளும், தேசிய கட்சியான கம்யூனிஸ்ட்களும் புறந்தள்ள முடியாது. தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையை தேர்தல் களத்தில் முன்னிலைப்படுத்துவதை, மக்களும் தட்டிக் கழிக்க முடியாது.ஆனால், காவிரிப் பிரச்னையால் பாதிக்கப்படுவது, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர் ஆகிய, ஏழு மாவட்டங்கள் தான். இந்த மாவட்டங்களில், எட்டு லோக்சபா தொகுதிகளே உள்ளன. மற்ற மாவட்டங்களில், காவிரியால் தாக்கம் எதுவுமில்லை.எனவே, அ.தி.மு.க., முன்வைக்கும் கோரிக்கையை, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தான் பிரச்னை.
இதுகுறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ""டெல்டா மாவட்டங்களில் விளைந்தால் தான், மாநிலத்தின் பிற மாவட்டங்களில் உணவருந்த முடியும். காவிரிக்காக, அனைத்து மாவட்டங்களும் வித்தியாசம் இல்லாமல், போராடுகின்றனர். எனவே, தமிழக மக்கள் அனைவரும், இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்வர்,'' என்கிறார்.
தமிழகத்தின் பிற கட்சிகளோ, அ.தி.மு.க.,வின் அரசியல் அணுகுமுறையை விமர்சிக்கின்றனர். ஆட்சிக்கு வந்து ஆறு மாதத்தில், மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வேன் என, தேர்தல் வாக்குறுதியை ஜெ., அளித்தார்.ஆனால், தேர்தலுக்குப் பின், மின்வெட்டுப் பிரச்னை அதிகரித்துள்ளது. இதிலிருந்து, மக்களை திசை திருப்பவே, காவிரிப் பிரச்னையை, ஜெ., முன்னிலைப்படுத்துகிறார் என, கூறுகின்றனர்.
காங்கிரசும், தி.மு.க., கம்யூனிஸ்ட், பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, 2004 லோக்சபா தேர்தலில், நாற்பதுக்கு நாற்பதில் வெற்றிபெற்றனர். ஆனால், தமிழகத்தின் தீர்க்கப்படாத பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.அ.தி.மு.க., மட்டும், 40 தொகுதிகளில் வெற்றிபெற்றால், அவரால் என்ன செய்துவிட முடியும் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.காவிரி விவகாரம், மாநில நலன் என்ற கோஷத்தை முன்னிறுத்தி, தேசிய கட்சிகளை வீழ்த்த ஜெ., வகுத்துள்ள வியூகம் வெற்றி பெற வேண்டுமானால், அதற்கான களப்பணி மிக அதிகம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.தேசிய வளர்ச்சி கூட்டத்தில் பேச அனுமதி மறுப்பு, மத்திய மின் தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்காதது, காவிரி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்ளில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது குறித்த பிரசாரத்தை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறும் அவர்கள், அவ்வாறு சென்று சேர்ந்தால், நிச்சயம் லோக்சபா தேர்தலில் திருப்புமுனை ஏற்படும் என்கின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தினமலர் வாசகர்களை கேட்கிறேன் பதிலை சொல்லுங்களேன் நடக்கபோவுது பாராளுமன்ற தேர்தல் அல்லவா கடந்த 10 வருஷமா திமுக பங்குபெற்ற கூட்டணி தான் மத்தியிலே ஆட்சி செய்தது, இப்போதும் செய்கிறது. இவர்களால் தமிழகத்துக்கு என்ன நன்மை சொல்லுங்களேன். காவேரி கிடையாது, முல்லை பெரியார் கிடையாது, இலங்கை தமிழர் பிரச்சினையில் துரோகமே மிச்சம், சிறப்பு நிதி கிடையாது, நல்ல ஏர்போர்ட் கிடையாது, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடையாது, kerosene கிடையாது, மெட்ரோ ரயில் விரைவாக ஓடாது, நல்ல ரயில் திட்டங்கள் கிடையாது, ippadi எதுவுமே கிடையாது ஆனால் சேது சமுதிரதிட்டம் மட்டுமே கொள்ளை அடிக்க மட்டுமே தொடங்கப்பட்டு கோர்ட் உத்தரவால் மூடுவிழாவை நோக்கி செல்கிறது திமுகவின் மத்திய அமைச்சர்களோ வெறும் dummy பீஸ் தான் அதுவும் ஒருவர் ஜெயில் பில் என்று அலைகிறார் திரிசங்கு நிலையில் அவர்கள் உள்ளனர் எப்படி இவர்கள் வாக்கு சேகரிக்க மக்களிடம் செல்வார்களோ? வெட்கம் இல்லாதவர்கள் ஆனால் ஜெயலலிதாவை எடுத்துகொள்ளுங்கள் நிமிர்ந்த நன்னடையில் யாருக்கும் அஞ்சாமல் தலைவணங்காமல் ஆர்பாட்டமே இல்லாமல் தமிழ்நாட்டை அழிவிளிரிந்து மீட்டு வளர்ச்சியை நோக்கி சிறப்பான திட்டங்கள் மூலம் வழி நடத்துகிறார் எதுவுமே கிடையாது என்று சொல்லும் மத்திய அரசோடு அனுசரணையா போக முடியாது போராடித்தான் பெறனும் மத்திய அரசுக்கு அதிகமாக நிதி குடுக்கும் மாநிலமே thamizh நாடு தான் பிறகு ஏன் கெஞ்சனும் தலையை வெட்டும் பாகிஸ்தானுக்கு மின்சாரம் குடுக்க mudiyum ஆனால் தமிழ்நாட்டுக்கு கிடையாதாம் இவர்கள் ஒட்டு கேட்கவந்தால் ஓடோட விரட்டுங்கள் இது சரி மாநில அரசின் சாதனைகளை ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் சிறப்பான தூழ்மையான நிர்வாகம் நடக்கிறது ஒரு லஞ்ச புகார்கள் இல்லை அடாவடி arasiyal இல்லை கட்டபஞ்சாயத்து இல்லை நிலா அபகரிப்பு இல்லை பெரிய அளவிலான sattam ஒழுங்கு புறச்சினை இல்லை ஜாதி மோதல்கள் இல்லை ஆடம்பர விழாக்கள் இல்லை
பஸ் kattanam உயர்த்தி பஸ்களை உயர்த்தினார் மற்றும் அந்த நிறுவனங்களை அழிவிலிருந்து மீட்டார் அதே தான் பால் வளத்துறையிலும் கல்விக்கு எந்த அரசும் கொடுக்காத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது சிறந்த நிர்வாகம் அளிக்கிறார் ஒரே குறை மின்சாரம் அதுக்கு இவரை குறை கூற முடியாது இந்த பிரச்சினையை மிகுந்த அக்கறையோடு மீட்டிங் மேல் meeting போட்டு கூடியவிரைவில் ஒழித்துகாட்டுவார் இப்போதே இந்த புறச்சினை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிறது நில அபகரிப்பு வழக்குகள் துரிதபடுத்தபட்டு கோடிகணக்கில் நிலங்கள் திருப்பிகொடுக்கபட்டுள்ளது இயற்க்கை வளம் கோடிகணக்கில் காப்பாற்ற பட்டுள்ளது Thaniyaar கொள்ளை அடிக்காமல் கோடிகணக்கில் Tasmac ஒரு அரசின் கஜானாவை நிரப்புது கேபிள் தொழிலில் egapoga ஆதிக்கம் ஒடுக்கபடுது ஒரு குடும்பம் valaruvadhu தடுக்கபடுது எல்லாவற்றுக்கும் மேலே சட்டத்தின் ஆட்சி நடக்குது மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்களே அதுவே போதும் ஒரே நாளில் கோடிகணக்கில் தொழில் முதலீடுகள் வருகிறது ஆகையால் பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் கரங்களை வலுபடுத்தி 40/40koduppom அப்புறம் பாருங்கள் தமிழகத்தில் எல்லாம் கிடைக்கும் செய்வோமா? இல்லையேல் பாலைவனமாகிடிவார்கள் மத்திய ஆட்சியாளர்கள் அந்த நிலைக்கு போகனுமா? உங்களுடைய முடிவுக்கு விட்டுவிடுகிறேன்
இந்தியாவின் பாராளுமன்ற தேர்தலை நிர்ணயிப்பது அதி முக்கிய ஆறு மாநிலங்கள் முறையே உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரா, பீகார், மற்றும் தமிழ் நாடு. முக்கிய ஆறு மாநிலங்கள் மத்திய பிரதேசம்,கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் ஒரிசா மற்றும் கேரளா. முதலாவது ஆறு மாநிலங்கள் மொத்தம் 291 பாராளுமன்ற தொகுதிகள். இரண்டாவது ஆறு மாநிலங்கள் 149 பாராளுமன்ற தொகுதிகள், மொத்தம் பனிரெண்டு மாநிலங்கள் சேர்த்து மொத்தம் 440 பாராளுமன்ற தொகுதிகள். இதில் டெல்லி 7 சேர்த்தால் 447.
உ பி எடுத்து கொண்டால் சென்ற வருடம் நடந்த சட்ட சபை தேர்தலில் காங்கிரசுக்கு 403 தொகுதிகளில் வெறும் 36 தொகுதிகள் தான் வெல்ல முடிந்தது. பிஜே பீயோ 46 தொகுதிகள் தான் வெற்றி அடைய முடிந்தது. பி ஜே பி செய்த கடைசி நேர தவறுகளால் 60 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.கடைசியாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் மாயாவதி அவர்களின் பி எஸ் பி யும் முலாயம் அவர்களின் எஸ் பி யும் தேர்தலில் போட்டியிட வில்லை. பயம் காரணம்.
12 மாநகராட்சிகளில் 10 மாநாகராட்சி களை பி ஜே பி பிடித்தது. காங்கிரெஸ் ஒன்று கூட கிடையாது. 186 நகராட்சிகளில் 41 நகராட்சிகளை பி ஜே பி பிடித்தது. மீதி எல்லாம் சுயேட்சைகள். கூட்டணி எப்படி அமைகின்றது என்பதை வைத்தே முடிவுகள் இருக்கும். பி ஜே பீ நல்ல கூட்டணி வைத்தால் ஓரளவு நல்ல முடிவுகள் இருக்கும்.
அடுத்து மகாராஷ்டிரா இதிலும் அனுபவம் உள்ளவர்கள் ஓரளவு கணித்து விடலாம். மே வங்கம் சொல்ல வேண்டியது இல்லை. என்ன நடக்கும் என்பது தெரியும். ஆந்திரா இங்கு நிலைமை தலை கிழாக மாற போகின்றது.
அம்மாவின் கணக்கு சரியான கணக்கு, இந்த பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் தான் முன்னிலை வகிக்கும். இதே பாதையில் இன்னும் விரிவாக சென்றால் வெற்றி நிச்சயம்
பலிக்கும் ஏன் ? என்றால் மக்கள் நன்றாகவே அறிந்து தெரிந்து வைத்து இருக்கிறார்கள் .தேசிய வளர்ச்சி கூட்டத்தில் பேச அனுமதி மறுப்பு, மத்திய மின் தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்காதது, காவிரி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்ளில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது மற்றும் தனியார் டிவி க்கு அனுமதி அரசு கேபில் டிவி டிஜிட்டல் அனுமதி இல்லாதது மற்றும் சென்னை வலூர் மின் திட்டத்திற்கு சுற்று சுழல் அமைச்சகம் அனுமதி தர தாமதம் பின்னர் பிரதமர் அந்த துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனை கண்டித்தது,மண் எண்ணெய் குறைப்பு , இந்த வருட ஜந்து ஆண்டு திட்டத்தில் தமிழகதிற்கான நிதி 27 சதவிகித்தில் இருந்து 23 சதவிகிதமாக குறைத்தது, spetram 2G வழக்கில் அதான் முலம் பயன் அடைந்த கலைஞ்சர் டிவி பங்கு தாரர் 60% சதவிகிதம் பங்கு உள்ளவர் மீது கேசு இல்லாதது இப்படி இன்னும் பல விசத்தை குறித்த பிரசாரத்தை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறும் அவர்கள், அவ்வாறு சென்று சேர்ந்தால், நிச்சயம் லோக்சபா தேர்தலில் திருப்புமுனை ஏற்படும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.