தனக்கு பின், தி.மு.க.,வின் அடுத்த தலைவராக, ஸ்டாலினை பதவி ஏற்க வைக்க, எதிர்காலத்தில் கட்சியில் எந்த குழப்பமும் ஏற்படக் கூடாது என்பதற்காக, "மாநிலத்துக்கு ஸ்டாலின்; டில்லி அரசியலுக்கு கனிமொழி' என்ற, "ஆபரேஷனை' தி.மு.க., தலைவர் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் என்று தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
அதேசமயம், தனது மூத்த மகனும், மத்திய அமைச்சருமான அழகிரியிடம் நிழல் யுத்தத்தை, கருணாநிதி நடத்துவது நிஜமா அல்லது நாடகமா என்ற குழப்பம் தி.மு.க., தொண்டர்களிடம் எழுந்துள்ளது."தனது ஆயுள் முழுவதும், இந்த தமிழ் சமுதாயத்திற்கு உழைப்பேன்; எனக்கு பின் ஸ்டாலின் பாடுபடுவார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பேச்சுக்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அமைச்சர் அழகிரி, "தி.மு.க., சங்கர மடம் அல்ல; கட்சி பதவியை பொதுக்குழு கூடி முடிவு செய்யும்' என, ஆவேசமாக தெரிவித்தார்.
தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டம் முடிந்த பின், "கட்சியின் தலைவர் பதவிக்கு ஸ்டாலின் போட்டியிட்டால், அதை நான் முன்மொழிவேன்' என, கருணாநிதி அதிரடியாக, பதிலடி கொடுத்தார். கருணாநிதியின் இந்த திட்டவட்டமான முடிவால், அழகிரி கடும் அதிருப்தி அடைந்தார். தனது தந்தையை நேரில் சந்தித்து பேச வேண்டும் என, பகீரத முயற்சியை அழகிரி மேற்கொண்டார். ஆனால், அழகிரியை சந்திப்பதை கருணாநிதி தவிர்த்தார். இதனால், அழகிரி மீது கருணாநிதியின் கோபம் இன்னும் தணியவில்லையா என்ற கேள்வி; தி.மு.க.,வினர் மத்தியில் எழுந்துள்ளது.தனக்கு பின் ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பதில், கட்சியினர் மத்தியில் எந்த எதிர்ப்பும், குழப்பமும் ஏற்படாமல் இருப்பதற்காக, அழகிரி மீது, நிழல் யுத்தத்தை, கருணாநிதி நடத்துகிறாரா என்ற குழப்பமும் தொண்டர்கள்
மத்தியல் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தன் ஆயுள் இருக்கும் வரை, தலைவர் பதவியை, கருணாநிதி விட்டுக் கொடுக்க மாட்டார். தனக்கு பின், கட்சித் தலைமையை ஸ்டாலினும், டில்லிக்கு கனிமொழியும், தென் மண்டலத்திற்கு அழகிரியும் பணியாற்ற வேண்டும் என்பது தான், கருணாநிதியின் விருப்பம்.ஸ்டாலினிடம், 70 சதவீத மாவட்டச் செயலர்கள் இருந்தால், மீதமுள்ள 30 சதவீதம் மாவட்டச்செயலர்கள் அழகிரி, கனிமொழிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆக மொத்தம், 100 சதவீதம் கட்சியினரின் ஆதரவு, தனது மூன்று வாரிசுகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் கருணாநிதி கவனமாகவும், சாமர்த்தியமாகவும் காய் நகர்த்தி வருகிறார்.
ஆனால், ஆட்சி அதிகாரம் இருந்தால் மட்டும், அழகிரி தீவிர அரசியிலில் ஈடுபடுகிறார் என்பதால், அவரது செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த கருணாநிதி, அவரை தென் மண்டல அரசியலை மட்டுமே பார்க்கட்டும் என, ஒதுக்கி வைக்க முடிவு öŒ#துள்ளார்.அதனால் தான், அழகிரியை சந்திக்க அனுமதிக்காமல், அவர் மனம் மாறி, தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என, கருணாநிதி விரும்புகிறார். ஸ்டாலின் அடுத்த தலைவராக பதவி ஏற்க வைப்பதற்கு தான், மாநில அளவில் ஸ்டாலின், மத்தியில் கனிமொழி என்ற, "ஆபரேஷனை' வெற்றிகரமாக, கருணாநிதி நடத்தி முடித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார். -நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மற்ற எல்லா தொழில்களிலும் வாரிசுகள் ஈடுபபடுவது போலத்தான் அரசியலிலும் ஈடுபடுகிறார்கள். கருணாநிதியின் மகன், மகள் என்பதாலேயே அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது இல்லை. அவர்களும் நீண்ட நாட்கள் அரசியல் அனுபவம் பெற்று அதன்பின்தான் பதவிகளைப் பெறுகிறார்கள். அவர்கள் அரசியலில் ஈடுபட்டு தவறுகள் செய்தால் கேட்கலாமே ஒழிய, அரசியலில் ஈடுபட்டு பதவிகளைப் பெறுவதையே குறை சொல்வது ஒருதலைபட்சமானதாகும்.
ஸ்டாலின் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவருக்கும் எதிரானவர்களை, குறிப்பாக மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காமல் போய் புழுங்கி கொண்டு இருக்கும் வீரபாண்டியார் குடும்பத்து வாரிசுகள் போலிருக்கும் திமுகவினரை அழைத்து மதுரையில் அழகிரி ஒரே ஒரு ரகசிய கூட்டம் போட்டால் போதும். கருணாநிதி அரண்டு போய் விடுவார். அப்புறம் போடுவார் பாருங்க சூப்பர் பல்டி. தமிழகத்துக்கு தனது தலைமகன்தான் தலைமைக்கு தகுதியானவன் என்று. மறுநாளே அல்லக்கை வீரமணியிடமிருந்து பாராட்டு பத்திரம் வரும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.