Uratha Sindanai | உரத்த சிந்தனை: "சலவை'யாக்கப்பட்ட சிந்தனைகள்! சாரு நிவேதிதா | Dinamalar
Advertisement
உரத்த சிந்தனை: "சலவை'யாக்கப்பட்ட சிந்தனைகள்! சாரு நிவேதிதா
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சமீபத்தில் ஒரு "டிவி' சேனலில், "2012 எப்படி இருந்தது?' என்பது பற்றி, எழுத்தாளர்களும், சினிமா இயக்குனர்களும் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

ஓரிருவரைத் தவிர, எல்லா எழுத்தாளர்களின் முகங்களும் மலர்ச்சியே இல்லாமல் மிகவும் இறுக்கமாக இருந்தது. "எழுத்தாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமோ?' என்று வியந்தபடி நிகழ்ச்சியை கவனித்தேன்.முதலில், "2012 - இன் சிறந்த நாவல் எது? என்று கேட்கப்பட்டது. 1,000 பக்கங்கள் கொண்ட ஒரு குறிப்பிட்ட நாவலையே அங்கிருந்த அத்தனை எழுத்தாளர்களும், "சிறந்த நாவல்' என்று சொன்ன போது, நான் அதிர்ச்சி அடைந்தேன். காரணம். அந்த நாவலை என்னால் ஒரு பக்கம் கூடப் படிக்க முடியவில்லை.இது போன்ற நாவலையெல்லாம் படித்துக் களைப்பதால் தான், இவர்கள் இப்படிக் கடுவன் பூனை போல் இறுக்கமாக இருக்கிறார்களோ என்று வியந்தேன்.

ஆனால், அதற்கு அடுத்து அவர்கள் சொன்ன விஷயம், அதை விட அதிர்ச்சியாக இருந்தது. "2012இன் சிறந்த நபர் யார்?' என்ற கேள்விக்கு அவர்கள் அத்தனை பேருமே ஒரே பெயரைத்தான் கூறினர்.அவர், கூடங்குளம் உதயகுமார். அவர் பெயரை உச்சரிக்கும் போது எழுத்தாளர்களின் கண்கள் கலங்கின, உதடுகள் துடித்தன. அந்த அளவுக்கு அவர்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தனர்.உதயகுமாரைத் தேர்ந்தெடுத்தற்காக அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? காந்திஜிக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகப்பெரிய அறவழிப்போராட்டம், உதயகுமாரின் போராட்டம்தானாம். எப்படி யென்றால், டில்லியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில், ஐந்தே நாட்களில் ஒரு போலீஸ் கொல்லப்பட்டார் அல்லவா... அது போன்ற வன்முறைச் சம்பவம் எதுவும் கூடங்குளத்தில் நடக்கவில்லையாம். அதற்கு உதயகுமார்தான் காரணமாம்.

இப்படிச் சொல்வதற்கு எழுத்தாளர்கள் வெட்கப்பட வேண்டாமா? கூடங்குளத்தில் வன்முறை நடக்க வேண்டும். போராட்டக்காரர்கள் அதாவது மக்கள் சாகவேண்டும்; அதை வைத்து போராட்டத்தை பெரிய அளவில் கொண்டு போய் விடலாம் என்று எவ்வளவோ திட்டமிட்டார் உதயகுமார். ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, ஒரு வன்முறைச் சம்பவம் கூட நடக்கவில்லை. இதற்கு முழு காரணம், தமிழக முதல்வரும், அவருடைய உத்தரவை அப்படியே நிறைவேற்றிய காவல் துறையும் தான். எக்காரணம் கொண்டும் வன்முறை நடக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார் முதல்வர்.

உதாரணமாக, இடிந்த கரையில் பல மாதங்களாக போராட்டம் நடந்தும், போலீஸ் நிர்வாகம், அந்த கிராமத்தின் உள்ளேயே நுழையாமல், மிகுந்த சுய கட்டுப்பாட்டுடன் காத்திருந்தனர். மீண்டும் மீண்டும் போலீசை தூண்டி விடும் வகையில், உதயகுமார் கும்பல் பல தந்திரோபாயங்களை கையாண்டும், எதுவுமே பலிக்கவில்லை. உதயகுமார் நடத்தியது அறவழி போராட்டம் என்றால், பொதுமக்களைத் தூண்டிவிட்டு, அவர்களை போலீசாரே எதிர்பாராத வகையில், கடல்வழியாக வரச் செய்து அணு மின்நிலையத்தையும், அதைக் காவல் காத்துக் கொண்டிருந்த போலீசையும் தாக்கச் சொன்னது யார்? உதயகுமார் கும்பல் தானே? அந்த தாக்குதலில் போலீஸ்காரர்களின் மண்டை உடைந்தது வன்முறை இல்லையா? இது தான் அறவழிப்போராட்டமா? இது போன்ற போராட்டத்தையா காந்திஜி நடத்தினார்? "ஒரு ஆளாவது சாகவேண்டும், அதுதான் வன்முறை' என்கிறார்களா எழுத்தாளர்கள்?

இன்னும் சொல்லப் போனால், மக்களை எந்தக் கடல் வழியே உதயகுமார் வரச் சொன்னாரோ, அந்த இடம் மக்கள் செல்லக் கூடாத இடம். தேசப் பாதுகாப்பு கருதி சில இடங்களில் மக்கள் நடமாட்டம் தடுக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவே இப்படி உள்ளது; மீறி வருபவர்களை சுடுவதற்கும், மத்திய ரிசர்வ் போலீசுக்கு அதிகாரம் உள்ளது. அப்படிப்பட்ட பகுதியில் தான் மக்களை வரச் சொன்னார் உதயகுமார்.இப்படி வன்முறையைத் தூண்டி விட்ட அவரை, போலீஸ் கைது செய்ய வந்தபோது, கடல்வழியே படகில் தப்பி ஓடிவிட்டார். காந்திஜியின் போராட்டத்தில் இப்படி ஒரு தடவையாவது நடத்திருக்கிறதா? காந்திஜி ஒரு பிரச்னையை முன் வைத்து உண்ணாவிரதம் இருப்பார்.

அரசு அவரைக் கைது செய்ய வரும் போது, எல்லாரையும் அமைதி காக்கும் படி சொல்லிவிட்டு, சிறைக்குச் செல்வார். உதயகுமார் அப்படியா செய்தார்? மக்களைத் தூண்டி விட்டு விட்டு ஓடி ஒளிந்து விட்டாரே? அது பற்றி பத்திரிகைகள் கேட்ட போது, "நான் கைது ஆகவே நினைத்தேன். ஆனால், என் விருப்பத்துக்கு மாறாக மீனவர்கள் என்னை இட்டுச் சென்று விட்டனர் என்று ரீல் விட்டார், ஏதோ, "டிவி' சீரியல் பார்ப்பது போலவே இருந்தது அவர் தப்பியோடிய சம்பவம்.எந்த நேரத்திலாவது காந்திஜி இப்படி ஓடி ஒளிந்திருக்கிறாரா? "நான் கைதாகவே நினைத்தேன்; மக்கள் தடுத்து விட்டனர்' என்று சொல்லும் ஒருவர், தான் நினைத்ததையே நிறைவேற்ற முடியாத ஒருவர், எப்படி ஒரு போராட்டத்துக்குத் தலைமை தாங்க முடியும்?

இதில், கவனிக்க வேண்டிய இன்னொரு மிக முக்கியமான விஷயம். இந்தப் போராட்டத்துக்குப் பின்னால் இருப்பவர்கள், வெளிநாட்டிலிருந்து பெட்டி பெட்டியாகப் பணம் வாங்கிக் கொண்டு இங்கே இந்தியாவில் மதமாற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். ஆகவே, இந்த விஷயத்தில் வேறு ஏதோ உள் நோக்கங்கள் இருக்கின்றன என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது."கூடங்குளம் மின் நிலையத்தினால் ஆபத்து எதுவும் இல்லை' என்று விஞ்ஞானிகள் அடித்துச் சொல்கின்றனர். அப்படி இருக்கும் போது, எழுத்தாளர்கள் மட்டும், "ஆபத்து ஆபத்து' என்று அலறினால், என்ன அர்த்தம்? எழுத்தாளர்கள் எப்போது விஞ்ஞானிகளாயினர்?

மக்களின் நல்வாழ்வுக்காக அரசாங்கம் சில திட்டங்களைத் தீட்டும் போது, அதனால் ஏற்படும் சில பாதகமான அம்சங்களையும், மக்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உதாரணமாக ஒரு அணை கட்டும் போது, அந்த இடத்தில் உள்ள கிராமங்கள் அழியத்தான் அழியும். அந்த மக்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, அணையைக் கட்டினால் தான் எல்லாருக்குமான தண்ணீர்ப் பிரச்னை தீரும்.மலேஷியாவிலிருந்து, சிங்கப்பூர் தனிநாடாகப் பிரிந்த போது, சிங்கப்பூர் இப்போது இருப்பதைப் போல் இல்லை. நம்முடைய கண்ணம்மா பேட்டையைப் போல்தான், பல பேட்டைகள் அங்கே நிரம்பியிருந்தன. அங்குள்ள மக்களுக்கு, அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து, நகரை நவீனப்படுத்த எண்ணினார் அப்போதைய பிரதமர், லீ க்வான் யூ. மக்களைக் காலிபண்ணச் சொன்னார்.

அவர்கள், அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. அப்போது, லீ க்வான் யூ இப்படி அறிவித்தார். "குறிப்பிட்ட தேதிக்குள் நீங்களாக வெளியேறினால், நீங்கள் சொகுசான அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கலாம். இல்லையெனில் கட்டாயமாக வெளியேற்றப்படுவீர்கள். அப்போது உங்களுக்கு அரசு வீடும் கிடைக்காது, நீங்களாகவேதான் கட்டிக் கொள்ள வேண்டும்!'இப்போது சிங்கப்பூர் எப்படி இருக்கிறது என்று, நம் எல்லாருக்கும் தெரியும். 1965ல் சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த போது, அதாவது லீ க்வான் யூ அப்படி அறிவித்த போது, அங்கே ஒரு உதயகுமாரும் அவரை, மகாத்மா என்று அழைக்க, சில எழுத்தாளர்களும் இருந்திருந்தால், சிங்கப்பூர் இப்போது எப்படி இருக்கிறதோ அப்படி இருந்திருக்காது.

இந்தப்பிரச்னையில் இன்னொரு பெரிய ஆபத்து என்னவென்றால், உதயகுமாரைப் போல் யார் வேண்டுமானாலும், ஊடகங்களின் ஆதரவால் திடீரென்று பிரபலமாகி, ஆயிரம் பேரை சேர்த்து, அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடலாம் என்ற நிலைதான்.பொதுமக்கள் அதிலும், ஏழை, எளியவர்களை அன்பான பேச்சின் மூலம் வெகுசீக்கிரத்தில் நெருங்கி விடலாம். அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி மூளைச் சலவையும் செய்துவிடலாம். அதைத்தான் உதயகுமார் கும்பல் வெகு சாமர்த்தியமாகச் செய்தது.எழுத்தாளர் என்றால், அரசு எதைச் செய்தாலும் அதை எதிர்த்தே ஆகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. சில நேரங்களில் மக்களின் போராட்டங்களில் கூட நியாயம் இல்லாமல் போகலாம். ஏனென்றால், சமூக விரோதிகளால் தூண்டிவிடப்படும் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு செய்பவை அவை.

அந்த நேரத்தில் எழுத்தாளர்களும், அறிவு ஜீவிகளும், ஒட்டு மொத்தமான மனித சமூகத்துக்கு நன்மை செய்யும் பக்கமே நிற்கவேண்டும். அதை விட்டு விட்டு, தற்காலிக புகழுக்காக சமூக விரோதிகளின் பக்கம் சென்று விடக்கூடாது. அதிலும் சமூக விரோதிகளை காந்திஜியோடு ஒப்பிடுவது மகா அவமானம்.
இ-மெயில்:charu.nivedita.india @gmail.com

சாரு நிவேதிதா எழுத்தாளர், விமர்சகர்

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (23)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
soundararajan - Udumalaipettai,இந்தியா
15-ஜன-201301:05:55 IST Report Abuse
soundararajan இப்பவும் ஒரு கூட்டம் ஞாயிற்று கிழமைகளில் வீடு வீடாக ஏறி இறங்கி மதமாற்றம் செய்ய முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறது... இவர்களை எவ்வளவு தூரம் மூளை சலவை செய்து இருப்பார்கள் ? தானும் கெட்டு, பிறரையும் அதில் இழுக்க முயற்சி செய்வதற்காக, எவ்வளவு பொருளாதார வசதிகளை செய்து கொடுத்து இருப்பார்கள் ? எவ்வளவு பணம் இதில் விளையாடுகிறது ? நம்ப முடியவில்லை...
Rate this:
15 members
0 members
12 members
Share this comment
helvin - mumbai,இந்தியா
15-ஜன-201322:47:54 IST Report Abuse
helvinமதமாற்றத்துக்கும் இந்த போராட்டத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? போராட்டத்தை நடத்தும் மக்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் மதச்சாயம் பூசி உண்மையான மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்தும் உங்களுக்கு நாங்கள் எல்லாம் கிறிஸ்தவ மதத்தை தழுவி 500 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பது தெரியுமா?நாங்கள் பணத்திற்காக மதம் மாறிய கும்பல் இல்லை.வரலாறு தெரியாமல் முட்டாள் தனமாக உளறவேண்டாம்.நெய்தல் நிலத்தின் பூர்வீக குடிகளாகிய நாங்கள் இந்தியா என்ற நாடு உருவாவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இங்கே வசித்து வருகிறோம்.எங்கள் வாழ்வாதரங்களை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை.இது எங்கள் உரிமை போராட்டம் .இதை கொச்சைப்படுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை...
Rate this:
7 members
0 members
23 members
Share this comment
Cancel
Muthurv Venkatachalam - Doha,கத்தார்
15-ஜன-201301:02:25 IST Report Abuse
Muthurv Venkatachalam எழுத்தாளர் சாரு நிவேதா, நீங்கள் சமையல் எரிவாயுவிலை உயர்வு ,பெட்ரோல் விலை உயர்வு ,பஸ் கட்டணம் விலை உயர்வு ,பால் கட்டண விலை உயர்வு ,குவாரி கொள்ளையடித்தல்,கல்வி கொள்ளை ,கொள்ளை,கொலை ,கற்பழிப்பு,லஞ்சம் ,காவிரி நீர் பிரசினை ,பெரியாறு நீர் பிரசினை ,மின்சார தட்டுபாடு,விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விவசாயம் சுடுகாடு ஆகும் நிலைமை என்று எதையாவது மையபடுத்தி ஒரு கவிதை? ஒரு கதை வேண்டாம் ஒரு உண்ணாவிரதம் அல்லது ஆர்ப்பாட்டம் ? இல்லை படைப்பாளி என்ற முறையில் எதிர்ப்பு?போராட்டம் இதில் எந்த வெங்காயமும் நீங்கள் புடுங்காத போது எதையாவது செய்து மக்கள் நலம் பெற வேண்டும் ,நாட்டில் அணு உலை வேண்டாம் என்று போராடும் ஒருவரை எத்தனை வன்மமாக பேசி, அவரை விமர்சிக்கும் நீங்கள், என்ன எழுத்தாளர் ? என்ன படைப்பாளி? மத மாற்றம் கிருத்துவர்கள் செய்யும் பொது நீங்கள் எங்கு போனீர்கள்?இன்னும் தான் செய்கின்றார்கள்.........காருண்யா பல்கலை கழகம் ஆரம்பித்த பால் தினகரன் எப்படி அதை கட்டினார் என்று தெரியுமா? அப்போது எங்கு இருதீர்கள்? சிங்கபூர் மக்களை போல உங்களால உழைக்க முடியுமா? வெறும் சாதமும் பச்சமிலகாயும் தமிழன் மட்டும் அல்ல, சைனீஸ்காரனும் காலை உணவாக அதை தான் சாப்பிடுகின்றான்.......உங்களை போல வெளி நாடு மது,மாது என்று சிங்கபூர் வாசி இருபதில்லை. தமிழன் யார் அவன் கலாச்சரம் என்ன?அவன் தோழிகள் என்னவயிறு என்ன்று நாடு நடுப்பு தெரியாமல் நீங்கள் என்ன படைப்பாளி? போய் வெங்காயம் உரிங்கயா. பத்தாம் வகுப்பு படித்த சேலம் தமிழர் காற்று இல்லாமல் மின்சாரம் கண்டு பிடித்து இருகின்றார்கள். அதற்கு ஆற்றல் இருந்தால் போதும். இதனை விஞ்ஞானிகள் பரிசார்ந்த முறையில் சரி என்று இந்திய அரசு காப்புரிமை வாங்கி உள்ளது. ஆற்றல் இருந்ததால் தான் ராஜராஜா சோழன் தஞ்சை பெரிய கோவில் கட்டட கலையில் சிறந்து விளங்குகின்றான் இன்றும். அதை போல ஒன்றை உருவாக்குங்கள். உங்கள் படைப்பு அதற்கு முன்னால் கால் செருப்பு . தமிழன் ஆற்றல் தான் மின் அஞ்சல் அய்யாதுரை.அறிவு ஆற்றல் இருந்தால் அனைவரும் விஞ்ஞானி தான். அத்தகு ஆற்றல் கொண்ட தமிழர்கள் வரலாறு தெரியாமல் பேசும் உங்களுக்கு படைப்பாளி என்ற பெயர் எதற்கு? கரிகாலன் கட்டிய கல் அணை இதனை எத்துனை ஆண்டுகள் முன்பு கட்டியது என்று ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி சொல்லியது என்ன? அப்போது என்ன கரிகாலன் இஞ்சினியர் படிப்பு முடித்தா அதனை கட்டினான்? கேக்கும் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாத மானம் கெட்ட மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கி இருக்குற உங்க மரியாதையை ஒழுங்கா வசிகுங்க. இல்லை வாயை மூடி இருங்க. வாய்க்கு வந்தபடி பேசி இருக்குற போராளியை மட்டம் தட்ட வேண்டாம். உங்கள மாதிரி லைட் புடிக்கும் ஆட்கள் இருப்பதால் தான் நாராயணசாமி மாதிரி ஆட்கள் அறிக்கை விடுறாங்க. சரி. அவங்க தான் படிக்காத மக்களை வைச்சு போராட்டம் பண்ணுகின்றார்கள்....நீங்கள் படித்தவர் தானே, அரசாங்கம் என்ன முறையில் அணு கழிவுகளை சேகரம் செய்து அதை எத்து்னை ஆண்டுகளில் அதை இல்லாமல் செய்ய முடியும் என்று எந்த விஞ்ஞானியவது மக்களுக்கு சொல்ல வேண்டியது தானே? என்ன .........புடுங்குன்றார்கள்? உன்னை மாதிரி படைப்பாளி இருப்பதால் தான் மானம் கெட்ட மத்திய அரசு வாழ் மார்ட் இங்க கொண்டு வருது.
Rate this:
6 members
2 members
66 members
Share this comment
Cancel
Sujai Gangatharan - Aranthangi,இந்தியா
14-ஜன-201318:47:56 IST Report Abuse
Sujai Gangatharan எனக்கு இதில் உடன்பாடு இல்லை. சாரு நீங்கள் "ஒட்டு மொத்தமான மனித சமூகத்துக்கு நன்மை செய்யும் பக்கமே நிற்கவேண்டும்"
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
nithi - chennai,இந்தியா
14-ஜன-201300:36:13 IST Report Abuse
nithi விஜய் டிவி யின் அந்த நிகழ்ச்சி பார்த்து நானும் ஷாக் ஆனேன்.சாரு அவர்களின் கருத்து உண்மைதான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Raj Babu - Patna City,இந்தியா
13-ஜன-201321:13:09 IST Report Abuse
Raj Babu முட்டாள்கள் , யார் ? காலம் பதில் சொலும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Dhanasekaran - Toronto,கனடா
13-ஜன-201318:32:23 IST Report Abuse
Dhanasekaran நான் சாருவின் கருத்தை ஆதரிக்கிறேன். நமக்கு இப்போது மின்சாரம் வேண்டும், ஆனால் உதயகுமார் போன்றவர்கள் நாட்டு மக்களின் கஷ்டத்தை தெரிந்து கொள்ளாமல் மின்சார உற்பத்தியை போராட்டம் மூலம் தடை செய்கிறார்கள். எது போராட்டம்? மக்களுக்கு வேண்டியதை பெற்று தருவது போராட்டமா அல்லது அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை தடை செய்வது போராட்டமா? மேலும் அவருக்கு எங்கே இருந்து பணம் வருகிறது? எப்படி ஒரு தனி மனிதன் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து போராட முடியும்? தமிழ் நாடே இருட்டினில் மூழ்கி கிடக்கும் போது மின்சாரம் வேண்டாம் என்பது சுத்த பைத்தியகாரத்தனம். அதே சமயம் ஏன் மத்திய அரசாங்கம் இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருப்பது தெரியவில்லை.
Rate this:
34 members
0 members
15 members
Share this comment
Gerald Soosai Fideli - Tirunelveli,இந்தியா
15-ஜன-201312:01:19 IST Report Abuse
Gerald Soosai Fideliவெண்ணையை வைத்து கொண்டு ஏன் வேறு எங்கோ அலையை வேண்டும். நம்மிடம் சூரிய சக்தி 300 நாட்கள் இருகின்றது. சூரிய சக்தி நிறுவுவது மிகவும் எளிது. இன்னமும் நமது அரசாங்கம் ஏன் அதனை ஊக்குவிக்காமல் இருப்பது ஏனோ தெரியவில்லை. இன்னமும் நாம் சூரிய சக்தி தகடுகளை இறக்குமதி தான் செய்து கொண்டு இருகின்றோம். இன்னமும் நாம் அதிக வரி கொடுத்து தான் இறக்குமதி செய்து கொண்டு இருகின்றோம். அதிக வரியை குறைத்தால அது நமது வீடுகளில் எளிதாக பயன்படுத்த இயலும். அனால் அதை செய்ய மாட்டார்கள். உங்களுக்கு அணு சக்தி மட்டும் தான் வேண்டும். நமது நாட்டில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தில் நாம் 4ஓ சதவீதத்திற்கு மேல் வெவேறு வகைகளில் இழந்து கொண்டு இருக்கிறோம். மின்சார திருட்டு, மற்றும் இலவச மின்பொருட்களால் நம் தமிழ் நாட்டில் நாம் இழப்பது மட்டும் 30 சதவீதத்திற்கு மேல். இத எல்லாம் சரி செய்தாலே நமது மின்சார தேவையில் 40 % மேல் நமக்கு சேமிக்க முடியும். ஆனால் நமது அரசு அதை சரி செய்ய முயற்சி எடுக்காது. மேலும் மேலும் இலவச மின்பொருட்களை போட்டி போட்டுகொண்டு கொடுப்பார்கள். அதற்கான மின்சாரம் எங்கு இருக்கிறது. இது முழுக்க முழுக்க மக்கள் போராட்டம். இங்கு செலவழிக்கப்படும் அனைத்து பணதிகும் ஒழுங்கான கணக்கு இருக்கிறது. திரு உதயகுமார் மற்றும் புஷ்பராயண் ஆகியோரது அலுவலகங்களில் வருமான வரி சோதனை முடிந்து ஆறு மாதங்களாகியும் இன்னமும் நமது மத்திய அரசும் மாநில அரசும் அதன் விவரங்களை வெளியிடாதது ஏனோ? ஏனென்றல் அதில் உண்மையில்லை என்பதே உண்மை. அவர்கள் கேட்கும் வெவ்வேறு கேள்விகளுக்கு நமது அணு சக்தி துறையிடம் பதில் இல்லை என்பதே உண்மை. அந்த பகுதில் வாழும் 3 லட்சம் மக்களும் இந்திய குடிமக்களே. அவர்களது போராட்டத்தையும் மீறி வலுகட்டாயமாக இந்த அணு உலையை மக்கள் மீது இந்த அரசு திணிக்கிறது. இது ஒன்றும் நீர் சேமிக்கும் ஆணை இல்லை. இது அணு உலை. இதில் வரும் கழிவுகளை என்ன செய்யபோகிறார்கள் என்பது இனமும் முடிவு செயபடாத ஓன்று. தொடங்க போகும் இந்த நிமிடம் வரை அந்த பகுதி மக்களுக்கான அருகாமை பெரிய மருத்துவமனை 68 மற்றும் 45 மைல் தொலைவில் உள்ளது. அவசர காலத்தில் நாங்கள் எங்கே போவது?. கூடங்குளம் அருகே உள்ள அரசு பேருந்து பணிமனை 45, 26 மற்றும் 30 மைல் தொலைவில் உள்ளது.அவசர காலத்தில் அந்த பேருந்துகள் கூடங்குளம் வருவதற்கே குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். அதில் உள்ள அனைத்து பேருந்துகளையும் கொண்டு வந்தாலும் 5 மைல் தொலைவில் உள்ள 1 லட்சம் மக்களை இடப்பெயர்ச்சி செய்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. ஏதாவது பிரச்சினை என்றால் பாதிக்கப்பட போவது அருகில் இருக்கும் நாங்களும் எங்களது சந்ததியும் தான். எங்கள் மீது இந்த அரசு இந்த அணு உலையை திணிப்பதே உண்மை. மேலும் இப்போது மின் உற்பத்தி தாமதமாவது முதல் அணு உலையில் உள்ள பிரச்சினை என்பதே உண்மை. என்ன பிரச்சினை என்பது இன்னும் யாருக்கும் தெரியாது. தொடங்கும் முன்னரே பிரச்சினை இறுக்கும் போது தொடங்கிய பின் என்னென்ன சந்திக்க வேண்டி வரும் என்று தெரியவில்லை. இந்த அணு உலை தயாரிப்பில் ஈடுபட்ட அணு விஞ்ஞானிகள் இந்த உலையில் ௧௨ வகையான பிரச்னைகள் உள்ளதாகவும் அவை சரி செயபடவேன்றும் என்றும் ரஷ்ய அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது. இது பற்றி எல்லாம் அணு மின் துறை மௌனம சாதிப்பது ஏன்? இந்த அணு உலை எங்கள் மீது திணிக்கும் போது எங்களுக்கான மருத்துவ வசதிகளை ஒழுங்காக செயுங்கள். அவசர கால பயிற்சியை மக்கள் முநிலையில் செய்யுங்கள். நீங்கள் இருக்கும் கனடாவில் இப்படி பாதுகாப்பு இல்லாமல் ஒரு தொழிற்சாலை கூட தொடங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. நமது இந்தியாவில் மக்கள் பாதுகாப்பு என்பது ஒன்றுமே இல்லை....
Rate this:
2 members
0 members
19 members
Share this comment
Cancel
Arun - TN,இந்தியா
13-ஜன-201315:08:04 IST Report Abuse
Arun முற்றிலும் பொய்...
Rate this:
14 members
0 members
25 members
Share this comment
Cancel
A.SESHAGIRI - ALWARTHIRUNAGARI,இந்தியா
13-ஜன-201312:44:58 IST Report Abuse
A.SESHAGIRI சாரு அவர்கள் மற்ற எல்லோரும் விமர்சிக்க தயங்கிய ஒரு விஷயத்தை ஆழமாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளார். நம் நாடு இருக்கும் நிலையில் நமக்கு தற்சமயத்திற்கு அணு மின் உற்பத்தியை தவிர வேறு வழியில்லை.மேலும் அப்துல்கலாம் போன்றவர்கள் ஆபத்து இல்லை என்று உறுதி அளித்துள்ள நிலையில் நாம் இதை ஏற்கத்தான் வேண்டும்.உதயகுமார் பற்றி அவர் கூறியுள்ள சிலகருத்துக்கள் நியாயமானவையும் கூட.
Rate this:
55 members
1 members
37 members
Share this comment
Chandramohan R - Aalen,ஜெர்மனி
15-ஜன-201302:52:46 IST Report Abuse
Chandramohan Rஐயா, நீங்கள் சொல்வது ஒருவேளை உண்மை என்றே வைத்துக்கொள்வோம், அதற்காக திரு.கலாம் பெயரை பயன்படுத்த வேண்டாம். அடிப்படையில் திரு.கலாம் அவர்கள் அணு விஞ்ஞானி அல்ல. அவர் ஒரு விண்வெளி, விமான ஆராய்ச்சியாளர், அவ்வளவே. மேலும், கடந்த 30-35 ஆண்டுகளில் அவர் எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகளை நீங்கள் விரல் விட்டு எண்ணி விடலாம். அதைவிட முக்கியமானது, ஒரு தனி மனிதனால் 2000 மெகா வாட் உற்பத்தி நிலையத்தின் நிலைமையை 2 மணி நேரத்தில் கணித்து விட முடியாது. அதுவும் , அணு ஆராய்ச்சி துறை சம்பந்தப்படாதவர்களால் சாத்தியமே இல்லை. அதனால் திரு.கலாமின் கூற்றை ஏற்க முடியாது. மேலும், பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவி மற்றும் இழப்பீடு வழங்குவது யார் என்பது தெளிவு படாமல் தான் உள்ளது. ரஷ்ய மற்றும் இந்திய அரசுகள் மிகத்தெளிவாக கூறிவிட்டன , தங்களால் இழப்பிடு வழங்க முடியாது என்று. உங்களுக்கு போபால் விபத்து நினைவில் இருக்கும் என நான் நம்புகிறேன். அவ்விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு 27-28 ஆண்டுகளாக இழப்பீடு தரவில்லை. இப்படி ஒரு சட்ட சிக்கல் உள்ள நாட்டில் பேரிடர் மேலாண்மைக்கு வழிவகை ஏதேனும் இல்லாத வரையில் இப்படி ஒரு அணு உலையை திறக்காமல் இருப்பதே நன்று. ஜப்பான் போன்ற ஆராய்ச்சியில் வளர்த்த நாடுகளாலேயே விபத்துகாலங்களில் என்ன செய்வது என்பதில் தெளிவு இல்லாமல் உள்ளது. இவ்வேளையில் இந்தியா போன்ற நாடுகள் எட்டி நிற்பதே நல்லது. தமிழகத்தை தவிர இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இரண்டு இடங்களில் அணுமின் நிலையங்கள் இல்லை. மேற்கு வங்காள அரசு அணுமின் நிலையம் அமைக்க அனுமதி தரவில்லை. வெறும் 4000 மெகா வாட் மின்சாரத்திற்காக இந்தியா ஆண்டு தோறும் 2 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்கின்றது. இதை சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்திற்காக செலவு செய்தால் இதைவிட பன்மடங்கு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்....
Rate this:
5 members
1 members
27 members
Share this comment
Cancel
Alex - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-201312:10:35 IST Report Abuse
Alex Great Charu, how is the relationship with you and Nithianada now a days ?
Rate this:
12 members
1 members
76 members
Share this comment
Cancel
Alex - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-201312:09:28 IST Report Abuse
Alex Great Charu, Then now a days any relationship with you and Nithi ?
Rate this:
14 members
0 members
52 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்