1000 Canteen will open in chennai by govt : TN CM | இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெயலலிதா சூப்பர் பாஸ்ட் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்

Updated : ஜன 13, 2013 | Added : ஜன 13, 2013 | கருத்துகள் (177)
Advertisement
இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்

செனனை: இது வரை தமிழகத்தில் இல்லாத ஒரு புதிய திட்டமாக சிற்றுண்டி அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது, சுகாதாரமான குறைந்த விலையில் உணவு கிடைக்க வழி செய்யும் நோக்கில் சென்னையில் மலிவு விலை சிற்றுண்டி துவங்கப்படுகிறது. இந்த உணவகத்தில் இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் விற்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான முதல்வர் அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வயிற்றுக்கு சோறிட வேண்டும்: நோயற்ற சமுதாயம் அமைத்திட வேண்டும் என்ற நோக்கில் சத்தான உணவு வழங்கும் பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது. வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியாரின் நோக்கத்தின் அடிப்படையில் சென்னையில் மலிவு விலை சிற்றுண்டி அமைக்கப்படுகிறது.


ஆயிரம் சிற்றுண்டி :

சென்னையை பொறுத்தவரை தள்ளுவண்டிகாரர்கள், பாரம் தூக்குபவர்கள், கூலி வேலை செய்பவர்கள், மேலும் தனியார் நிறுவன ஊழியர்கள் என பலர் சுகாதாரமான உணவு கிடைக்காமலும், செலவு அதிகம் ஆவதாலும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சென்னையில் ஆயிரம் சிற்றுண்டி அமைக்கப்படும். இதில் முதல் கட்டமாக வார்டு ஒன்றுக்கு ஒரு உணவகம் வீதம் 200 கடைகள் திறக்கப்படும்.

இங்கு ரூ. 5 க்கு சாம்பார் சாதம் , ரூ. 1க்கு இட்லி, ரூ. 3 க்கு தயிர்சாதம் விற்கப்படும். இதற்கென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மாதம்தோறும் 500 மெட்ரிக் டன் அரிசி வழங்கிட ஆணை பிறப்பிக்கப்படுகிறது. சிற்றுண்டி தயாரிக்கும் முறையை மாநகராட்சி நகர்ப்புற அலுவலர்கள் கண்காணிப்பார்கள். இந்த திட்டம் மூலம் சென்னையில் பலரும் பயன் அடைவர் இவ்வாறு இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.ஜெ., பொங்கல் வாழ்த்து:

பொங்கல் திருநாளை முன்னிட்டு முதல்வர் ஜெ., வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: தமிழர் திருநாளாம் பொங்கல் நன்நாளில் இல்லம்தோறும் பொங்கட்டும் பொங்கல், இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு தமது இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (177)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun - Charlotte,யூ.எஸ்.ஏ
17-ஜன-201300:47:06 IST Report Abuse
Arun Good Idea . To make sure the quality of the food is maintained , we should ask CM and all MLA's to come to canteen and eat here everyday.
Rate this:
Share this comment
Cancel
Krish Panchu - Chennai,இந்தியா
15-ஜன-201307:46:57 IST Report Abuse
Krish Panchu முதல்வரின் இது ஒரு நல்ல திட்டம். வாழ்த்துக்கள். இதனைப்போல பண்டிகை காலங்களில் பழம் மற்றும் பூ விலைகள் மிக மிக அதிக விலைக்கு கொள்ளை லாபத்திற்கு விற்கப்படுவதை தடுத்து விளைச்சலக்கு ஏற்ப மிக நீயாய விலையில் அரசே விற்பனை செய்தால் மக்களுக்கு நல்ல மகிச்சியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Anniyan Bala - Chennai,இந்தியா
14-ஜன-201306:25:37 IST Report Abuse
Anniyan Bala இது சாத்தியம் ஆனால் தள்ளுவண்டிகாரர்கள், பாரம் தூக்குபவர்கள், கூலி வேலை செய்பவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இது வரபிரசாதமே. சரவணபவன், ஆனந்தபவன் சென்று சாப்பிடுவதை விட கையேந்திபவன் எவ்ளவோ மேல்.
Rate this:
Share this comment
Cancel
sulochana kannan - sydney,ஆஸ்திரேலியா
14-ஜன-201302:51:12 IST Report Abuse
sulochana kannan திட்டம் என்னவு சூப்பர் தான். ஆனால் அம்மாவுக்கு தெஇர்யுமா எப்படி எப்படி எல்லாம் இதிலும் கொள்ளை அடிப்பார் கள என்று?பயன் பெறப்போவது என்னமோ போலிசும் , நடுத்தரத்தினருமே. தவிர பயங்கர கூட்டம், தள்ளு ,முள்ளு மிதி, நசுங்கல் என்று வீணே சாவார்கள். தவிர 200 இட்லியும் 20 சாப்பாடும் கொடுத்து விட்டு தீர்ந்து விட்டது என்று சொல்லி வேலை செய்பவர்கள் கொண்டுபோய் தனியாக மேலே காசு வைத்து விற்பார்கள். இதெல்லாம் நிச்சயம் நடக்கும் , ஊழல் செய்ய புதுபுது வழிகள். இந்தியன் திருந்தி நாலா ஒழிய எந்த திட்டமும் வெற்றி பெறாது. பார்க்கலாம் . என்றாலும் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
babu - tiruchi,இந்தியா
14-ஜன-201302:47:11 IST Report Abuse
babu ஒரு ரூபாய்க்கு இட்லி என்றால் தரம் எப்படி இருக்கும், ஒரு யூனிட் மின்சாரம் எவளவு.
Rate this:
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
14-ஜன-201306:51:22 IST Report Abuse
K.Sugavanamபழநியில்பாத யாத்திரை வரும் பக்தர்களுக்கு ஏழு இட்டலி பத்துரூபாய்க்கு சாம்பார் சட்னிகளுகன் தரமாக சுகாதாரத்துடன் வழங்கும் போது இது சாத்தியமே.அனைவரும் பயனடையலாம்.மொரார்ஜி தேசாய் ஜனதா சாப்பாடு ஆணை இட்டு விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவந்தது இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நிகழ்வு வாசக நண்பர்கள் அறியவேண்டும்/.......
Rate this:
Share this comment
Cancel
MentalTamilan - London,யுனைடெட் கிங்டம்
14-ஜன-201302:20:51 IST Report Abuse
MentalTamilan நல்ல திட்டம்தான், ஆனால் எந்த திட்டமும் தீவிர கண்காணிப்புடன் நடைமுறை படுத்தினால் மட்டும்தான் மக்களுக்கு போய் சேரும், இல்லையென்றால் குடுக்குறவங்களுக்கும் கெட்ட பேருதான். நடுவுல இருக்குறவன்தான் எப்பவும் இந்த மாதிரி திடம் எல்லாத்தையும் அனுபவிகறான்..... தமிழனோட தலை எழுத்து
Rate this:
Share this comment
Cancel
Chitrarasan Subramani - chennai,இந்தியா
14-ஜன-201301:51:30 IST Report Abuse
Chitrarasan Subramani வட்டத்திற்கு ஒன்று என்கிறபோதுதான் சந்தேகம் ஏற்படுகிறது ,எதிர் கட்சி கவுன்சிலர் உள்ள வார்டுகளில் ? ஒரு ரூபாயில் ஒரு இட்லி என்றால் அரிசி ஓசியில் அப்புறம் பணியாளர் சம்பளம், எரி பொருள், மற்ற செலவுகள் ? மக்கள் வரி பணம் பாழ் . வார்டுக்கு ஒன்று என்றால் அதை வாங்க செல்ல எப்படி? C.M.B.T, அரசு மருத்துவ மனைகள் .கடைகளில் அடிக்கப்படும் கொள்ளையை தடுக்க அங்கு மட்டும் திறந்தால் போதும்.மேலும் கை வண்டியில் விற்பவர்கள் இங்கு விற்கப்படும் பொருளை மொத்தமாக வாங்கி,வெளியில் அதிக விலைக்கு விற்காமல் இருக்க வேண்டும்,ஆளும் கட்சியினரின் ஆதிக்கம் இருக்ககூடாது .- சிற்றரசன் சுப்பிரமணி .சென்னை .
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
14-ஜன-201301:45:33 IST Report Abuse
ganapathy இது சரியான திட்டம் தான். உழைப்பவனுக்கு நல்ல சுகாதாரமான உணவு கிடைத்தால் அவன் நோய் நொடி இல்லாமல் வேலை செய்வான். டாக்டர் செலவு மிச்சம். உபநிஷத்தில் ஒரு பிள்ளை வேதம் படிக்கிறான். அவனுக்கு எது பிரம்மம் என்று சொல்லி தர அவனுடைய தகப்பன் (குரு ) அவனுக்கு உணவை சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டு வந்து பட்டினி போட்டு விடுவார். அவன் கற்றதை நினைவுக்கு கொண்டு வர முடியாது இருப்பான். பின்னர் அவனுக்கு சிறிது சிறிதாக உணவை அளித்து பின்னர் சில நாட்கள் கழித்து வேதம் சொல்ல சொல்ல அவன் படித்தது நினைவுக்கு வரும். அன்னமே பிரம்மம் என்ற உண்மை விளங்கும். சத்துணவு பள்ளியில் கொடுக்கபடுவது போல, சுகாதாரமான உணவு வேலை செய்பவனுக்கும் கிடைக்க வேண்டும். நீங்கள் நான் பஸ்ஸில் பயணம் செய்தால் சுகாதாரம் அற்ற விலை அதிகமான தரமற்ற உணவை மோட்டல்களில் வாங்கி சாப்பிட வேண்டி இருப்பதை நினைத்தால் இந்த திட்டத்தின் அருமை புரியும்.... ரஜினி காந்த் avargaley தரமற்ற உணவை சாப்பிட்டு தான் நோய்வாய் பட்டார்.
Rate this:
Share this comment
Cancel
senthil kumar - Namakkallan,யுனைடெட் கிங்டம்
14-ஜன-201301:32:39 IST Report Abuse
senthil kumar " தனி ஒருவனுக்கு உணவு இல்லை என்றால் ஜெகத்தினை அழிப்போம்" என்று சொன்னான் பாரதி. பசித்த வயற்றிற்கு சோறு கொடுப்பதை விட வேறு என்ன பெரிய புண்ணியம் இருக்க முடியும்? தனது kingFisher நிறுவனத்தில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிளார்களுக்கு சம்பளம்/ சோறு கொடுக்க யோக்யதை இல்லாத விஜய் மல்லையா திருப்பதி உண்டியலில் மூன்று கிலோ தங்கம் போட்டு என்ன பயன்?? காலம் அதற்க்கு பதில் சொல்லும். சத்துணவு கொண்டு வந்து ஏழை குழந்தைகளின் பசி தீர்த்த MGR அவர்களை கடைசி வரை எந்த நாயும் ஜெயிக்க முடியவில்லை..... ஏன்? அவர் குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவில்லை, பசி தீர்த்த புண்ணியம் அவருக்கு அரசியல் சில்லறைத்தனம் பாராமல் இந்த அருமையான திட்டத்தை அனைவரும் support செய்ய வேண்டும். ஊரை ஏய்த்து நீ சொத்து சேர்த்திருந்தாலும் இப்போதும் ஒன்றும் குறைந்து போகவில்லை....பசித்த நாலு பேருக்கு சோறு போடு, நல்லது செய்....கர்மம் வெல்லும்.
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
14-ஜன-201301:24:28 IST Report Abuse
Yoga Kannan அட தின்னுருட்டிகளா...... டெல்டா மாவட்டத்தில அவனவன் தற்கொலை பண்ணிக்கிட்டு சாகுறான். அதுக்கு ஒரு அறிவிப்பு விடமுடியாத அம்மையார்...உன்னுடைய காதுல கிலோமீட்டர் கணக்குல பூவை அதுவும் தமிழன் திரு நாள் சிறப்பு பூ சுத்தல் (ஜெ சூப்பர் பாஸ்ட் பூ சுத்தல்) ஏற்கனவே இலவசம் என்ற பெயரில் தமிழனை சோம்பேறியா ஆக்கியாச்சி ....இனி ..... என்னவெல்லாம் நடக்கப் போவுதோ... எல்லாம் பாராளுமன்ற தேர்தல் சாமிக்கு தான் வெளிச்சம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை