தமிழகத்தில் அதிகரித்துவிட்ட லஞ்சம் மற்றும் கெடுபிடியால், பாதிக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நடத்த முடியாமல் திணறிவருகின்றனர். இதில் பலரும் தங்களது பள்ளியை விற்கவும், மூடவும் தயாராகிவருகின்றனர்.
தமிழகத்தில் சமீப காலமாக தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. தற்போது வரை, சி.பி.எஸ்.சி., பள்ளிகள் உள்பட, 15 ஆயிரம் பள்ளிகள் தனியார் வசம் உள்ளன. இவற்றில், 1,000 பள்ளிகள் பிரபலமான பள்ளிகளாகவும், 3,000 பள்ளிகள் வரை, லாபத்தில் இயங்கும் பள்ளிகளாகவும் உள்ளன.மீதமுள்ள பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு, அரசின் கெடுபிடி, மின்சாரக்கட்டணம் உள்ளிட்ட பிரச்சனைகளால், பள்ளி நடத்துவதே சவாலான விசயமாக மாறியுள்ளது.
பள்ளி அங்கீகாரத்துக்கு, ஐந்து லட்சம் வரையிலும், சி.பி.எஸ்.சி., பள்ளியாக இருந்தால், 35 லட்ச ரூபாயும் வரையும் லஞ்சமாக வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதுமட்டுமின்றி, உள்ளூர் கட்சி பிரமுகர்களையும் கவனித்து, அவர்களின் பரிந்துரையும் அங்கீகாரத்துக்கு அவசியம். அதுமட்டுமின்றி, தாசில்தார், தீயணைப்புத்துறையினரிடம் சான்றிதல், கட்டிட உரிமை சான்று, கட்டிட உறுதிச்சான்று, சுகாதாரச்சான்று உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும், பல லட்ச ரூபாய் வரை லஞ்சமாக தர வேண்டியுள்ளது.
கட்டாயக்கல்விச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், 25 வகையான புது விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வகுப்பறைக்கும், ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்கள், அதற்கு மேல், 40 மாணவர்கள் வீதம், ஐந்து வகுப்பறைகள் மட்டுமே நடத்த வேண்டும். வாகனங்களை இயக்குவதற்கு பல்வேறு கெடுபிடிகளையும் அரசு விதித்துள்ளது.டீஸல் விலை உயர்வு, டிரைவர் தட்டுப்பாடு, அதில் ஏற்படும் விபத்து அபாயங்கள் உள்ளிட்ட சிக்கல்களால், பலருக்கும் பள்ளி நடத்துவது நஷ்டத்தை தருவதாக மாறியுள்ளது. இதனால் பலரும் பள்ளியை மூடிவிட்டு, வணிகவளாகம் மற்றும் திருமண மண்டபம் உள்ளிட்டவையாக மாற்றிவிட முடிவு செய்துள்ளனர். அதில் சிலர் பள்ளியை விற்பனை செய்யவும் தயாராகியுள்ளனர்.
தமிழ்நாடு நர்ஷரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:இன்றைய நிலவரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே பள்ளியை இயக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. நவீன கட்டிடம், புதிய வசதி, வாகன வசதி, பிரபலமான பெயர் ஆகியவை இருந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை உள்ளது. இவை இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது.அரசு தரப்பிலும், பலவித நெருக்கடிகள் உருவாகியுள்ளன. நல்ல ரிசல்ட் கொடுத்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை இருக்கும். ஆனால், டெட் தேர்வு எழுதி, 80 சதவிகித திறமையான ஆசிரியர்கள் திடீரென அரசுப்பணியில் சேர்ந்துவிட்டனர். இதனால் ஆசிரியர் பற்றாக்குறையும் உருவாகிவிட்டது. மேலும், ஆசிரியர்களுக்கு அதிக அளவில் சம்பளம், இ.எஸ்.ஐ., - பி.எஃப்., உள்ளிட்ட சலுகைகளும் வழங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
அதிகமாகிவிட்ட மின்கட்டணம், அதிகாரிகளுக்கு லஞ்சம் என, பல மடங்கு செலவு அதிகமாகிவிட்டதால், பள்ளியை நடத்துவது பெரும் சிரமமான விசயமாக மாறிவிட்டது. குறிப்பாக, 500க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள நர்சரி பள்ளிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதில் பெரும்பாலானோர் பள்ளிகளை மூடவும், விற்கவும் தயாராகிவிட்டனர். பள்ளிகள் நடத்துவதை விட, திருமண மண்டபமோ, வணிகவளாகமோ நல்ல லாபத்தை தரும் என்ற முடிவுக்கு பலரும் வந்துவிட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.
-நமது சிறப்பு நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
175 வருடம் 300 வருடம் ஆகும் பள்ளிகள் தரம் இல்லாமல் சாதி பூதம் மத தலைவர்கள் ஆதிக்கம் மூலம் அழிகிறது. சில கல்வி வியாபாரிகள் தவிர பலர் விற்பனைக்கு விலை பேசும் கல்வி கடைகள். இதில் எரியும் வீட்டில் பிடிங்கி தின்ன அலயும் கல்வி துறை அதிகாரிகள் அமைச்சர்கள் . பேசாமல் இதுவரை பிடிங்கி தின்றது லாபம் என்று லஞ்சம் கேட்பவர்கள் வசம் விற்று விடலாம் . காவல்துறை வசம் மாநகர ஆட்டோ பல உள்ளது போல கல்வி கடைகள் கல்வி அதிகாரிகள் அமைச்சர்கள் வசம் ... பாவம் இதில் வேறு இடம் மாறுதல் கேட்டால் 3.5 லச்சம் வரை கொடுத்துதான் பல ஆசிரியர்கள் ஊர் பக்கம் இடம் மாறுதல் பெற்று உள்ளார்களாம் ??? ஒரு 100 ரூ சில பொருட்கள் கொடுத்தால் மக்கள் மறந்து விடுவார்கள் அப்புறம் தேர்தல் சமயம் சில ஆயிரம் - வாழ்க தமிழர் ஜனனாயகம்...
டெட் தேர்வு எழுதி, 80 சதவிகித திறமையான ஆசிரியர்கள் திடீரென அரசுப்பணியில் சேர்ந்துவிட்டனர். இதனால் ஆசிரியர் பற்றாக்குறையும் உருவாகிவிட்டது. மேலும், ஆசிரியர்களுக்கு அதிக அளவில் சம்பளம், இ.எஸ்.ஐ., - பி.எஃப்., உள்ளிட்ட சலுகைகளும் வழங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இதிலிருந்தே தெரியவில்லையா . இதுவரை எந்த சலுகைகளும் கொடுக்காமல் கொள்ளையடித்தது . இவர்கள் முழு பூசணிக்காய் சோற்றில் அல்ல சோற்றுப்பரிக்கையில் மறைக்கப்பார்கிறார்கள். எந்த தனியார் பள்ளியில் அதிக அளவில் சம்பளம், இ.எஸ்.ஐ., - பி.எஃப்., உள்ளிட்ட சலுகைகள் வழங்குகிறார்கள் . என் மனைவியும் 2 ஆண்டுகளுக்கு முன்வரை தனியார்பள்ளியில் (கிறிஸ்துவ ) சென்னை , குரோம்பேட்டையில் 12 ஆண்டுகள் மிக மிக குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தவர் . எதோ +2 முடித்துவிட்டு வேலைக்கு போகவில்லை. அவள் MA . Mphil BEd . பொருளாதார சூழ்நிலையின் காரணமாக கஷ்டத்தை ஏற்றுக்கொண்டாள். ஆசிரியருக்கு உட்கார நாற்காலி கூட கிடையாது . எட்டு மணி நேரமும் , சிறப்பு வகுபிற்கும் நேரம் காலம் பார்க்காமல் வருடம் முழுதும் உழைத்து கால்வலியால் அழுது துடிக்கும் போது எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள் இதுவும் சித்ரவதை தான் . ஞாயிறு , மற்றும் விடுமுறை நாட்கள் கூட பள்ளியுண்டு . பெற்றோர்களும் இதற்க்கு உடந்தை விடுமுறை நாட்கள் கூட பள்ளி வையுங்கள் இவர்களின் லூட்டிகள் தாங்க முடியவில்லை என்கின்றனர் . ஆசிரியர்களுக்கும் குடும்பம் உண்டு என்பதை யாரும் நினைத்து பார்த்தது கூட கிடையாது நானும் என் குழந்தை , மனைவியுடன் இருப்பதற்காக முழு ஆண்டு விடுமுறை சேர விடுமுறை எடுத்துவந்தால் இப்ப வரவேண்டாம் நவம்பர் , டிசம்பர் சேர வர சொல்லுங்கள் . முழு ஆண்டு விடுமுறை மாதம் முழுதும் வந்தால் தான் அந்த மாதம் சம்பளம் என்று அறிவுரை , மிரட்டல் வேறு . குடும்பத்தை விட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாங்கள் குடும்பத்தினருடன் இருக்க இவர்கள் கூறும் அட்வைஸ். இந்த காரணத்திற்காகவே என் மனைவியை வேலையை விட வைத்தேன் . என்னை மாதிரி இன்னும் எத்தனையோ குடும்பங்கள் வெளியே சொல்லமுடியாமல் உள்ளன . லாப நோக்கோடு செயல்படும் இந்த பள்ளி இருந்தால் என்ன மூடினால் என்ன ? சந்திரகுப்தன், தோஹா, கத்தார் .
ஒரு காலத்தில் நம் நாட்டிற்கே கல்வி அறிவிற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழகம் இன்று மோசமான் நிலைக்கு போன காரணம்
1. எதிலும் அரசியல் தலையீடு - லஞ்சம் இந்த கேடு கெட்ட அரசியல் வாதிகள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் லஞ்ச அரசு அதிகாரிகளுக்கு கடும் தண்டனை இல்லை - திமிர் தனத்தில் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் பாமர மக்கள் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது
2. புற்றீசல் போல் கல்வி கூடங்கள் திறக்க அனுமதி வழங்க வேடியது பின்பு இது போல் தான் நிலை வரும்.
3. கல்விக்காக கூடங்கள் இல்லை - லாப நோகிர்க்காக தான் தொடங்க படுகின்றது - நடத்துவர்களும் லஞ்ச அரசியல் வாதிகள்
4. பள்ளி அங்கீகாரத்திற்கு என்று நடைமுறைக்கு ஒவ்வாத லஞ்சத்திற்கு வழி வகுக்கும் வழிமுறைகள் - எதற்கு இதற்கென்று ஒரு துறை - செயலர்கள் - அதிகாரிகள் - பணியாளர்கள் தேவை என்பது பொது மக்களின் கேள்வி
தனியார் கல்விக்கூடங்கள் மூடத்தொடங்கியிருப்பது நல்ல விஷயம்தான், வருத்தம் அளிப்பது லஞ்சமும், ஊழலும். மக்கள் தேசப்பற்றுள்ள, படித்த, திறமையான இளைஞர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினை தீரும். அரசு பள்ளிகளை மேம்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளவேண்டும். தமிழ்வழி கல்வியே சிறந்ததென மக்கள்ளும் வுனரவேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.