E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தொடர் மின்வெட்டு கிரைண்டர் கல் உற்பத்தி பாதிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜன
2013
21:06

அனுப்பர்பாளையம்:தொடர் மின்வெட்டால், அம்மிக்கல், ஆட்டுக்கல், கிரைண்டர் கல் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. எனவே, சீராக மின்சாரம் வழங்க வேண்டுமென உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், எஸ்.பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தபாளையம், நல்லகட்டிபாளையம், சர்க்கார் பெத்தாம்பாளையம், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட கல் பட்டறைகள் உள்ளன. ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் தயாரிக்கப்படுகின்றன. சிறிய முதலீட்டில், இயந்திரம் மூலம் குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். இத்தொழிலை நம்பி, 5,000 தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்கள், கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை மற்றும் ஆந்திர மாநில பகுதிகளுக்கும் சென்று ஆர்டர் பெற்று வந்து உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். இப்பகுதியில் அதிக அளவில் பாறைகள் உள்ளன. இங்கு வெட்டி எடுக்கப்படும் கருங்கல் மிக கடினமானதாகவும், எளிதில் உடையாத தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
அதன் காரணமாகவே, ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் செய்ய உகந்ததாக உள்ளது. எளிதில் உடையாமல் தரம் உள்ளதாக இருப்பதால், வியாபாரிகள் பலர் இப்பகுதிக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். இதற்குமுன் ஆர்டர்கள் ஏராளமாக வந்தன.
தற்போது ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டால் ஆர்டர் குறைந்து உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. இத்தொழி லுக்கு 90 சதவீதம் மின்சாரம் அவசியம். உற்பத்தி குறைவால், தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதை நம்பியிருந்த தொழிலாளர்கள் பலர், திருப்பூர் பனியன் தொழிலுக்கு செல்வதிலும், கால்நடை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர் மின்வெட்டு, தொழிலாளர் பிரச்னை போன்றவற்றால், தொழில் செய்ய முடியாமல் பலர் பட்டறையை மூடி வருகின்றனர்.
பட்டறை உரிமையாளர் ராஜாமணி கூறுகையில், ""இத்தொழில் மின்சாரத்தை நம்பியே உள்ளது. போதிய ஆர்டர் இருந்தும் மின்வெட்டால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன், 40 எண்ணிக்கையில் பொருட்கள் தயாரித்தோம்; தற்போது 20 மட்டுமே தயாரிக்க முடிகிறது. வேலை குறைந்ததால் வருமானம் இல்லை.
""தொழிலாளர்கள் வேறு வேலை தேடிச் செல்கின்றனர். அரசு ஊக்கம் அளித்தால், தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. அதிகமானோருக்கு வேலை கிடைக்கும். இது, குடிசை தொழில் என்பதால் வங்கிகள் கடன் தருவதில்லை. பெரிய அளவில் பட்டறை அமைக்க குறைந்த வட்டியில் கடன் வழங்க உதவ வேண்டும். தடையில்லாமல் சீராக மின்சாரம் வழங்க வேண்டும்,'' என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இயற்கைசெல்வி - உண்மைகூரும்சிட்டி,டிரினிடட்&டோபாகோ
19-ஜன-201302:13:59 IST Report Abuse
இயற்கைசெல்வி இது இயற்கையின் சுழற்சி நீ பாட்டுக்கு அம்மிக்கல்லு, ஆட்டுகல்லு, கொலவிகல்லு அப்படின்னு இயற்கை வளத்தை சுரண்டிக்கிட்டே இருந்தா அது ஆப்பு வச்சுரும். சுனாமி இயற்கையின் சின்ன அட்ஜஸ்ட்மென்ட் அம்புட்டுதேன். அனைத்தும் இயற்கையின் எல்லைக்குள் வரம்பிற்குள் நியதிக்கு உட்பட்டதே...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
manimaran - vayalaikeeranur,இந்தியா
16-ஜன-201318:31:13 IST Report Abuse
manimaran சமோந்த பட்ட அம்மா நீங்கதான் முடிவெடுக்க வேணும். ரொம்ப ஸ்லொவ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.