சாகர்:""இந்திய பெண்கள், "ஜீன்ஸ்' பேன்ட் அணிவது நல்லதல்ல,'' என, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், மாநில அமைச்சருமான, பாபுலால் கவுர் கூறினார்.
டில்லியில், மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு, பெண்களின் ஆடை விஷயத்தில், பிரபலங்கள், தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் பலர், சர்ச்சைகளிலும் சிக்கி கொள்கின்றனர்.
மத்திய பிரதேச, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநில அமைச்சருமான, கைலாஷ் விஜய்வர்கியா, சில நாட்களுக்கு முன், "பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள லட்சுமணன் ரேகையை அவர்கள் மீற கூடாது' என, பேசினார். இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில், மாநில முன்னாள் முதல்வரும், இப்போதைய அமைச்சருமான, பாபுலால் கவுர், சாகர் என்ற இடத்தில் பேசியதாவது:வெளிநாட்டு பெண்கள், ஜீன்ஸ் பேன்ட், டீ-ஷர்ட் அணிவது வழக்கம். மதுபானங்களை அருந்திய படி, வேறொரு ஆண்களுடன் நடனமாடுவது அவர்களுக்கு வழக்கம். இந்த பழக்கவழக்கங்கள், அவர்களுக்கு சரியானதாக இருக்கலாம்.ஆனால், நம் நாட்டில் இதுபோன்ற பழக்கவழக்கங்களை ஏற்று கொள்ள முடியாது. ஜீன்ஸ் பேன்ட் அணிவதும், டி-ஷர்ட் போட்டு கொள்வதும் நல்லதல்ல. எனினும், எது நல்லது, எது கெட்டது என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, பாபுலால் கவுர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆள் பாதி ஆடை பாதி. அழகுக்கோ,கவர்ச்சிக்கோ ஆடையும் ஒரு காரணம். இதை யாரும் மறுக்க முடியாது.பேஷன் ஷோக்களும்,அழகுப்போட்டிகளும், ஆடை வடிவமைப்பாளர்களும் ஒரு வகையில் இதற்கு பொறுப்பாவார்கள்.இந்நிகழ்ச்சிகளில் அறிமுகமாகும் ஆடைகளே பெரும்பாலும் புழக்கத்தில் வருகின்றன.இம்மாதிரி கவர்ச்சி ஆடைகளை தவிர்த்தோமானால் டிசைனர்களும் அதன் பக்கம் செல்ல மாட்டார்கள்.இது பெண்களூக்கு மட்டுமல்ல.ஆண்களுக்கும் பொருந்தும். இப்போதெல்லாம் இளைஞர்கள் அணியும் பேண்ட் இடுப்புக்கு கீழே இருக்கிறது.சில சமயங்களில் இடுப்பிலிருக்கிறதா அல்லது மடியிலிருக்கிறதா என்று அறியமுடியாவண்ணம் உள்ளாடைகள் மட்டும் தெரிந்து கொண்டிருக்கிறது. ஜீன்ஸ் போட்டிருந்ததனால் தான் கற்பழித்தேன்னு யாரும் வாக்கு மூலம் கொடுக்க மாட்டார்கள். கூடுமானவரை உணர்வுகளை தூண்டும் வகையிலான ஆடைகளை தவிர்ப்பது நல்லது.
ஒரு காலத்தில் சினிமாவில் நடிகைகள் கவர்ச்சியே காமிக்க மாட்டார்கள் , அதற்கு என்று ஜோதிலட்சுமி,ஜெயமாலினி என ஏற்பாடு செய்தார்கள் திரையுலக ஜாம்பவான்கள். அதனால் குடும்பம் எது, கிளுப் எது என அக்கால மனிதர்கள் நன்கு பகுத்து அறிந்தனர். இன்றோ அந்த 2 பேர் ரோலையும் முன்னணி நடிகைகளே செய்வதால், குடும்பம், கிளப் 2 ம் ஒன்றே என்ற மூட நம்பிக்கைக்கு ஆட்பட்டுவிட்டனர் இக்கால மனிதர்கள். அதனால் எங்கும் எதிலும் அக்கிரமம் . இனிமேலாவது , சினிமாக்களில் கவர்ச்சி கதா பாத்திர நடிகைகள் வேறு , குடும்ப கதா பாத்திர நடிகைகள் வேறு என்று 2 ஐயும் piripaargalaa இக்கால திரை உலகத்தினர் . பாதிகப்பட்ட சமூகம் இதற்கு குரல் எழுப்புமா ????

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.