Advertisement
தேர்வு நேரத்தில் மின்வெட்டு: இந்த ஆண்டும் பிரச்னை வெடிக்கும் அபாயம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013,23:57 IST

கடந்த பொதுத் தேர்வில், மின்வெட்டு பிரச்னை கடுமையாக எதிரொலித்தது. ஜெனரேட்டர்களை வைத்துக்கொண்டு, தேர்வை நடத்தி கல்வித்துறை சமாளித்தபோதும், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல், விடைத்தாள் திருத்தும் மையங்களிலும், மின்வெட்டு பிரச்னை எதிரொலித்தது. இந்த ஆண்டு, விரைவில் துவங்க உள்ள பொதுத்தேர்விலும், பிரச்னை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிப்பதற்கான எந்த முன்னேற்பாடுகளும், இதுவரை கல்வித்துறையிலோ, தேர்வுத்துறையிலோ துவங்கவில்லை.

கடந்த பொதுத்தேர்வில், மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க, ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம் எனவும், அதற்கான செலவை, பின்னர் அரசே தரும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெரிய பள்ளிகளில் பாதிப்பு ஏற்படவில்லை. பள்ளியில் இருந்த ஜெனரேட்டர்களை வைத்து, பள்ளி நிர்வாகங்கள், சமாளித்தன. ஆனால், பெரும்பான்மை பள்ளிகளில், பாதிப்புகள் ஏற்பட்டன.மின்வெட்டு பிரச்னை, விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் எதிரொலித்தது. மின்சாரம் இல்லாமல், பல்வேறு இன்னல்களுக்கு இடையே, ஆசிரியர்கள், விடைத்தாள்களை திருத்தினர்.

வாடகைக்கு ஜெனரேட்டர்களை வாங்கி, தேர்வுகளை நடத்திய பள்ளி நிர்வாகிகள் பலருக்கு, இதுவரை அந்தப் பணத்தை அரசு, திரும்ப தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் பொதுத்தேர்வை நினைத்து, பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் கலங்கிப்போய் உள்ளனர்.சென்னையைத் தவிர்த்து, மாநிலத்தின் பிற பகுதிகளில், கடுமையான மின்வெட்டு இருந்து வருகிறது. "இந்த ஆண்டு இறுதிக்குள், மின் பிரச்னை தீர்ந்துவிடும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதில் இருந்து, மார்ச், ஏப்ரலுக்குள் மின் பிரச்னை தீராது என்பது உறுதியாகி உள்ளது.கிராமங்களில், ஒரு நாளைக்கு, 15 மணி நேரம் முதல் 17 மணி நேரம் வரை, மின்வெட்டு இருந்து வருகிறது. இரவில், மாணவ, மாணவியர் படிக்க முடியாமல் அவதிபட்டு வருகின்றனர். அடுத்த மாதம் 10 தேதிக்குப்பின், பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கு, இப்போது இருந்தே, தீவிரமாக தயாராக வேண்டிய நிலையில், மாணவ, மாணவியர் உள்ளனர். ஆனால், மின்வெட்டு பிரச்னை, மாணவர்களை, பாடாய் படுத்தி வருகிறது.

இந்த ஆண்டாவது, முன்கூட்டியே இந்தப் பிரச்னை குறித்து விவாதித்து, தேவையான முன் ஏற்பாடுகளை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து, தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம், நடேசன் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராமசுப்பிரமணியன் கூறியதாவது:கடந்த தேர்வின்போது, ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்தேன். 2 மாதங்களுக்கு பயன்படுத்திய வகையில், 75 ஆயிரம் ரூபாய், "பில்' வந்தது. "பில்'லை, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி, பலமுறை நேரிலும், கடிதம் மூலமாகவும் கேட்டுப்பார்த்தேன். இன்றைய தேதிவரை, எனக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை. கேட்டு, கேட்டுப்பார்த்து வெறுத்துவிட்டேன்.வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியபின், செலவுத்தொகையை அரசே வழங்கும் என்ற அறிவிப்பு, அறிவிப்போடு நின்றுவிட்டது. இந்த ஆண்டும், மின்வெட்டு பிரச்னை அதிகமாக உள்ளது. டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்தால், சமாளிக்க முடியாது என்பதால், 7 லட்சம் ரூபாய் செலவு செய்து, 850 கே.வி., திறன்கொண்ட ஜெனரேட்டரை வாங்கி, நிறுவிவிட்டேன்.அரசுப் பள்ளிகளுக்கு, எப்படியாவது ஜெனரேட்டர் கொண்டு வருகின்றனர். அதேபோல், தனியார் பள்ளி மையங்களுக்கும், அரசே ஜெனரேட்டரை வழங்கி, பிரச்னையை தீர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில்,""தேர்வுக்கு, இன்னும் பல நாட்கள் உள்ளன. தேர்வு நெருங்கும்போது, இந்த விவகாரம் குறித்து விவாதித்து, ஒரு முடிவை எடுப்போம்,'' என, தெரிவித்தனர். தேர்வுக்கு இன்னும், 6 மாதங்கள் இருப்பதுபோல், கல்வித்துறையும், தேர்வுத்துறையும் மெத்தனமாக இருந்தால், மாணவ, மாணவியரை பெரிதும் பாதிக்கும் என்பது மட்டும் உறுதி.

-நமது நிருபர்-




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (47)
tamilaa thamila - chennai,இந்தியா
16-ஜன-201316:39:21 IST Report Abuse
tamilaa thamila வீட்டில் படிப்பதற்கு மின்சாரம் வேண்டுமே . அதற்கு யாரிடம் போய் கேட்பதாம். துப்பு கெட்ட ஆட்சியாளர்கள். பாவம் பிள்ளைகளின் எதிர்காலம். எல்லோரையும் சினிமா துறைக்கு அனுப்பி சம்பாதித்து கொள்ளலாமா>?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சாமி - மதுரை,இந்தியா
15-ஜன-201322:11:19 IST Report Abuse
சாமி ஆயா இட்டிலி கடை திறக்கபோகுது
Rate this:
2 members
0 members
4 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
15-ஜன-201322:10:00 IST Report Abuse
Pugal மின்வெட்டு காரணமாக பின்னலாடைத் தொழில் பாதிப்பில்,ஆடவர் உள்ளாடைகள் கூடக் கிடைக்காத நிலை வந்து விடுமோ? வெயில் காலத்தில் பனியன் போடாமல் எப்படி சட்டை போடுவது? காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக கட்டணம் பாக்கி ஏன் என்றால், தி மு க 9 மாதம் பாகி என்கிறார்கள். அ தி மு க 22 மாதங்களாக பாகி வைத்திருக்கிறதே இன்னும் இந்தக் கட்சியினையும் இதன் அவல ஆட்சியினையும் ஆதரிக்க எப்படி மனம் ஒப்புகிறதோ? செயலற்ற ஆட்சியை கண்டிக்க வேண்டாமா? மின் உற்பத்தி பெருக்க, எவ்வளவோ செய்திருக்கலாம், இனியும் செய்யலாம். முதல்வரின் கொட நாடு துயில் களைய வேண்டும் சீக்கிரம்.கட்சி அரசியல் சரியன்று.
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
15-ஜன-201322:02:26 IST Report Abuse
Pugal அடக் அக்டவுளே, இரண்டரை ஆண்டுகள் கழிந்த பின்னும், இன்னுமா மின்வெட்டிற்கு தி மு க வையும் கலைஞரையும் குறை சொல்கிறீர்கள்? உங்களுக்கு யோசிக்கும் திறனே இல்லையா? மனதை தொட்டு சொல்லுங்கள், இந்த ஆட்சிவந்த பின் என்ன தான் செய்தது மக்களுக்கு. புத்தகமே இல்லாமல் பள்ளி திறந்து நான்கைந்து மாதங்கள் பசங்க பெஞ்ச்சை தேய்த்துக் கொண்டிருந்தார்கள். அப்புறம் மின்சாரம் இல்லாமல் படிக்க முடியாமல் இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குப் பரீட்சை வைக்கிறேன் என்பதால், பரீட்சைக்குப் படிக்கிறோம் என்றும், நேர் முக தேர்வுக்கு போகிறோம் என்றும் ஆசிரியர்கள் சொன்னதால் சில வாரங்கள் பாடமே நடத்தப் பட வில்லை. மோடி பதவி ஏற்ப்பு விழாவிற்குப் போய் வந்து விட்டு, இப்போது கொட நாட்டில் துயில் கொண்டிருக்கிறார் இதோ அதோ என்று கிட்ட தட்ட 3 வருடம் ஆகப் போகிறது. கிரைண்டர், மிக்சி, மின்சாரம் எதுவும் காணோம். மின் வேட்டை பெரு பிரச்னையாக மக்கள் நினைக்கவில்லை என்று நிதி அமைச்சர் பேசினார். சரியான நேரத்தில் ஏதோ மேஜிக் செய்வாராம், எப்போ, பரீட்சைக்கு ஒரு நாள் முன்பா? படிக்க வேண்டாமா? பரீட்சைக்கு கரண்ட் இருந்தால் போதுமா? கோடைக் காலம் நெருங்குகிறது, மின்விசிறி இல்லாமல் குழந்தைகளும், முதியோரும், ஏன் நாமும் தான் தூக்கமின்றி தவித்து, மறுநாள் ஆபீஸ் போகும் போது பஸ்ஸில் அல்லது ஆபீசில் தூங்கி மேனேஜர் சீட்டைக் கிழிக்கப் போகிறார்.
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
16-ஜன-201301:32:42 IST Report Abuse
மதுரை விருமாண்டிஎல்லாரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று "அம்ம்மா" நினைக்கிறார்.. ர.ர அடிமையா இருக்க படிப்பு தேவையா என்ன?...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
samy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜன-201319:22:39 IST Report Abuse
samy ஜெயாவின் எல்லா நல்ல திட்டங்களும் அறிவிப்பு மட்டும்தான், செயல் முறையில் ஜீரோ. வெறும் வாயில் வடை சுடுவதில் மிகவும் திறமை.
Rate this:
3 members
0 members
8 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஜன-201323:12:00 IST Report Abuse
தமிழவேல் வெயிலில் இருக்குரவனுக்குதான் நிழலோட அருமை தெரியும் .. இதுதான் அவரது பாலிசி.... எது குடுத்தாலும் நல்லா காயப் போட்டு குடுத்தா அத சட்டுன்னு மறக்க மாட்டாங்க ? தண்ணி , மின்சாரம், விவசாய இழப்பீடு, மாணவர்களுக்கு மின்சாரம், விவசாயிகளுக்கு மின்சாரம் ....எல்லாம் வரும் .... ஆனால் மரியன் கூறுவதுபோல காலத்தோடு வராது ......
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
mrsethuraman - Bangalore,இந்தியா
15-ஜன-201315:43:47 IST Report Abuse
mrsethuraman  மலிவு விலையிலோ அல்லது இலவசமாகவோ சூரிய ஒளியில் இயங்கும் மின்சார விளக்குகளை மாணவர்களுக்கு அரசு வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும்.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
neelakantan s - mumbai,இந்தியா
15-ஜன-201312:33:04 IST Report Abuse
neelakantan s இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு நாட்களுக்கு முன் வந்த ஒரு செய்தியை குறுப்பிட விரும்புகிறேன் Courtesy The Times of India Mumbai : More Power in State: The Ratnagiri Gas and Power Private Limited (RGPPL) recently commissioned a cargo ship "LNG Pioneer" at its jetty near Dabhol plant which can carry 138000 cubic meters of liquified natural gas from Russia. This can ensure 24x7 power supply in state in summer: TNN
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Raju Rangaraj - Erode,இந்தியா
15-ஜன-201310:20:49 IST Report Abuse
Raju Rangaraj அரசு பள்ளிகளுக்கு ஜெனரேட்டார் வாங்கி கொடுக்கட்டும்தனியார் பள்ளிகளுக்கு athai எப்படி கொள்ளை அடித்து வாங்க வேண்டுமென நன்றாக தெரியும்75000 ரூபாய் இல்லாத குறையை ஏழு லட்சம் செலவு செய்து தீர்க்க தனியார் பள்ளிகளுக்கு வழி உண்டுமாணவனுக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து தீட்டினால் பெற்றோர் கதறிக்கொண்டு கட்ட மாட்டார்களா ?/உங்களுக்கு தெரியாத வழி முறைகளா ?
Rate this:
1 members
0 members
19 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
15-ஜன-201314:29:16 IST Report Abuse
மதுரை விருமாண்டிஅரசு வாங்கிக் கொடுத்தால் கணிசமான கமிஷன் கிடைக்கும்.. கடைத் தேங்காயோ, கொடநாட்டுப் பிள்ளையாரோ.. அதுவுமன்றி, அரசு வாங்கிக் கொடுத்தாலும் தனியார் டீசல் வரியை பெற்றோர்களிடம் இருந்து கறந்து விடுவார்கள்.. கல்வித் துறையில் கனமழை... லஞ்சம் தான்......
Rate this:
1 members
1 members
10 members
Share this comment
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
15-ஜன-201309:45:20 IST Report Abuse
M.P.MADASAMY லேப்டாப்,சைக்கிள்,பாடபுத்தகம் இது போன்ற இலவசங்களோடு படிக்கும் பொழுது மின்சாரத்தேவைக்காக ஒரு மினி ஜெனரேட்டரை மாணவர்களுக்கு வழங்க வேண்டியதுதான்.
Rate this:
1 members
0 members
102 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஜன-201319:59:11 IST Report Abuse
தமிழவேல் டார்ச்ல்லைட்ட சொல்றீங்கன்னு நினைக்கின்றேன்......
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஜன-201320:00:12 IST Report Abuse
தமிழவேல் இலவச சைக்கிள்ள டைனமோ வச்சா ஒருத்தர் மாத்தி ஒருத்தர் மிதிச்சுகிட்டே படிக்கலாம்......
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
16-ஜன-201301:26:12 IST Report Abuse
மதுரை விருமாண்டிமார்க்கையும் இலவசமா கொடுத்து பாஸ் போட்டுட்டா, இந்த பிரச்சினை எதுவும் இருக்காது.. மாணவர்களும், மம்மியைப் போல குப்புறக் கவுத்து படுத்துக்கலாம்.....
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Nallavan - ERODE,இந்தியா
15-ஜன-201308:37:06 IST Report Abuse
Nallavan Generator கொண்டு காற்றையும், சுற்றுச்சூழலையும் மாசுப்படுத்துவதற்கு பதில் ஏன் SOLAR UNIT'களை பள்ளிகளில் இப்போதிலிருந்தே நிறுவ கூடாது?.
Rate this:
0 members
0 members
13 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.