Ban for Liquor in Villages | "குடி'க்கு சாவு மணி அடித்த "மது விலக்கு கிராமம்': மதுரையில் நடக்குது அதிசயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"குடி'க்கு சாவு மணி அடித்த "மது விலக்கு கிராமம்': மதுரையில் நடக்குது அதிசயம்

Added : ஜன 15, 2013 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
"குடி'க்கு சாவு மணி அடித்த "மது விலக்கு கிராமம்': மதுரையில் நடக்குது அதிசயம்

மதுரை:தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயங்கும் நிலையில், மதுவை முற்றிலும் ஒதுக்கி முன் மாதிரியாக திகழ்கின்றனர் மதுரை சரந்தாங்கி கிராம மக்கள்.

இக்கிராமத்தில் 1,400 பேர் வசிக்கின்றனர். இம்மக்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை தவறாமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றனர். ஆண்கள் மது அருந்துவது கிடையாது. இங்கு "டாஸ்மாக்' கடையை திறக்க சிலர் முயன்றனர். கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் முடியவில்லை.

சரந்தாங்கி கிராம தலைவர் ஜெயக்கொடி: ஊர்கட்டுப்பாட்டை நாங்கள் மீறியது கிடையாது. கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் ஊர்க்காரியங்களை செய்கிறோம். கிராமத்தில் யாராவது இறந்தால், கிராம நிதியில் இருந்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏழை, பணக்காரர் என வித்தியாசம் இங்கில்லை. பூரண மதுவிலக்கு இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறி மது அருந்தி ஊருக்குள் வரக்கூடாது. இங்குள்ள தோட்டங்களுக்கு வேலி கிடையாது. திருடாமை, பொய்கூறாமை எங்களது கொள்கை.

மூக்கம்மாள், சரந்தாங்கி: மது விலக்கு கொள்கை அமலில் இருப்பதால், என் கணவருக்கு குடி பழக்கம் இல்லை. இக்கொள்கை இங்கு பின்பற்றப்படாமல் இருந்திருந்தால் பலர் குடி பழக்கத்திற்கு ஆளாகி குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். எங்கள் ஊரில் யாருக்கும் இப்பழக்கம் இல்லாதது நாங்கள் செய்த புண்ணியம். சரந்தாங்கி கிராமத்தை முன்மாதிரியாக கொண்டு, குடியை கெடுக்கும் மது எனும் கொடூரனுக்கு சாவு மணி அடிக்க பிற கிராமங்களும் முன்வர வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
itashokkumar - Trichy,இந்தியா
17-ஜன-201310:49:09 IST Report Abuse
itashokkumar கயட்டுகிரோம் கீழே வைக்கிறோம் என்று கூறும் பொது நல அமைப்புகள் இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும். இந்த கிராமத்தின் தையிரியத்தை தமிழ் நாடு முழுக்க பரப்ப வேண்டும். இந்த கிராமத்தை கூகிள் மாப்பில் alcohol free village என குறிப்பிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
17-ஜன-201310:19:15 IST Report Abuse
Mohandhas என்னகென்னவோ இது "கோவா" படத்துல வர சீன் தான் நினைப்புக்கு வருது..கட்டுப்பாடு அதிகமானால், கள்ளத்தனத்தை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.. " மது இந்தியாவில் தான் ஒரு குற்றமாக உள்ளது ,,மற்ற வளர்ந்த நாடுகளில் அது இல்லை..அங்கு எல்லாதிற்கும் லிமிட் உள்ளது கட்டுப்பாடு, தரம் உள்ளது ..இங்கு எதுவும் இல்லை குறித்த விலையில் போதை அதிகம் கேட்கும் குடிமக்கள் தான் இங்குள்ளனர்,,, டாஸ்மார்க் கை மூடினால் கள்ளச்சாராயம் காச்சுவார்கள்..போதைக்கு,,பேட்டரி,, வார்னிஷ், பெயிண்ட், டயர் இதெல்லாம் சாரயமாகும்.. கும்பல் கும்பலாக சாவுவார்கள்..இது தேவையா ?..மனிதன் தானாக உணரவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
16-ஜன-201319:54:01 IST Report Abuse
krishna சாராய கடைகளில் மக்கள் கொடுக்கும் பணம்தான் இலவசமாக மக்களுக்கு தரப்படுவது என்பதை உணர்ந்தால் யாரும் குடிக்க மாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
16-ஜன-201317:29:10 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM சரந்தாங்கி ...........கிராமம் .........போல ...........அனைவரும் .........இருந்து ..........சரக்குக்கு...........முழுக்கு ......போட்டு ........சந்தோசம் ..........உள்ள ......சந்ததியை(கிராமத்தை) ........உருவாக்கிட ........சாதனை ........சையுங்கள்...........
Rate this:
Share this comment
Cancel
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
16-ஜன-201305:15:17 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan அந்த கிராம மக்கள் ஒவ்வொருவருக்கும் பணிவான வணக்கங்கள் / வாழ்த்துக்கள். இப்படி 'குடி கெடுக்கும் குடிக்கு சாவு மணி அடிக்க அனைவரும் முயல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
chandramoule eswaran - chennai,இந்தியா
16-ஜன-201303:22:48 IST Report Abuse
chandramoule eswaran சரதங்கி கிராம மக்கள் பல நூறு ஆண்டுகளாக எடுத்திருக்கும் முடிவுகளாக இருந்திருக்கலாம். இது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel
chandramoule eswaran - chennai,இந்தியா
16-ஜன-201303:15:17 IST Report Abuse
chandramoule eswaran சரதங்கி கிராம மக்களுக்கு பாராட்டுக்கள். இதனை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தால் தினமலருக்கு மேலும் ஒரு மகுடமாக அமைந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Madukkur S M Sajahan - Madukkur,இந்தியா
15-ஜன-201320:08:39 IST Report Abuse
Madukkur S M Sajahan லண்டன் ஸ்கூல் ஆப் எச்கோனோமிக்ஸ்(London school of economics )யில் பணிபுரியும் எனது நண்பரும் obnormal pshycology பயிற்றுவிக்கும் அவரது தோழியும் தமிழ் நாட்டை சுற்றிபார்க்க வந்தார்கள். அவர்கள் தமிழ் நாட்டை public transport ஐ பயன்படுத்தி சுற்றி பார்க்க விரும்பினார்கள்.அப்போதுதான்,மக்களோடு மக்களாக கலந்தது மக்களை உணர முடியும் என்று அவர்கள் சொன்னார்கள். இரண்டு வார சுற்றுபிரயானத்திற்கு பிறகு அவர்கள் தமிழ் நாட்டை பார்த்தவிதம் மகிழ்ச்சியாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. குறிப்பாக மொபைல் போன் பயன்பாடு பற்றிய அவர்களது கருத்து சற்று கருத்து இருந்தது. தெருக்களில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்லும் நபர்கள் மொபைல் போனை பயன்படுத்திகொன்டே செல்வது நாட்டின் வளர்ச்சின் வெளிப்பாடு அல்ல என்கின்றார்கள். தெருவில் செல்லும் நபர்களில் நூற்றுக்கு நாற்பது சதவீத நபர்கள் மொபைல் போனில் பேசிக்கொண்டே செல்வதாகவும்,அதில் என்பது சதவீத பேர் பெண்கள் எனவும் சொன்னார்கள் அவர்கள். அப்படி தெருவில் பேசிக்கொண்டே செல்லும் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் வீட்டிலோ அல்லது உறவினர்கள் இருக்கும் இடத்தில் பேச முடியாத விஷயங்களையோ மற்றும் பேச கூடாதவர்களிடம்தான் பேசிக்கொண்டு செல்வதாக obnormal psyhology பயிற்றுவிக்கும் எனது தோழி விவரிக்கின்றார். இந்தியா போன்ற கலாட்ச்சார பெருமை மிக்க நாட்டில் அறிவிலயலின் வளர்ச்சி கலாச்சார சீரழிவைத்தான் கொடுக்கின்றது என்று புள்ளிவிவரமாக சொல்கின்றார்கள் அவர்கள்.இதில் நாம் என்ன செய்ய இருகின்றது???
Rate this:
Share this comment
Cancel
sivasankar - Chennai,இந்தியா
15-ஜன-201319:55:37 IST Report Abuse
sivasankar பாராட்டவேண்டும் .இந்த செய்திக்கு நன்றி .
Rate this:
Share this comment
Cancel
G.Johnson - Al Khobar,சவுதி அரேபியா
15-ஜன-201315:44:58 IST Report Abuse
G.Johnson டாஸ்மாக் என்னும் பாழாக்கும் மதுபான அருவருப்பை தமிழகத்தில் செயல்படுத்தி அனுதினமும் குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து மக்களை அழிவுக்கு நேராக கொண்டு செல்லும் தமிழக அரசின் துரோகச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன். துணிவு(தைரியம்) இருந்தால் இதை தடை செய்யுங்கள் பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை