district news | ஆறு மைல் கடந்தும் மேய்ச்சல் இல்லை வறட்சியில் மடியும் கன்றுகள்| Dinamalar

ஆறு மைல் கடந்தும் மேய்ச்சல் இல்லை வறட்சியில் மடியும் கன்றுகள்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ஆறு மைல் கடந்தும் மேய்ச்சல் இல்லை வறட்சியில் மடியும் கன்றுகள்

மதுரை:மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடும் வறட்சியால் கால்
நடைகள் மேய்ச்சலின்றி தவிக்கின்றன. பால் இன்றி, கன்றுகள் மடிந்து வரும் பரிதாபச் சூழல் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழையில் பயன்பெறும் தமிழகத்திற்கு, இம்முறை ஏமாற்றமே
மிஞ்சியது. குறிப்பாக, தென்மாவட்டங்களின் நிலை பரிதாபத்தில் உள்ளது. மழையில்லாமல், விவசாய பயிர்கள் கருகின. வழக்கத்திற்கு மாறாக வெயில் கடுமையாக இருந்ததால், கண்மாய்கள் வறண்டன.
நீரின்றி காய்ந்த பயிர்களை, விவசாயிகளே கால்நடைகளுக்கு இரையாக்கினர். நடப்பாண்டு விவசாயம் பொய்த்து போன நிலையில், அதை நம்பியிருந்த கால்நடைகளுக்கும் சோகம்
ஏற்பட்டுள்ளது. நீரின்றி
மேய்ச்சல் புற்கள், சருகாய் மாறியுள்ளன.
குளம், குட்டைகள் வறண்டு கிடப்பதால், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் தவிக்கின்றன. வெளியூரிலிருந்து வரும் மாடுகள், தங்கள் கிராமத்தில் மேய்ச்சலில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து, தகராறுகளும் ஆங்காங்கே நடந்து வருகிறது. மேய்ச்சல் குறைந்ததால், பசுக்களின் பால் உற்பத்தி பாதித்து, கன்றுகள் இறப்பு அதிகரித்துள்ளது.
வழக்கமாய் மேய்ச்சலுக்கு, ஒரு மைல் தூரம் பயணிக்கும் மாடுகள், தற்போது ஆறு மைல் தூரம் வரை, நடக்கின்றன.
அதிலும் மேய்ச்சலின்றி,
சோர்வடைந்து, எடை குறைந்து வருகின்றன.
சிவகங்கை மாவட்டம்
பழையனூர், வல்லாரேந்தலில் இருந்து, மதுரை களிமங்கலம் பகுதிக்கு மேய்ச்சலுக்கு
வந்த மாடுகளுக்கு ஏமாற்றம் மிஞ்சியதால், வேறு பகுதிக்கு நடைகட்டின.
ஊர்காவலன், 65, கூறியதாவது: விபரம் தெரிந்த நாள் முதல், கால்நடை மேய்ச்சல் தொழிலில் உள்ளேன். இப்படியொரு பஞ்சத்தை பார்த்ததில்லை. மழையின்றி, நிலங்கள் வறண்டு போயுள்ளன; குளங்களில் நீரில்லை. இரையின்றி மாடுகள் மயங்குகின்றன. வேறு ஊருக்குச் சென்றால், "எங்கள் மாடுகளுக்கு மேய்ச்சல் வேண்டும்,' என, விரட்டுகின்றனர். நேற்று ஒரு கிராமத்தில், அடித்து விரட்டினர்;தப்பி வந்தோம். எங்களின் ஏழு கன்றுகள், இதுவரை
இறந்துள்ளன. இரை இல்லாமல், மாடுகள் அனைத்தும்,
"அடிமாடு' தோற்றத்திற்கு மாறிவிட்டன, என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
16-ஜன-201315:54:05 IST Report Abuse
க . ஆனந்த குமார்  குறிச்சிகுளம் அரசு பொறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகள் எல்லாம் விவசாய நிலங்கள் ஆக மாற்றி பட்டா போட்டு பிளாட் போட்டு விற்றுவிடுவார்கள். மழை நீர் அனைத்தும் கடல் சென்று விடுகிறது
Rate this:
Share this comment
Cancel
16-ஜன-201311:47:19 IST Report Abuse
ஆனந்த குமார்   குறிச்சிகுளம் ...கடவுளே நல்லா மழை பெய்யனும். காடுகளையும் அழித்து பிளாட் போட்டு விற்றால் வருடா வருடம் மழையின் அளவு உயரும் என்று அரசாங்கமே அழித்துவருகிறது...
Rate this:
Share this comment
Cancel
muthukumar - singapore  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-201311:46:53 IST Report Abuse
muthukumar வெரிகுட்இன்னும் இருக்கும் காடுகளையும் அழித்து பிளாட் போட்டு விற்றால் வருடா வருடம் மழையின் அளவு உயரும் என்று அரசாங்கமே அழித்துவருகிறது
Rate this:
Share this comment
Cancel
Ramkumar - Singapore  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-201311:45:09 IST Report Abuse
Ramkumar இன்று மாட்டு பொங்கல் ரொம்ப அழகான போட்டோ
Rate this:
Share this comment
Cancel
nalamvirumbi - Chennai  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-201309:48:02 IST Report Abuse
nalamvirumbi கடவுளே நல்லா மழை பெய்யனும்
Rate this:
Share this comment
Cancel
Dharan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-201309:42:53 IST Report Abuse
Dharan இதேநிலை நீடித்தால் மனிதனுக்கும் இதேகதி்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.