புதுடில்லி: 65 வது இந்திய ராணுவ தினத்தையொட்டி டில்லியில் ராணுவ வீரர்கள் பங்கேற்ற அணிவகுப்பில் ராணுவ தளபதி பிக்ரம்சிங் மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து இந்நாள் வரை மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலியும், மரியாதையும் செலுத்தப்பட்டன.
இது தொடர்பாக டில்லியில் நடந்த விழாவில் ராணுவ தளபதி பிக்ரம்சிங் ஜீப்பில் வந்தபடி அணிவகுத்து நின்ற வீரர்களின் கம்பீரத்தை பார்வையிட்டார். முப்படை வீரர்களும் தளபதிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அமர் ஜவான் ஜோதியில் ராணுவ தளபதி அஞ்சலி செலுத்தினார். மேலும் வீரச்செயல்கள் புரிந்த நமது வீரர்களுக்கு, பாராட்டும், பதக்கமும் அணிவிக்கப்பட்டன. ராணுவ தினத்தை யொட்டி டில்லியில் நடந்த அணிவகுப்பு கம்பீரமாக இருந்தது.
இந்திய ராணுவத்தின் முதல் தளபதி கே.எம்., கரியப்பா தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நாள் முதல் ஆண்டுதோறும் ஜனவரி 15 ம் தேதி இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.
தியாகிகளுக்கு பெருமை சேர்ப்போம்:
ராணுவ அணிவகுப்பு முடிந்து வீரர்கள் இடையே உரையாற்றிய ராணுவ தளபதி பிக்ராம்சிங்; நமது நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த வீரர்களை நாம் எப்போதும் மறக்க மாட்டோம். அவர்களது தியாகம் போற்றுதலுக்குரியது. உலக அளவில் வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை ஒழிப்பில் நமது வீரர்கள் கடும் சவால்களை மேற்கொண்டுள்ளனர். எல்லை பகுதிகளை பொறுத்தவரை அதற்கான வழிமுறை மற்றும் சட்டங்களை மதிக்கிறோம், எல்லை பகுதியில் போரிட்டு மறைந்த தியாகிகளுக்கு இந்த தருணத்தில் மரியாதை செலுத்துகிறேன். நமது நாட்டை காப்பதில் ராணுவம் எப்போதும் உறுதியாக இருக்கும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு தளபதி பேசினார்.
பாகிஸ்தான் - இந்தியா இடையே எல்லை விவகாரம் முற்றி வரும் வேளையில் இன்று நடந்த இந்திய ராணுவ அணிவகுப்பு கண்டு பாகிஸ்தான் மிரண்டு போயிருக்காதா என்ன ?
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதுவே மத்தியில் அம்மா பிரதமராக இருந்திருந்தால் ? பாகிஸ்தான் இப்படி வால் ஆட்டுமா நம்மிடம் ? ஜெயலலிதா போல ஒரு ஆள் வேண்டும் நமக்கு . 1 லட்சம் அரசு அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பும் திறமை , திராணி வேறு யாருக்கும் இந்தியாவில் கிடையாது. அதுபோலே அந்நிய சக்திகளை காங்கிரஸ் போல வேடிக்கை பாத்துகிட்டு இருக்கமாட்டார் ஒரு நாளும்.
இலங்கையில் நமது சொந்தங்களை கொன்று குவித்த போர் குற்றவாளி, கொடுங்கோல்லன்,மனிதத் தன்மையற்ற மிருகம் ராஜபக்ஷேயை சிவப்பு கம்பளம் விரித்து நம் நாட்டிற்கு வரவழைத்த மானம் கேட்ட இந்த காங்கரஸ் அரசு நம் வீரர்களின் தலை கொய்து போன பிறகும் கூட பாகிஸ்தானை வரவழைத்து விருந்தளிக்கவும் அஞ்சாது........காங்கரஸ் அரசு கொள்ளையடிக்க மட்டுமே உகந்த அரசு.............கொய்து போனது ஒரு மாவீரனின் தலை மட்டும் அல்ல..............ஒட்டுமொத்த இந்தியர்களின் தன்மானமும் தான்............உண்மையான இந்தியனாக இருந்தால் தானே அதைப்பற்றி கவலைப்பட.............இத்தாலி சோனியாவிற்கு எப்படி தெரியும் ................எங்க இந்த பொம்மை இந்தியன் தானா.......... சந்தேகமா இருக்கு...............தமிழன் தமிழன் என்று மார் தட்டிக்கொள்ளும் கொள்ளை குடும்பத்தலைவன்............இவரை நம்பி மொத்தமாக 40 தொகுதிகளிலும் D.M.K. விற்கு ஒட்டு போட்டு M.P க்களை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தோம் ................கொள்ளைக் குடும்பத்தலைவன் நினைத்திருந்தால் நமக்கு காவிரி தண்ணீர் மட்டுமல்ல ............இந்தியாவின் ஒட்டுமொத்த நதிகளையும் தமிழ் நாட்டிற்கு திருப்பி விட்டிருக்கலாம்......... ஏன் மீனவர் களை இலங்கை ராணுவம் கொன்று குவிக்கிறது.........அதை தட்டிக்கேட்டிருக்கலாம் ..............இதை ஏதும் செய்யவில்லை ............நல்லா காங்கரஸ் அரசுடன் சேர்ந்து கொள்ளை மட்டும் அடித்தது ............வெட்கம் கேட்டு பொய் ஒட்டு கேட்டு ஊருக்குள் வருகிறார்கள் ............உங்களை நம்பியதற்கு இந்த விஷயதிர்க்காகவாவது தட்டிகேளுங்கள் ............இந்தியர்களின் மானத்தை காப்பாற்றுங்கள்.....................
நம் தாய் நாட்டை காக்க தம் உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு என் தாய் நாட்டின் சார்பாக முதலில் வீர வணக்கத்தை தெருவித்துக்கொள்கிறேன் ..............தன் கணவனின் தலை எனக்கு வேண்டும் என்று சொல்லும்......... அளவிற்கு மிகக் கொடுமையான செய்தி வேறு எங்குமே நடந்திருக்காது..........இதை அறிந்ததும் இரத்தம் கொதிக்கிறது ...............ஒரு பொம்மைக்கு ஒட்டு போட்டு ............. இந்த காங்கிரஸ் அரசை ஆட்சியில் அமர்த்தியதற்கு இன்னும் என்ன என்ன கொடுமைகளெல்லாம் நம் நாட்டில் நடக்கப்போகிறதோ........இன்னும் என்னடா பொட்ட மாதிரி கண்டனம் தெருவிசுக்கிட்டு ................ஊழல்,காவிரி தண்ணீர் ,கற்பழிப்பு,சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு,..........இப்படி எத்தனை கொடுமைகளடா........இது அனைத்திற்கும் மேல் இப்போது நம் வீரர்களின் தலையே போனதே ஐயோ மக்களே சிந்தியுங்கள் ................இப்போதாவது உணருங்கள் .............ஐயோ என் தாய் நாடு என் கண் முன்னேயே அழிந்து போகிறதே ...................

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.