Cheran express late | மூதாட்டியை எலி கடித்ததால் சேரன் எக்ஸ்பிரஸ் தாமதம்| Dinamalar

மூதாட்டியை எலி கடித்ததால் சேரன் எக்ஸ்பிரஸ் தாமதம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

வேலூர்: பெண்ணை எலி கடித்ததால், அரக்கோணம் வந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், 20 நிமிடம் தாதமமாக புறப்பட்டு சென்றது.கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், வேலூர் மாவட்டம் அரக்கோணத்துக்கு இன்று அதிகாலை, 5 மணிக்கு வந்தது. ரயிலில், மூன்றடுக்கு "ஏசி' பெட்டியில் கோவையைச் சேர்ந்த மீனாரமணா, 65, என்ற பெண் பயணம் செய்தார்.அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அரக்கோணம் ரயில்வே ஸ்டேசனுக்கு ரயில் வந்த போது பாத்ரூமில் இருந்து வந்த பெரிய எலி ஒன்று மீனாவை கடித்தது. இதனால், மீனா அலறித்துடித்தார். அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு ரயில்வே டி.டி.ஆர்., ரகோத்துமன் ஓடி சென்று பார்த்தார். அவரிடம் எலி கடித்த விபரத்தை சக பயணிகள் கூறிய போது, சென்னைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என கூறினார். இதை சக பயணிகள் ஏற்கவில்லை. எலி கடித்து ரத்தம் வெளியேறி வந்தது. "சென்னை செல்வதற்குள் விஷம் உடம்பில் ஏறி உயிருக்கு பாதகம் ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கேயே சிகிச்சை அளிக்க வேண்டும்' என, பயணிகள் தகராறு செய்தனர்.வேறு வழியின்றி அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் மருத்துவமனை டாக்டர் பாத்திமா, மீனாவுக்கு சிகிச்சை அளித்தார்.செப்டிக் ஆகாமல் இருக்க ஊசி போட்டு, மருந்து, மாத்திரை ஒரு வாரத்துக்கு கொடுத்தார். எலி கடித்த இடத்தில் பேண்டேஜ் போட்டார். டாக்டர் புறப்பட்டு செல்ல முயன்ற போது சக பயணிகள் தடுத்து, எலி கடித்ததாக சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்றனர்.வேறு வழியின்றி டாக்டரும் எலி கடித்ததாக சர்ட்டிபிகேட் கொடுத்து, அதற்கு எடுத்த சிகிச்சை விபரம், மருந்து, மாத்திரை விபரங்களை எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அதன் பின், 20 நிமிட தாமதமாக, 5.20 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
16-ஜன-201314:56:46 IST Report Abuse
M.P.MADASAMY பஸ்களில் முதலுதவிப்பெட்டி (இப்பொழுது, மருந்து இல்லாவிட்டாலும் வெறும் பெட்டியாவது இருக்கிறதா ?) வைத்திருப்பது போல் இனி ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் எலிக்கடி மருந்து,கரப்பான் பூச்சி அலர்ஜிக்கான மருந்து அடங்கிய பெட்டி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் .அல்லது பாதுகாப்புக்கு ரயிலில் போலீஸார் செல்வது போல் எலி பிடிப்போரையும் கூட அனுப்பி வைக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Indian from Mumbai - Mumbai,இந்தியா
16-ஜன-201308:10:59 IST Report Abuse
Indian from Mumbai எப்போது தான் இந்த ரயில்வே நிர்வாகம் முன்னேருமோ. மக்கள் வாழ்வோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்தினால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
16-ஜன-201304:40:18 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ன ஒரு கொழுப்பு இருந்தால் சென்னை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என சொல்லுவான். அவனுடைய உறவினர்கள் யாருக்காவது எலி கடித்திருந்தால் இப்படி பொறுப்பில்லாமல் பதில் சொல்லுவானா? பரதேசி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.