Stiff competition to capture TNPSC leader post | டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி: மார்ச்சில் நடராஜ் ஓய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி: மார்ச்சில் நடராஜ் ஓய்வு

Added : ஜன 15, 2013 | கருத்துகள் (14)
Advertisement
 டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி: மார்ச்சில் நடராஜ் ஓய்வு,Stiff competition  to capture TNPSC leader post

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், மார்ச்சில் முடிவதை அடுத்து, இந்தப் பதவியை பிடிக்க, இப்போதே பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளிடை@ய, கடும் போட்டி எழுந்துள்ளது.

ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி யான நடராஜ், டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, கடந்த ஆண்டு, ஜனவரி, 23ம் தேதி பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றதில் இருந்து, தேர்வாணையத்தில், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.இணையதளம் வழியாக பதிவு, "ஹால் டிக்கெட்' வினியோகம், தேர்வு நடவடிக்கைகள் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவை, வீடியோ மூலம் பதிவு, தேர்வு முடிந்ததும், உடனடியாக முடிவை வெளியிட்டு, கலந்தாய்வு முறை அறிமுகம், குறிப்பிட்ட தேர்வுகளை, கம்ப்யூட்டர் வழியாக நடத்துவது என, தேர்வாணைய நடவடிக்கைகள் அனைத்திலும், வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு வந்தார்.இதனால், முந்தைய நிர்வாகத்தினரால் ஏற்பட்டிருந்த களங்கத்தை துடைத்து, லட்சக்கணக்கான பட்டதாரிகள் மத்தியில், மீண்டும் தேர்வாணையத்தின் மீது, நம்பகத்தன்மையை ஏற்படுத்தினார்.
தலைவர் மற்றும் உறுப்பினர்பதவிகளில் இருப்பவர்கள், 6ஆண்டுகள் அல்லது 62 வயது, இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரை, பதவி வகிக்க லாம்.

அதன்படி, நடராஜுக்கு, 62 வயது முடிவடைவதால், அவருடையபதவிக் காலம், மார்ச் இரண்டாவது வாரத்துடன் முடிகிறது.இதையடுத்து, தலைவர் பதவியை பிடிக்க, ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில், இப்போதே கடும் போட்டி எழுந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் கூறுகின்றன.பணியில் உள்ள அதிகாரியைக் கூட, தேர்வாணைய தலைவராக நியமிக்க, சட்டத்தில் வழிவகை உள்ளது.எனவே, பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர், தேர்வாணைய பதவியை குறி வைத்து உள்ளனர். யாரைப் பிடித்தால்,காரியம் கச்சிதமாக முடியும் என, ஆளாளுக்கு, பல்வேறு வழிகளில், முயற்சியில் இறங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், டி.என்.பி.எஸ்.சி.,யின் நான்கு உறுப்பினர்களின் பதவிக் காலம், ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில், அடுத்தடுத்து முடிவுக்கு வருகின்றன. இதனால், உறுப்பினர்கள் பதவிக்கும், இப்போதே போட்டி துவங்கி உள்ளது. சம்பளமாக கணிசமான தொகை, கார் மற்றும் பல்வேறு வசதிகள், ஒரு பக்கம் இருந்தாலும், சமுதாயத்தில் மிகுந்த மரியாதைக்கு உரிய பதவி என்பதால், இந்தப் பதவிகளை பெரிதும் விரும்புகின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மு.நாட்ராயன் - Dindigul,இந்தியா
16-ஜன-201319:31:09 IST Report Abuse
மு.நாட்ராயன் சமீபத்தில் தலைமை செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற சாரங்கி கூட நல்லவர் என்று கேள்விப்பட்டேன். தற்போது அவர் தமிழக அரசுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரையே கூட தலைவராக நியமிக்கலாம் அரசியல் சட்டத்தின் படி நடராஜ் மறு நியமனம் அனுமதிக்கப்படாத ஒன்று. சகாயம் மற்றும் முன்னாள் ஆணைய செயலாளர் உதய சந்திரன் கூட நியாயமானவர்தான் அனுபவமும் கூட உள்ளது எப்படியோ நேர்மையான அலுவலரை நியமித்தால் தமிழ் நாட்டுக்கு நல்லது இதனை முதல்வர் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
16-ஜன-201318:19:34 IST Report Abuse
Natarajan Iyer யார் வந்தாலும் ஊழல் செய்யமுடியாதபடி திரு நடராஜ் செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
A.SESHAGIRI - ALWARTHIRUNAGARI,இந்தியா
16-ஜன-201316:54:50 IST Report Abuse
A.SESHAGIRI இவரை போன்றவர்களுக்கு எப்பாடுபட்டாவது பதவி நீடிப்பு வழங்கினால் அதில் தவறில்லை. இவர்களை போன்றவர்களால்தான் அந்த பதவிக்கே பெருமை சேர்கிறது.
Rate this:
Share this comment
Cancel
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
16-ஜன-201314:09:19 IST Report Abuse
M.P.MADASAMY வேலையில்லாத்திண்டாட்டமும்,லட்சக்கணக்கில தேர்வெழுதுவோரும் இருக்கும் வரை இந்தப்பதவிகளுக்கு மிகுந்த......மரியாதையும் பதவியில் உள்ளவர்களுக்கு கொண்டாட்டமும் இருக்கத்தான் செய்யும்.ஊழல் வாழ்க
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
16-ஜன-201313:15:10 IST Report Abuse
PRAKASH இறை அன்பு சார் அல்லது சகாயம் சார் ...
Rate this:
Share this comment
Cancel
sundar - Ras Laffan,கத்தார்
16-ஜன-201311:31:54 IST Report Abuse
sundar சரியான இடத்தில் சரியான நேரத்தில் பதவியில் அமர்த்தப்பட்ட ஒரு நேர்மையான அதிகாரி திரு. நடராஜ் அவர்கள். அவரது பதவிக்காலத்தை அரசு நீட்டிக்க தேவையான சட்ட வழி முறைகளை மேற்கொண்டு மீண்டும் திரு நடராஜ் அவர்களையே இப்பதவியில் அமர்த்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Deepa Bama - chennai,இந்தியா
16-ஜன-201311:06:58 IST Report Abuse
Deepa Bama இவர் tnpsc அதிகாரியாக வந்தபின்தான் tnpsc மேல் நம்பிக்கை வந்தது . மேலே கண்ட செய்திக்குப்பின் பதற்றம் வந்தது . நேர்மையின் அர்த்தம் -நடராஜ் .
Rate this:
Share this comment
Cancel
Devakotti Jagadishkumar - chennai,இந்தியா
16-ஜன-201311:04:36 IST Report Abuse
Devakotti Jagadishkumar இவரையே மீண்டும் தலைவராய் தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் அப்பொழுதுதான் மேலும் பல சீர்திருத்தங்கள் செய்து கட்டுவர் இவர் சி பீ டி எனப்படும் கம்ப்யூட்டர் பேசுடு டெஸ்ட் அறிமுகப்படுத்தினார் இந்த தேர்வு நடைமுறைக்கு வந்தால் கேள்வி தால் வெளி ஆவதை தடுக்க படும்
Rate this:
Share this comment
Cancel
H .Akbar ali - Riyadh,சவுதி அரேபியா
16-ஜன-201310:48:39 IST Report Abuse
H .Akbar ali   இவருடைய இடத்தை நிரப்ப நம்முடைய முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் பொருத்தமானவர் அம்மா ஆவன செய்வார்களா பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ganesan b(ganesh) - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-201309:03:08 IST Report Abuse
ganesan b(ganesh) Sri. Nataraj, deserved for the position and his service period shall be exted for some more years in the interest of Tamilnadu people. If necessary, Government should try to am the rule as applicable.Hats off Nataraj sir, for your excellant service record......ganesh from abudhabi
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை