Vijayakanth plan to conduct vote for Alliance or Independent contest in Lok sabha election | கூட்டணியா, தனித்து போட்டியா?ஓட்டெடுப்பு நடத்த விஜயகாந்த் திட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணியா, தனித்து போட்டியா?ஓட்டெடுப்பு நடத்த விஜயகாந்த் திட்டம்

Updated : ஜன 16, 2013 | Added : ஜன 15, 2013 | கருத்துகள் (124)
Advertisement
 லோக்சபா தேர்தலில் கூட்டணியா, தனித்து போட்டியா?ஓட்டெடுப்பு நடத்த விஜயகாந்த் திட்டம்,Vijayakanth plan to conduct vote for Alliance or Independent contest in Lok sabha  election

லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதா, தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து, கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, சூடுப்பட்ட பூனையாக மாறியுள்ள தே.மு.தி.க., அந்த காயத்திற்கு மருந்துபோட, லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆட்சியில், எலியும், பூனையுமாக இருந்தவர்கள், எதிரிக்கு எதிரி நண்பன் என, ஒன்றிணைவார்கள் என்றும் கூறப்பட்டது.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., ஒன்பது சீட்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும், பல மாதங்களாக தகவல் வலம்வருகிறது. இந்நிலையில், மதுரையில் பேட்டியளித்த அழகிரி, "வழக்கை சந்திக்க முடியாத விஜயகாந்த் எப்படி முதல்வர் ஆக முடியும்' என, கூறினார்.

இது தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கும், அவரது கட்சியினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில், மதுரை விமான நிலையத்தில், விஜயகாந்தும், அழகிரியும் சந்தித்து பேசிக்கொண்டனர். இருப்பினும், அழகிரியின் கருத்தால், விஜயகாந்த் மற்றும் அக்கட்சியினரின் கோபம் குறையவில்லை.சமீபத்தில், தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற விஜயகாந்த், லோக்சபா தேர்தலில் தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது தி.மு.க.,வினருக்கு மட்டுமின்றி, லோக்சபா தேர்தலில் கூட்டணி வரும், வருமானத்திற்கும் வழி பிறக்கும் என்றிருந்த தே.மு.தி.க.,வினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், விஜயகாந்திடம் நேரடியாகவே எடுத்துரைத்துள்ளனர். ஆனால், அவர் தனது மனநிலையை மாற்றிக்கொள்ளவில்லை என, தெரிகிறது.இந்த நிலையில், இம்மாதம், 25ம்தேதி, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், தே.மு.தி.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.கட்சியில் பலரும், கூட்டணி என்ற கனவில் உள்ள நிலையில், தலைவர் மட்டும் தனித்துபோட்டி என்று அறிவித்துள்ளது கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதற்கு முடிவு கட்டும் வகையில், கூட்டணியா, தனித்து போட்டியா என்ற ஓட்டெடுப்பை, இக்கூட்டத்தில் நடத்த விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (124)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
king Arul - Karur,இந்தியா
17-ஜன-201316:03:54 IST Report Abuse
king Arul எல்லா நண்பர்க்கும் நன் சொலுறது என்னன்னா? நீங்க எல்லாம் நனக்குற மாதிரி விஜயகாந்த் சாதாரணமான ஆல் இல்ல அவர் இருக்குற னரதுக்கும் அவர் சொலுற பஞ்சுக்கும் சம்பதமே இல்ல என்ன புரியுதா அவருடைய மக்கள் பனி அதாவது இல்லாதவர்க்கு அவர் செய்யும் உதவி யார் செய்வர்கள் இனக்கு நாம நாடுள்ள யாருகிட்ட பணம் இல்ல சொலுங்க ரஜினி விஜய் ,அஜித் ,விக்கரம் ,வடிவேலு விவேக் ,சந்தானம் ,ஏன் கருணாநிதி ,ஜெயலலிதா ,ராமதாஸ் ,ஜிகே வாசன் ,ப.சிதம்பரம் ,யாருக்கிட இல்ல எல்லாருக்கும் குடுக்க மனம் வராது இவர் அரசியல்ல இல்லாதபோ இருந்து அவர் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணத்த இனமும் செலவ்வு பனுறாரு ஒரு அண்ணன் சொன்னாரு வடிவேலுவா என் இப்படி ஓதிக்கிடங்கனு நன் சொல்லட்டுமா உங்களுக்கும் எனக்கும் சன்டேன்னா ந உங்கள நேரடிய திட்டுவேன் இல்ல என் விட்டுக்கு வரவங்ககிட சொல்லி சொல்லி திட்டுவேன் அட அப்படிம் இல்லன எங்க விதில உங்கள திட்டுவேன் அத விட்டுட்டு உங்கள மைக் போட்டு மாவட்டம் மாவட்டம் மா திட்டுவேன் இது அவர் செங்க அதிக்கப்ரச்ங்கி அல்லவா அவரா அவரா நடிக்க வேன்னணு சொனறு அவருடைய விசுவசிங்க அவரா எந்த படத்துக்கும் நீ வேணான்னு சொலுரங்க . அப்புறம் அவர இனொரு அண்ணன் அவருக்கு வைட்டமின் ப வேணுன்னு குட்டனி வைக்குரருன்னு சொணங்க அவர் அதுக்கு அசை பட்டுருந்த அவர் முதன் முறைய கட்சி அரம்பிச்சபவே கட்சி காரங்ககிட்ட வசூல் வேட்டைய தொடங்கி இருப்பார் இபோ வரைக்கும் வசூல் வேட்டைய ஆரம்பிக்கத ஒரே கட்சி எதுன்ன அது தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் தயா அப்புறம் அவர் குட்டனிக்காக அவர் அலையல அவர தேடித்தான் தமிழ் நட்டு தலைவர்கள் அல்யரங்க மறுபடியும் எங்க தலைவர பத்தி தப்பா சொல்லாதிங்க எனோட கருத்து எனன்ன அந்த அம்மாக்கு அப்பு வைக்கறதுக்கு நீங்க கண்டிப்பா அந்த கருணாநிதி அய்யா ஓட குட்டனி வைக்கிறது தப்பில்லன்னு தோணுது விஜயகாந்த் அண்ணா நன்றி உடன் அருள் (கரூர்)வேலைய்தம் பாளையம்
Rate this:
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
16-ஜன-201318:48:31 IST Report Abuse
m.viswanathan ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட கலைஞர் என்னும் மக்களோடு கூட்டனி அமைக்க பாடுபடும் தரங்கெட்ட அரசியல் வரிசையில் விஜயகாந்த் சேர விரும்புகிறார் போலும். ஆரியக்கூத்து ஆடினாலும் தாண்டவகோனே காசு காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே
Rate this:
Share this comment
Cancel
Samaniyan - Doha,கத்தார்
16-ஜன-201318:33:11 IST Report Abuse
Samaniyan தமிழ் சினிமாவின் முடிசூடா நகைச்சுவை மன்னன் வடிவேலு.. - நீண்ட நாட்களாகவே வடிவேலு பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்று பொங்கல் கொண்டாட்டங்கள் என்ன கூத்து நடக்கிறது என்று சேனல்கள் பக்கம் சும்மா ஒரு ரவுண்ட் வந்தேன்.. எனக்குத் தெரிந்து வடிவேலு எந்த டிவியிலும் காட்டப்படவில்லை. இதே ஒரு காலத்தில் எந்தச் சேனலை திருப்பினாலும் வடிவேலுவின் பேட்டிகள் தான் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் இன்று எந்தப் பட வாய்ப்பும் வழங்கக்கூடாது என்ற மறைமுக மிரட்டலில் திரைத்துறை திட்டமிட்டு ஒரு நல்ல நடிகனை புறக்கணிக்கிறது என்பது எவ்வளவு கொடுமையானது. தமிழ் சினிமா உலகம் என்.எஸ்.கே., சந்திரபாபு.. சுருளி ராஜன், டி.எஸ்.பாலையா, வி.கே.ராமசாமி, நாகேஷ், கவுண்டமணி.. செந்தில் எனப் பல நகைச்சுவை நடிகர்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் கொடிகட்டி பறந்திருக்கிறார்கள். ஆனால் சமகாலத்தில் என்னை மிகவும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு தான். கலைகளில் மிக முக்கியமானது நகைச்சுவை. ஒருவனை எளிதில் அழவோ கோபமோ பட வைத்துவிட முடியும். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதல்ல. கதாநாயகர்களை விட நகைச்சுவை நடிகர்களுக்கு உடல்மொழியும் முகபாவனையும் மிக முக்கியம். இவ்விரண்டையும் தனது நகைச்சுவையில் வெகு இயல்பாக பயன்படுத்தியவர் வடிவேலு. முக்கியமாக முற்போக்கு என்ற பெயரில் ஊளைச்சத்தம் போடுபவர்களுக்கு மத்தியில் வடிவேலுவின் நகைச்சுவைப்பாணி தனித்துவமானது. கவுண்டமணி செந்திலிடம் உதைவாங்கி நடித்தது உட்பட வடிவேலுவின் ஆரம்பகாலத் துக்கடா நகைச்சுவை காட்சிகளிலும் அவர் தனது தனித்தன்மையுடனே இருந்திருக்கிறார் என்பதைக் காணமுடியும். விவேக்கின் நகைச்சுவையில் ஊருக்கு புத்தி சொல்கிறேன் என்ற பெயரில் வெறும் சவுண்ட் மட்டுமே இருக்கும். பார்வையாளர்களை மட்டம் தட்டுவார். மிமிக்ரி செய்வதற்கு முயற்சி செய்யும் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுக்கான தன்மையே அவரது நடிப்பில் இருக்கும். எம்.ஆர்.ராதா, சுருளி குரலில் பேசியே ஒப்பேத்துவார். உடல்மொழி சுத்தம். விவேக்கிற்குப் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டபோது.. அப்துல் கலாம் ஐயா.. அப்துல் கலாம் ஐயா..’ என்று கூவியதுக்குத் தான் இந்த விருது என்று பலருக்கும் தெரியும். கூடவே அவர் செய்யும் நுட்பமான சாதி அரசியல் அவருக்குப் பக்கபலமாக இருந்தது. ஆனால் வடிவேலு அப்படியான எதையும் நம்பி இயங்காமல் தனது நகைச்சுவையை மட்டுமே நம்பி நடித்தார்.. இன்றைக்கு வடிவேலுவின் காமெடியை நம்பியே பல நகைச்சுவை சேனல்கள் வாழ்கின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் வடிவேலுவின் வசனம் அத்துப்படி. இதை விட ஒரு நகைச்சுவை நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை அளித்துவிட முடியும். உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளிச்சட்னியா..” என்ற வடிவேலுவின் நகைச்சுவை வசனம் தான் எவ்வளவு பெரிய அரசியல் தத்துவத்தைச் சொல்கிறது.. வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்குமான மோதல் வெகுசாதாரணமாக முடிந்திருக்க வேண்டியது. ஆனால் வடிவேலுவை தனது கட்சி பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அது பெரிதாக்கப்பட்டது. வடிவேலுவும் விஜயகாந்தை எதிர்க்க விரும்பி திமுகவுக்குப் பிரச்சாரம் செய்தார். ஆனால் இன்று அவ்விரு கட்சிகளும் கூட்டணி பேச்சு நடத்துகிறதாம்.. ஆனால் கருணாவை நம்பி போன வடிவேலு இன்று..? ராஜதந்திரத்தைக் கரைத்துக்குடிக்க நீங்கள் அரசியல்வாதியல்ல இம்சை அரசனே.. புரிந்து கொண்டு மீண்டு வாருங்கள்.. காத்திருக்கிறோம்.. நகைச்சுவை அரசனுக்காக.. :) - கார்ட்டூனிஸ்ட்.பாலா
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
16-ஜன-201315:46:01 IST Report Abuse
Guru இப்போதானப்பா கொஞ்சநாள் முன்னாடி தனித்து போட்டின்னு சொன்னாரு.., அதுக்குள்ள என்ன ஆச்சு
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-ஜன-201317:14:40 IST Report Abuse
Nallavan Nallavan.....விடிஞ்சா போச்சு-ன்னு தமிழ-ல ஒரு சொல்வழக்கு இருக்கே.......
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
16-ஜன-201315:22:46 IST Report Abuse
Kankatharan  இதுதான் தீர்மானம் என்று தீர்மானிக்கப்பட்டபின் ராமதாசு ஐயாவும் 2009ல் அம்மா முன்னிலையில் வாக்கெடுத்து கூட்டணி அமைத்ததாக கதைவிட்டதை தமிழகமக்கள் மறந்திருக்க முடியாது. தாத்தாவும் பல இடங்களில் பொதுக்குழு முடிவெடுக்கும் செயற்குழு முடிவெடுக்கும் என்று பூச்சுத்துவதும் நடந்துதான் வருகிறது. விஜயகாந்த சிலதினங்களுக்குமுன் தனித்துப்போட்டி என்று அறிவித்விட்டு திரும்ப வாக்கெடுப்பு என்று கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை எங்கோ இடிக்கிறது. மலிந்தால் சந்தைக்கு வந்துதான் ஆகவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - Melanikuzhi(Ariyalur-DT),இந்தியா
16-ஜன-201315:07:20 IST Report Abuse
தமிழன் தனித்து நின்றால் வெற்றி
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
16-ஜன-201318:30:14 IST Report Abuse
சு கனகராஜ் அதிமுகவிற்கு தானே ?...
Rate this:
Share this comment
vramanujam - trichy,இந்தியா
16-ஜன-201318:36:38 IST Report Abuse
vramanujamயாருக்கு ?...
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
16-ஜன-201313:38:42 IST Report Abuse
PRAKASH அப்போ வடிவேலு எந்த கூட்டணி ?
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
16-ஜன-201318:29:44 IST Report Abuse
சு கனகராஜ் முக்காடு போட்ட ஐயோ பாவம் அணி ?...
Rate this:
Share this comment
Cancel
anand - Coimbatore,இந்தியா
16-ஜன-201313:12:17 IST Report Abuse
anand விசயராசுக்கு ஆப்பு ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு.. என்னிக்கு கூட்டணி அரசியல்ல புகுந்துச்சோ, அன்னிக்கே தே.மு.தி.க சாயம் வெளுத்தாச்சு.. பிரேமலதா சுதீஷ் எல்லாம் தலைவர்.. மத்த கட்சி-ல செந்த காசு சம்பாதிக்கறதுக்கு ரொம்ப நாள் ஆகுன்னு விசயராசு கட்சில சேந்தவன் எல்லாம் செயலாளர்.. கிழிஞ்சுது பொழப்பு.. தமிழன் பாவம்..
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-ஜன-201317:15:51 IST Report Abuse
Nallavan Nallavanநல்லதுதான்...எந்தக் கட்சியாலும் பிரயோஜனம் இல்ல,,,, எல்லாமே வேஸ்ட்டு-ன்ற முடிவுக்கு சனங்க இன்னும் சீக்கிரம் வருவாங்க...
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
16-ஜன-201313:11:04 IST Report Abuse
villupuram jeevithan அந்த எம்ஜியார் கருணாவுக்கு பிச்சை போட்டார் இன்று இந்த "கருப்பு எம்ஜிஆர்?" கருணாவிடம் பிச்சை கேட்கிறார்?
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-ஜன-201318:38:48 IST Report Abuse
Nallavan Nallavanஅப்பாவிக் கோழிக்குஞ்சு பாம்பின் படமெடுத்த தலைக்கு அடியில் நிழல் தேடுவது போலத்தான் விஜியின் கதி ஆகுமோ?...
Rate this:
Share this comment
Cancel
Vaal Payyan - Chennai,இந்தியா
16-ஜன-201312:42:24 IST Report Abuse
Vaal Payyan தி மு க வோட கூட்டணி வெச்சா சன் டிவி லேயும் கே டிவி லேயும் கலைஞர் டிவி லேயும் கேப்டன் படம் போடுவாங்க .. வேணாம் ஜி நீங்க தனித்தே நில்லுங்க ... ஆண்டாள் கிட்ட application போடுறீங்க ஆனா அம்மா கிட்ட எந்த application நும் போட மாட்டேனு அடம் பிடிக்குறீன்களே ....
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
16-ஜன-201318:29:06 IST Report Abuse
சு கனகராஜ் எப்பவும் சன் டிவி கே டிவி ல விஜயகாந்த் படம் போட்டுகிட்டு தான் இருக்காங்க ஆனா கலைஞர் டிவி ல போட மாட்டங்க கூட்டணி உறுதி ஆனா போடுவாங்க ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை