I have more interest than Karunanidhi says Jayalalithaa | கருணாநிதியை விட அதிக அக்கறை எனக்கு உண்டு: ஜெயலலிதா ஆவேசம் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதியை விட அதிக அக்கறை எனக்கு உண்டு: ஜெ., ஆவேசம்

Added : ஜன 15, 2013 | கருத்துகள் (169)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கருணாநிதியை விட அதிக அக்கறை எனக்கு உண்டு: ஜெ., ஆவேசம்,I have more interest than Karunanidhi says Jayalalithaa

கூடலூர்:""திருவள்ளுவரை பற்றிய அக்கறை, கருணாநிதியை விட எனக்கு அதிகம் உண்டு. பலரும் வெறுக்கும்படி பேசும் கருணாநிதியை, மக்கள் இகழ்வர்,'' என, தேனி லோயர்கேம்பில், பென்னி குக் மணி மண்டப திறப்பு விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அவரது பேச்சு: பென்னி குக், குடும்ப சொத்துக்களை விற்று, முல்லைப்பெரியாறு அணையை கட்டினார். வலுவாக கட்டப்பட்ட இந்த அணை எம்.ஜி.ஆர்., மற்றும் எனது முந்தைய ஆட்சிகளில் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் வலுப்படுத்தப்பட்டது.அணை நீர்மட்டம் 152 அடிக்கும் மேல் உயரும் போது, 10 மதகுகள் வழியாக ஒரு வினாடிக்கு 86 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற, 3 மதகுகள் கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் அரசு சார்பில், வலுவான வாதங்கள் வைக்கப்பட்டன. மத்திய நீர்வள அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவும் தன் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது. இதன்படி அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், எஞ்சிய பணிகள் முடிந்ததும், 152 அடியாக உயர்த்தவும் சுப்ரீம் கோர்ட் 2006ல் தீர்ப்பளித்தது. அணையை பாதுகாக்கும் பொருட்டு,மத்திய தொழில் பாதுகாப்பு படையை அப்பகுதிக்கு அனுப்பவும், 142 அடியாக நீர் மட்டத்தை உயர்த்தவும், எஞ்சிய பணிகள் முடிந்ததும், 152 அடியாக உயர்த்தவும் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீதும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெரியாறு அணையை விட பழமைவாய்ந்த கொள்ளிடம் ஆற்றின் மீது கல்லணை கட்டப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணை, இன்னும் பயனளிக்கிறது. இது, பொறியியல் அற்புதம். கரிகால் சோழனின் சேவையை போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்கப்படும். விழாவில் பங்கேற்க, "பென்னி குக் பேரன் ஸ்டூவர்ட் சாம்சன் வருவார்,' என அறிவித்திருந்தேன். தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. தேனி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு பென்னிகுக் பெயர் சூட்டப்படும். அரசு பஸ்களில் திருக்குறளை அழித்து விட்டு, தன் வாசகங்களை எழுத வைத்த கருணாநிதி, "கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பராமரிக்கப்படவில்லை,' என இல்லாத ஒன்றை கூறி, போராட்டம் நடத்துவதாக அறிவித்தார். திருவள்ளுவர் பெயரில் விருதை அறிமுகப்படுத்தியது, அ.தி.மு.க., அரசு. திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது, திருவள்ளுவர் பெயரில் பல்கலை துவங்கியது அ.தி.மு.க., ஆட்சியில் தான்.
கன்னியாகுமரியில், விவேகானந்தர் பாறைக்கு அருகில் சிலை அமைக்க முடிவு எடுத்து, அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் முன்னிலையில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., 1979 ஏப்., 15 ல் அடிக்கல் நாட்டினார். என் முதல் ஆட்சியில், 1.28 கோடி ரூபாய், சிலை அமைக்கும் பணிக்காக விடுவிக்கப்பட்டது.

"திருவள்ளுவர் சிலை திறக்க தான் மட்டுமே காரணம்,' என கருணாநிதி கூறுவது, "முழுபூசணிக்காயை சோற்றில் மறைப்பது' போல உள்ளது. சிலைக்கு ரசாயனக் கலவை பூசுவது நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். அதன்படி 2004, 2008 ல் பூசப்பட்டது; தற்போது இதற்கான பணிகள் நடக்கின்றன. "கடந்த 2011ல் ஆட்சி மாறிய பின், ஒன்றரை ஆண்டுகாலமாக ரசாயனக் கலவை பூசவில்லை,' என, கருணாநிதி கூறுவது விஷத்தனம். திருவள்ளுவரை பற்றிய அக்கறை, கருணாநிதியை விட, எனக்கு அதிகம் உண்டு. பலரும் வெறுக்கும்படி, பயனற்ற சொற்களை பேசும் கருணாநிதியை எல்லோரும் இகழ்வர். இவ்வாறு பேசினார்.

விழாவில், தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். பின், மணி மண்டபத்தை திறந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த போட்டோக்களை முதல்வர் பார்வையிட்டார்.அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.


ருசியான காபி எப்படி :

பென்னிகுக் மணிமண்டபம் திறப்பு விழாவிலும், முதல்வர் ஜெ., வழக்கம் போல, கதை மூலம் துணிச்சல், மன உறுதி குறித்து விளக்கினார்: ஒரு திருமணமான பெண், தன் தாயை தேடி வந்தார். அவர் முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தன் கஷ்டங்களை தாயிடம் தெரிவித்தார். ""இதிலிருந்து எப்படி விடுபட போகிறேன்?'' என கண்கலங்கினார். பொறுமையாக கேட்ட அந்த தாய், மகளை சமயலறைக்கு அழைத்து சென்றார். மூன்று பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி, எரியும் அடுப்பில் வைத்தார். ஒன்றில் கேரட், ஒன்றில் முட்டை, மற்றொன்றில் காபி தூள் ஆகியவற்றை கொதிக்க வைத்தார்.சிறிது நேரம் கழித்து, பாத்திரத்தை கீழே இறக்கி வைத்தார். கேரட், முட்டை எடுத்து வெளியில் வைத்தார். காபியை ஒரு பாத்திரத்தில் ஊற்றினார். ""மகளே இதெல்லாம் தெரிகிறதா,'' என
கேட்டார். காரட்டை தொட்டு பார்க்கும்படி கூறினார். மகளும் தொட்டு பார்த்து, ""கேரட் மென்மையாகவும், முட்டை கடினமாகவும், காபி சுவையாகவும் இருக்கிறது,'' என்றார்.""எதற்காக இந்த வேடிக்கை,'' என்றார் மகள். அதற்கு தாய், ""கேரட், ஆரம்பத்தில் எவ்வளவு கடினமாக இருந்தது; தற்போது மென்மையாக மாறி விட்டது. முட்டை கடினமாக மாறி விட்டது. சாதாரண தண்ணீர், சுவைமிக்க காபியாக மாற்றி விட்டது. வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பதும், கொதிக்க வைக்கிற மாதிரி தான். இதை நாம் எந்த ரூபத்தில் சந்திக்க போகிறோம் என்பதில் தான் விஷயம் இருக்கிறது,'' என விளக்கினார் தாய்.மகள் முகத்தில் தெளிவு பிறந்தது; கண்களை துடைத்து கொண்டாள்.இவ்வாறு ஜெ., கதையை முடிக்க, பலத்த ஆரவாரம்.


விழாத்துளிகள்


*விழாவில், பங்கேற்க கோடநாடு எஸ்டேட்டிலிருந்து ஹெலிகாப்டரில், காலை 10.55 க்கு புறப்பட்ட ஜெ., விழா மைதானம் அருகில், பகல் 11.55 மணிக்கு வந்திறங்கினார்.
*விழாவில் முனைவர் முருகனுக்கு திருவள்ளுவர் விருது, ராமமூர்த்திக்கு பாரதியார் விருது, பேராசிரியர் கந்தசாமிக்கு பாரதிதாசன் விருது, இந்திய கம்யூ., மாநில செயலாளர் தா.பாண்டியனுக்கு அம்பேத்கர் விருது, பிரேமநந்தகுமாருக்கு திரு.வி.க., விருது, முனைவர் ராஜகோபாலனுக்கு கி.ஆ.பெ., விசுவநாதம் விருது, மணிமொழியனுக்கு அண்ணா விருது, முன்னாள் எம்.பி., நசிங்காரவடிவேலுக்கு காமராஜர் விருது, பேராசிரியர் சமரசத்திற்கு பெரியார் விருதுகளை, முதல்வர் வழங்கினார். வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
*மணிமண்டபத்தை திறந்து வைத்த முதல்வர், காரில் சென்று, மணிமண்டபம் மற்றும் அதனுள் அமைக்கப்பட்ட சிலையை திறந்து, போட்டோக்களை பார்வையிட்டார்.
*கேரள செய்தியாளர்களும், உளவுத் துறையினரும் அதிகளவில் வந்திருந்தனர். முதல்வர், கேரள அரசுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் அவர்கள் நிகழ்ச்சிகளை கண்காணித்து விட்டு திரும்பி சென்றனர்.
*முதல்வரின் வயதை குறிப்பிடும் வகையில், 65 கும்பங்களுடன் பெண்கள் வரவேற்றனர்.
*விழா பந்தல், மணிமண்டபம் மற்றும் மெயின் ரோட்டில், அவசர மருத்துவ மையம் அமைக்கப்பட்டிருந்தது. விழா முடிந்ததும், கார்கள் ஒன்றையொன்று முந்தி செல்ல முயன்றதால், குமுளி-தேனி ரோட்டில் போக்குவரத்து மூன்று மணி நேரத்திற்கும் மேல், பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள்அணிவகுத்து நின்றன.
*விழா நடந்த நிலையில் தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சுந்தரராஜன் வந்தார். இருக்கையை தேடிக் கொண்டிருந்த அவரை, அ.தி.மு.க., நிர்வாகிகள் பவ்யமாக அழைத்து சென்று அமர வைத்தனர். தே.மு.தி.க., எம்.எல்.ஏ., க்கள் அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பனும் பங்கேற்றனர்.
*மணி மண்டபத்தில், "பென்னிகுக் தென்மாவட்ட நற்பணி மன்றம்' சார்பில், சின்னமனூர் நிர்வாகிகள் நால்வர், முடி காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (169)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanjaithamilan - QATAR,இந்தியா
19-ஜன-201311:11:53 IST Report Abuse
Thanjaithamilan அவர் இப்பொழுதுதான் மொட்டை தலையில் முடி முளைக்க மூலிகை தைலம் தேடி கொண்டிருக்கிறார். ஏன் அவரை போய் நீங்கள் தேடுகிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
18-ஜன-201302:21:50 IST Report Abuse
Matt P தனக்கு வள்ளுவர் மேல் அதிக அக்கறை இருப்பதாக கூறி கொள்ளும் கருணாநிதி தன் குடும்பத்தில் ஒருவருக்கு கூட வள்ளுவன் என்று பெயர் வைக்கவில்லை. ..வள்ளுவர் கோட்டம் கண்டார்...சிலை அமைத்தார்..குறளோவியமும் வடித்தார். ..தான் தலைவனாக நினைக்கும் அண்ணாதுரை பெயரோ,அவர் புகழும் பாரதி பெயரோ காந்தி பெயரோ கூட குடும்பத்தில் யாருக்கும் இடவில்லை...கண்ணதாசன் அவர் தம் பிள்ளைகளுக்கு அண்ணா பெயரும் காந்தி பெயரும் வைத்துள்ளார். (அண்ணா கண்ணதாசன்,,காந்தி கண்ணதாசன்) கருணாநிதி ரஷ்ய தலைவர் ஸ்டாலின் பெயரும் பட்டுகோட்டை அழகிரி பெயரும் மட்டுமே வைத்துள்ளார். ..இவர் குடும்ப உறுப்பினர்கள் நிறைய இருந்தாலும் எல்லோருக்கும் இவர் மனைவி பெயரும் இவர் பெயரும் கருணாவின் அம்மா(பேத்திக்கு அஞ்சுக தாய்) பெயரும் தான் இருக்கிறது. உதயசூர்யன் பெயரும் (உதயநிதி,ஆதித்யா)இட்டுள்ளார். ..peryavarkal பெயர்கள் இட்டு அவர்கள் பெயரை கெடுப்பதை விட தன பெயர இடப்பட்டு தன வழியில் கெட்ட பெயர் வாங்கட்டும் என்பதால் இருக்குமோ..
Rate this:
Share this comment
Cancel
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
17-ஜன-201313:02:34 IST Report Abuse
Tamilarasu Rajakkili ஆ... வேஷம் சரிதான்... எல்லாம் 2014 ல் வெளுத்துவிடும்....
Rate this:
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
17-ஜன-201310:21:17 IST Report Abuse
p.saravanan ஐந்து மாவட்ட மக்கள் பயன் பெரும் முல்லை பெரியார் அணை கட்டிய தியாக செம்மல் பென்னி கூக் அவர்களுக்கு சிலை திறந்தமைக்கு தமிழக மக்களின் சார்பாக கோடான கோடி நன்றியினையும் , நெஞ்சார்ந்த நன்றியினையும் தமிழக முதல்வர் அவர்களுக்கு தெரிய படுத்தி கொள்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
விஜய் - chennai,இந்தியா
17-ஜன-201301:09:17 IST Report Abuse
விஜய் அப்படி அக்கறை இருந்தா ஜாதிப் பிரச்சனை உண்டாக்குற பொலிட்டிகல் பவர் ஸ்டார் டாக்டர். ராமதாச கைது செய்ய முடியுமா ? இல்ல தொட்டுதான் பாக்க முடியுமா ?
Rate this:
Share this comment
Cancel
Magesu - Thanjavur  ( Posted via: Dinamalar Android App )
17-ஜன-201300:02:09 IST Report Abuse
Magesu கருணைநிதி்க்கு தன் மக்கள் மீது அக்கறை உண்டு என்பதை உலகம் அறியும்
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
16-ஜன-201318:02:07 IST Report Abuse
Yoga Kannan வாழ்ந்த வள்ளுவனுக்கு .... வாழுகின்ற வள்ளுவன்.....சூட்டுகின்ற.... முதல் மகுடம்... கோவை -செம்மொழி ... அதுவே .... ஓவ்வொரு தமிழனின்... பொன்மொழி... உலக தமிழனுக்காக குரல் ...கொடுப்பதிலே ... உன்னை-விட்டால் வேறு... மற்றவை அனைத்தும் ... இரவில் -மில்லிரும் மின்மினிகலெ... நீயோ உதய சூரியன்.... உன் .... உன்னதம் ஓவ்வொரு ... தமிழனுக்கும் .... புரியும் .... ஏலனம்....செய்பவரையும்.... வசை பாடிகளையும்.... இன் முகத்துடன் ....ஏற்றுக்கொள்ளும்.... ஆரூர் தந்த பேரருளே.... நீ ஆண்ட கண்டத்தை .... இருண்ட கண்டமாக்கியவரின் எடுபிடிகளின் ஏளனத்தை... பார்த்தாயா....? காய் கனிகள் கொடுத்த ... மரம் -தானே... அதிக... கல்லடி படும் ......
Rate this:
Share this comment
Cancel
Abdul rahim - Thanjavur,இந்தியா
16-ஜன-201317:23:05 IST Report Abuse
Abdul rahim ஏனய்யா நாட்டை குட்டிசுவரக்குவர்களுக்கெல்லாம் வக்காலத்து வான்குறேங்கய்யா
Rate this:
Share this comment
Cancel
Abdul rahim - Thanjavur,இந்தியா
16-ஜன-201317:20:06 IST Report Abuse
Abdul rahim தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லாத இரண்டு பேர் 1) கருனாநீதி 2) ஜெயலலிதா
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜன-201300:06:06 IST Report Abuse
தமிழ்வேல் நான் தப்பிச்சேன்......
Rate this:
Share this comment
Cancel
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
16-ஜன-201317:19:08 IST Report Abuse
மோனிஷா கருணாநிதியை விட அதிக அக்கறை எனக்கு உண்டு: ஜெ., ஆவேசம்// கண்டிப்பாக. மக்களை குடிகாரர்களாக்கி, கோமாளிகளாக்கி தன கூட்டம் கூத்தடிக்க கடுமையாக உழைக்கும் நீங்கள் இருவருமே அதிக அக்கறை கொண்டவர்கள் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை