புதுடில்லி : ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடக்கவுள்ள, காங்கிரஸ் தலைவர்கள் சிந்தனை கூட்டம், முழுக்க, முழுக்க ராகுலின் ஆதிக்கம் நிறைந்ததாக அமையப் போவது நிச்சயமாகியுள்ளது.கட்சியின் இளைஞர் அணி மற்றும் மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள், அதிகம் பேர் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மூத்த நிர்வாகிகள் பலரையும் கழித்துக் கட்டுவதில், காங்கிரஸ் மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.
வரும், 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், பல முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, "சிந்தன் சிவர்' என, அழைக்கப்படும், காங்கிரஸ் தலைவர்களின் சிந்தனை கூட்டம், வரும், 18 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தை தொடர்ந்து, 20ம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் பொதுச் செயலர் ராகுல் உட்பட, முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் இந்த மூன்று நாள் கூட்டம், நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.கட்சிக்கும், மத்திய அரசுக்கும் பெரும் சவாலாக இருக்கும் தெலுங்கானா விவகாரம், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறிய செயல்கள், மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணிகள் பற்றி, இந்த மூன்று நாள் கூட்டங்களிலும் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
அதேநேரத்தில், இந்த சிந்தனை கூட்டத்தில், ராகுல் மற்றும் அவரது ஆதரவாளர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் வகையிலான, சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.இதற்கு முன், 1998 மற்றும் 2003ல் நடந்த சிந்தனை கூட்டங்களுக்கு, இளைஞர் காங்கிரசிலிருந்து வெகுசிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு, இளைஞர் பட்டாளத்திற்கு அதிக அளவில், அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது. அதனால், கூட்டத்தில் பங்கேற்போரில், பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்களாக இருப்பர் என, நம்பப்படுகிறது. காங்கிரசின் இளைஞர் அணி மற்றும் மாணவர் அமைப்புகளுக்கான, அகில இந்திய பொதுச்செயலாளர் பொறுப்பை, ராகுல் கவனிப்பதால், இந்த பிரிவுகளில் இருந்து, 350 பேரை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கான அனுமதி சீட்டு, டில்லியில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், கடந்த சில நாட்களாக வழங்கப்படுகிறது. தங்களுக்கான அனுமதி சீட்டை, வாங்க வரும் மூத்த நிர்வாகிகள் பலரும், பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைகின்றனர்.அகில இந்திய அளவில் மற்றும் மாநில அளவில் நிர்வாகிகளாக உள்ள பலருக்கும், அனுமதி சீட்டு மறுக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு செலுத்த வேண்டிய, பழைய நிலுவை தொகை, முந்தைய கூட்டங்களில் பங்கேற்றதற்கு செலுத்தியிருக்க வேண்டிய அனுமதி கட்டணத்தை செலுத்தாதது போன்ற காரணங்களைக் கூறி, இவர்களுக்கு அனுமதி சீட்டு மறுக்கப்பட்டுள்ளது.ராகுலின் அறிவுரைப்படி, இளைஞர் மற்றும் மாணவர் பிரிவு பிரதிநிதிகளுக்கு, அதிக அளவில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருமே, 45 வயதுக்கு குறைவானர்கள். கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள, இளைஞர்களில் பெரும்பாலானவர்கள், காங்கிரசை ஓரளவுக்கு பலப்படுத்த முடியும் என்று நம்பப்படும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.