பெங்களூரு:கர்நாடகாவில், செல்வாக்கு மிக்க மடத்தின் தலைவராக, ஐ.ஐ.டி.,யில் தங்க பதக்கம் பெற்றவர் நியமிக்கப்பட்டார்.ஒக்கலிகா சமுதாயம், கர்நாடக மாநிலத்தின் பெரும்பான்மை சமுதாயங்களில் ஒன்று. இந்த சமுதாயத்தின் தலைவராக விளங்கியவர், ஆதிசுஞ்சனகிரி மடத்தின் தலைவர், பாலகங்காதரநாத சுவாமி. கடந்த ஞாயிறன்று, சுவாமி பாலகங்காதரநாதர் திடீரென இறந்தார்.
பல மாநிலங்களில், 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை கொண்டுள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்தின் அடுத்த தலைவராக, நிர்மலானந்தர், 43, என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மடத்தின் தலைவர், மறைந்த, பாலகங்காதர சுவாமி எழுதி வைத்த, உயில், தனியார் வங்கியின், லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த போது, நிர்மலாந்தா தான், அடுத்த தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என, பாலகங்காதரநாத சுவாமி எழுதி வைத்திருந்தார்.
இதையடுத்து, மடத்தின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்ட சுவாமி நிர்மலானந்தர், தன் ஆயுள் காலம் வரை, மடத்தின் தலைமை பொறுப்பையும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளையும்
நிர்வகிப்பார்.இவர், தும்கூர் மாவட்டத்தின், சீர்னஹள்ளி என்ற இடத்தில், நடுத்தர வசதி கொண்ட குடும்பத்தில், 1969ம் ஆண்டு பிறந்தவர். நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான, சென்னை, ஐ.ஐ.டி.,யில் படித்து, தங்க பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒன்றும் முடக்கப்படவில்லை. விஞ்ஞானமும் மெய்ஞானமும் வளர படித்தவர்கள் கையில் மத நிறுவனங்கள் வருவது நல்லது வெறும் மதக் கல்வி மட்டும் கற்றவர்கள் தலைவர்களாக உள்ள இயக்கங்கள் பெரும்பாலும் தவறான பாதைக்கும், பழைய வாதத்துக்கும் மட்டுமே வழி வகுத்துவிட்டன விஞ்ஞானியான அப்துல் கலாம், பொருளியல் பேராசிரியர் முரளி மனோகர் ஜோஷி ,ஐ ஐ டி பட்டதாரி அரவிந் கேஜ்ரிவால் ஆகியோர் சமூக சேவையாற்றவில்லையா? பொது சேவைக்கு படித்தவர்கள் வரத் தயங்குவதால்தான் நித்தி, மஞ்சத்துண்டு ,சோனியா போன்றவர்கள் கையில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.இந்த மடம் பற்பல அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை நடத்துகிறது இப்படிப்பட்டவர்களை வரவேற்ப்போம்...
பிற்பட்த்தப்பட்ட சமுதாயத்தில் ஒருவர்கூட கிடைக்கவில்லையா?அல்லது இது ஒரு அரசியல் தந்திரமா? இன்று இந்த நாட்டில் மேல்தட்டு மக்கல் மட்டுமே பெரிய பதவிக்கு வர தகுதி என்ன என்பதை அவர்களே நிர்ணயித்து விடுகிறார்களே இது நியாயமா?மடம் என்பது பொது மக்களுக்கு சேவை செய்வதற்காக பலதரப்பு மக்கள் கொடுத்த சொதுக்லகளை இன்று ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டுமே பயன்பெறும் வகையில் நடக்கிறேதே இதை என்ன செய்ய?
கந்தன்.சென்னை ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.