புதுடில்லி: ""சமையல் காஸ் மற்றும் டீசல் விலைகளை உயர்த்துவது குறித்து, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை,'' என, மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி கூறினார். மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில், சட்டபை தேர்தல் நடப்பதால், விலை உயர்வு குறித்த முடிவை வெளியிடுவதற்கு மத்திய அரசு தயங்குவதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரூ.1.60 லட்சம் கோடி இழப்பு
சமையஸ் காஸ், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றை, பொதுமக்களின் நலன் கருதி, மானிய விலையில் மத்திய அரசு சப்ளை செய்கிறது. இதனால், நாட்டில் உள்ள, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுஉள்ளது."இந்த இழப்பு, விரைவில், 1.60 லட்சம் கோடி ரூபாயை எட்டும்' என, கவலை தெரிவித்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், "இந்த இழப்பை சரிக்கட்டும் வகையில், டீசல், சமையல் காஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டும்' என, மத்திய அரசை, வலியுறுத்தி வருகின்றன.
"இன்னும் முடிவு எடுக்கவில்லை'
இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட, கேல்கர் கமிட்டி, "டீசல் விலையை, லிட்டருக்கு, நான்கு ரூபாயும், மண்ணெண்ணெய் விலையை, லிட்டருக்கு, இரண்டு ரூபாயும், சமையல் காஸ் விலையை, சிலிண்டருக்கு, 50 ரூபாயும் உயர்த்த வேண்டும்' என, பரிந்துரைத்துள்ளது.ஆனாலும், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, விலைகளை உயர்த்துவதற்கு, மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, நேற்று கூறியதாவது:சமையல் காஸ், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்துவது குறித்து, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த முடிவு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது; என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது பற்றி, மீடியாக்களிடம் தெரிவிக்க முடியாது.
பெட்ரோலிய பொருட்களின் விலையில் மாற்றம் செய்வது குறித்து, கேல்கர் கமிட்டி சார்பில், பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதை, அரசு ஆய்வு செய்து வருகிறது. மானிய விலையில் வழங்கப்படும், சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஆறிலிருந்து, ஒன்பதாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றிய தகவலை, இப்போது தெரிவிக்க முடியாது.
"வாய் திறக்க மாட்டேன்'
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கான, சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த விவகாரம் குறித்து, இப்போது நான் வாய்திறந்தால், தேர்தல் கமிஷனிடமிருந்து நோட்டீஸ் வரும். அதற்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும்.இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 35 பைசா உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளையும், மத்திய அரசு, எப்போது வேண்டுமானாலும் உயர்த்தி, அறிவிப்பு வெளியிடலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆனாலும், தற்போது, மூன்று மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பது, தேர்தல் முடிவுகளில், காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இப்போதைக்கு எந்த முடிவையும் எடுக்காது என்றும், டில்லியில் பேச்சு அடிபடுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி முக தான் முக்கிய காரணம் அங்கே விலையை உயர்த்துவதற்கு கையெழுத்து போட்டுவிட்டு இங்கே வந்து ஆர்ப்பாட்டம் என்பார்கள் பிறகு சில நாட்கள் சென்ற உடன் மாநில அரசை குறை கூறுவார்கள் இது இவர்களுக்கு வழக்கமான ஒன்று மேலும் இந்த விசயத்தில் கருணாநிதி திடீர் திடீர் என்று பல்டி அடிப்பார்
அரசியல் வாதிகளின் சொத்துக்கணக்கை பார்த்து வரிவசூலித்து, கணக்கில் இல்லாத பணத்தை கைபற்றினலே நாடு தானாக உயரும்... அரசியல் வாதிகளை பிடிப்பது யார்... அதிகாரிகள் செல்ல மாட்டார்கள்... காரணம் அவர்களிடம் அதற்க்கு மேல் சொத்துக்கள்.... ஆக நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஒரு கூட்டம் பண முதலைகளாக மாறிஉள்ளது... பலகூட்டங்கள் ஏழைகளாக மாற்றப்பட்டுள்ளது... உழைப்பவன் தெருவில்... கொள்ளையடிப்பவர்கள் உல்லாசத்தில்... நல்ல ஜன நாயக நாடு... பாருங்கள் உதாரணங்களை... பலவருடங்களுக்கு முன் சாதரணமாக இருந்த கட்கரி இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி.... 50 வருண்டங்களுக்கு முன் முரசொலி மாறன் சைக்கிளில் சென்றார் இன்று அவர் குடும்பம் ஆசியாவிலேயே நம்பர் ஓன்....சாதாரண கவுன்சிலர்கள் கோடீசுவரர்கள்...கலெக்ட்டர் ஆபீஸ் பியூன் கார்... பங்களா... வுடன் உல்லாசம்.. உழைத்தவன் தெருவில்... ஏழைகள் மேலும் ஏழைகளாகவும்... பணக்க்கரர்கள் மேலும் பணக்க்காரகளாக கொள்ளை அடித்து வாழ நம் இந்திய நல்ல வசதிகளை செய்துள்ளது....
விலையேற்றத்தை கட்டுபடுத்த முடியலேன்னா அப்புறம் என்ன மா நாவிற்கு மத்தியிலே இருக்கணும் ? நீங்க கொள்ளை அடிக்க விலை எத்துவீங்க அப்புறம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அது இதுன்னு ஏத்திபுட்டு எங்கே தலைலே கை வைபிங்க . ஏன்டா நீங்க விலை ஏத்தும் போது தனியார் நிறுவனத்தில் வேலை செய்யுறவங்களுக்கும் ஒரு 5 % சம்பளம் ஏத்தனும்னு ஒரு சட்டம் போடுங்கலேண்டா .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.