ஹால்டியா: மேற்கு வங்க மாநிலத்திற்கு முதலீடு திரட்டுவதற்காக, முதல்வர், மம்தா பானர்ஜி கூட்டிய, தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை, பெயர் சொல்லி அழைத்தும், பாட்டு பாட சொல்லி வற்புறுத்தியும், மம்தா செய்த அலம்பல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.
குஜராத் முதல்வர், நரேந்திர மோடியின் வழியை பின்பற்றி, பல மாநில முதல்வர்களும், தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை, முதலீட்டை திரட்டுவதற்காக, தொழிலதிபர்கள் மாநாடுகளை கூட்டுவது, சமீப காலத்திய வழக்கமாக உள்ளது.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜிக்கும், தொழிலதிபர் மாநாட்டை நடத்தி, நிதி திரட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதற்காக, மாநிலத்தின் துறைமுக நகரமான ஹால்டியாவின், நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது.நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுக்கு அழைப்பு அனுப் பப்பட்டிருந்தது; மாநாட் டிற்கு, "பெங்கால் லீட்ஸ்' என, பெயரும் வைக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் தொழில் வளம், தொழில்களுக்கான வாய்ப்பு, மாநில அரசு வழங்கும் சலுகைகள் போன்றவற்றை பட்டியலிடுவதற்கு பதிலாக, "மம்தா பானர்ஜியின், "பந்தா'வை காட்டும் நிகழ்ச்சியாகவே அது அமைந்திருந்தது' என, தொழிலதிபர்கள் சிலர் குறைபட்டு கொண்டனர்.
"வயலின் வாசிங்க'
துன்சேரி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் தலைவர், தனுகாவை மேடைக்கு அழைத்து, வயலின் கருவியை இசைக்குமாறு கேட்டு கொண்டார். அவரும், சங்கோஜத்துடன் வயலின் இசைத்து, முதல்வரின் அன்பை பெற்றார்.
ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர்களில் ஒருவரான, சஞ்சீவ் கோயங்கா கையில், "மைக்'கை கொடுத்து, இந்தி பட பாடல் ஒன்றை பாடுமாறு உத்தரவிட்டார், மம்தா. அதை அவர் அரையும் குறையுமாக பாடினார். கூடுதலாக, ரவீந்திரநாத் தாகூரின் பாடல் ஒன்றின் சில வரிகளையும் பாடி, முதல்வரை புல்லரிக்க வைத்தார் அவர்.
"தேவேஸ்வர்... வாங்க...'
ஐ.டி.சி., நிறுவன தலைவர், தேவேஸ்வர் வந்திருக்கிறார் என, தவறாக நினைத்த மம்தா, "ஐ.டி.சி., தேவேஸ்வர் இங்கே வாங்க...' என அழைத்தார். கூட்டத்திற்கு தேவேஸ்வர் வரவில்லை; நிறுவனத்தின் உயரதிகாரி, குருஷ் கிரான்ட் மேடையேறினார்.அவரை பிற தொழிலதிபர்களிடம், "இதே, தேவேஸ்வர், உங்களிடம் சில வார்த்தைகளை பேசுவார்...' என கூறி, "மைக்'கை கொடுத்தார். "மேடம் நான் தேவேஸ்வர் இல்லை; கிரான்ட்...' என, அந்த அதிகாரி கூற, அதை பற்றி கவலைப்படாமல், தேவேஸ்வர் பெயரையே பல முறை, திரும்ப திரும்ப உச்சரித்தார் மம்தா.குரூப் போட்டோ எடுப்பதற்காக, ஒவ்வொரு தொழிலதிபர்களையும் பெயர் சொல்லி அழைத்த மம்தா, "நீங்க இங்கே வாங்க... நீங்க பின்னால் போய் நில்லுங்க...' என, கட்டளைகளை இட்டு, அதிர வைத்தார்."செயில்' நிறுவன தலைவரை அழைக்க, "செயில் எங்கே... இங்கே வாங்க' என உத்தரவிட்டார். என்.டி.பி.சி., நிறுவன தலைவரை அழைக்க, "என்.டி.பி.சி., எங்கே இருக்கிறீங்க...' என, "அன்புடன்' அழைத்தார்.இப்படி மம்தாவின் அலம்பல் அதிகமாக இருந்த கூட்டத்தில் போதுமான முதலீடு திரண்டதாக செய்திகள் இல்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் பின்பற்றி என்று கூறியிருப்பது உங்களது அறியாமையை தான் காட்டி இருக்கிறது.ஆந்திரா முன்னால் முதல்வர் சந்திர பாபு நாய்டு அவர்கள் தான் அவர் ஆட்சி காலத்தில் தொழில் அதிபர்கள் கூட்டத்தை கூட்டி மாநில வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.இன்னும் அவருடைய வழிமுறையைப் பின்பற்ற நிறைய விஷயங்கள் உள்ளன.அவரால் தான் dr .அபுல் கலாம் என்ற விஞ்ஞானி நமது நாட்டின் ஜனாதிபதி ஆக முடிந்தது.நம் தமிழ்நாடும் இவரது திட்டங்களை பின்பற்றினால் பெரிதும் வளர்ச்சி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அண்ணா -வின் பிறந்த நாளன்று கொடும் கைதிகளை விடுவித்தல்,,,, கனவில் இறந்த தலைவர்கள் வந்ததாகவும்,,,, சத்தியம் பெற்றுக்கொண்டதாகவும் கூறுதல்,,,, எப்போதோ இறந்த தலைவர்கள் "என்னிடம் அதைப்பெசினார்கள்....இவ்வாறு அறிவுறுத்தினார்கள் என்று அடிக்கடி காமெடி பண்ணுவது,,,, பகுத்தறிவு பேசிக்கொண்டே "எல்லாம் என் ஜாதகம்" என்று புலம்புதல்,,,, பகுத்தறிவு பேசிக்கொண்டே சொந்த ஊர் அம்மனை வழிபடுதல்,,,, "ராஜீவ் உயிருடன் வந்தால் கூட தனது கொலையாளிகளை மன்னிப்பார்" என்று கூறுதல் இதெல்லாம் கோமாளித்தனங்கள் இல்லை என்றால் நண்பர் திரு. புகழ் அடிக்கடி கூறுவது போல வாசகர்கள் கலைஞரை அபாண்டமாக வம்புக்கு இழுப்பதாகத்தான் அர்த்தம்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.